ADS 468x60

28 January 2021

தடுப்பூசியின் வருகை அனைவருக்கும் பொருளாதார வளர்சியைக் கொண்டுவருமா?

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 வீதம் குறைந்துள்ளது.

•ஆசியா வேகமாக மீண்டு வருவதைக் காட்டுகின்றது.

•நுகர்வோர் செலவு பழக்கம் மாறுகிறது. ஜூலை மாதத்திற்குள் 300 மில்லியனை நோய்த்தடுப்பு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி இலங்கைக்கு வந்துள்ளதனால், விரைவான நோய்த்தடுப்பு மருந்துகள் அறிமுகமாகி வலுவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பிக்கை கொள்ளத் துவங்கியுள்ளோம். குறிப்பாக எமது நாட்டில் ஏற்றுமதிகள் மற்றும் பொருளாதாரத்தின் பிற பகுதிகளில் தொற்றுநோயால் தட்டுத்தடுமாறின. இருப்பினும், கொள்கை வகுப்பாளர்கள், பிரத்தியேகமாக பெரிய அளவிலான பொது தடுப்பூசி வசதிகளை செய்வதற்கான நிதியைப் திரட்டுவதற்கு முனையவேண்டும் எனவும் அதேபோல இந்தத் தொற்றினால் அதிகம் நலிவுற்றுள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உதவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் எனவும் மற்றும் புதிய வைரஸ் உருவாக்கம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வளர்ச்சி வழிகளைக் கட்டமைப்புக்களை கண்டறிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய குறித்த நாடுகளுடனான தடுப்பூசி ஒப்பந்தங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொற்றுநோய்களில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை எழுப்பியிருந்தாலும், புதுப்பிக்கப்பட்ட இந்த கொவிட் அலைகள் மற்றும் வைரஸின் புதிய வகைகள் பலர் மத்தியில் மிகுந்த கவலைகளை ஏற்படுத்துகின்றன. 

இந்தப் பின்னணியில், விதிவிலக்கான நிச்சயமற்ற நிலையில், உலகப் பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் 5.5 வீதமாகவும்;, 2022 ஆம் ஆண்டில் 4.2 வீதமாகவும் வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள சமீபத்திய உலக பொருளாதார அவுட்லுக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நற்செய்தி என்னவெனில், 2021 ஆம் ஆண்டின் தடுப்பூசியின் செயற்பாடு முன்னய ஆய்வுக் கணிப்புடன் ஒப்பிடும்போது 0.3 சதவீதம்வரை திருத்தப்பட்டுள்ளது, இது தடுப்பூசியின் பாதுகாக்கும் செயல்பாட்டை வலுப்படுத்தும் என சொல்லப்படுகின்றது. இதனால் சில பெரிய பொருளாதாரங்களில் கூடுதல் கொள்கை ரீதியான ஆதரவின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் என நம்பலாம். நவம்பர் 2020 இல், ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆரம்ப முடிவுகளுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் மீண்டெழுந்தன. 

இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்கான பொருளாதார மீட்பு 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான சரிவைத் தொடர்ந்து பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், முறைசாரா முறையில் பணிபுரிபவர்கள் மற்றும் நாளாந்த வேலையில் பணிபுரிபவர்கள் மீது கடுமையான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியமையால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சியானது -3.5 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆய்வுக் கணிப்பில் கணிக்கப்பட்டு எதிர்பார்ததனைவிட 0.9 வீதம் அதிகமாகும் (2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எதிர்பார்த்ததை விட வலுவான வேகத்தை இது பிரதிபலிக்கிறது).

மருத்துவ பாதுகாப்பு தலையீடுகளுக்கான முறையான கட்டமைப்பு அணுகுமுறை, புதிய கொள்கை ரீதியான ஆதரவின் செயல்திறன், சர்வதேச வர்த்தக சரிவின் மீதான நடவடிக்கை முன்னெடுப்பு  மற்றும் நெருக்கடிக்குள் பாதுகாப்பாக நாட்டை மீட்டெடுக்கும் கட்டமைப்பு பண்புகள் ஆகியவற்றைப் பொறுத்து, எமது நாட்டின்; மீட்சியின் வலிமை கணிசமாக மாறுபடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பிலிருந்தான ஒட்டுமொத்த நாட்டினையும் மீட்டெடுப்பது உறுதியாக நடைபெறும் வரை கொள்கை நடவடிக்கைகளில்; பயனுள்ள ஆதரவை வலுவூட்டவேண்டும்;, அதற்காக சாத்தியமான உற்பத்திகளை உயர்த்துவதற்கான முக்கிய திட்டங்களை மேம்படுத்துதல், அனைவருக்கும் பயனளிக்கும் சமமான பங்கேற்பு வளர்ச்சியை உறுதி செய்தல் மற்றும் உற்பத்தித்துறையில் குறைந்த கார்பன் பயன்பாட்டு மாற்றத்தை எல்லாவிதத்திலும் விரைவுபடுத்துதல் ஆகியவற்றினை மேற்கொள்ள வேண்டும். 

தொற்றுநோயை எல்லா இடங்களிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால், வலுவான பன்னாட்டுக் கம்பனிகளின் சிறப்பான ஒத்துழைப்பு தேவை. அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுவதனை விரைவுபடுத்துதல், தடுப்பூசிகளின் உலகளாவிய விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் அனைவருக்கும் மலிவு விலையில் சிகிச்சை முறைகளை பெறுவதனை எளிதாக்குவது போன்ற ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களுக்கான நிதியுதவியை மேம்படுத்துவது இத்தகைய முயற்சிகளில் அடஙகவேண்டும். இந்த பிரச்சினை ஏற்கனவே இராஜதந்திர உறவுகளில் உலகளவளாவிய ரீதியில் முறிவுகளை ஏற்படுத்தியுள்ளது, புதிய வைரஸ் மாறுபாட்டால் நாடு தொடர்ந்து பாதிக்கப்படுவதால், தடுப்பூசி விநியோகத்தை நிறுத்துமாறு பணக்கார நாடுகளுக்கு பிரேசில் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பல நாடுகள், குறிப்பாக குறைந்த வருவாயுடன் வளர்ந்து வரும் பொருளாதாரங்களையும் மற்றும் இன்னும் பல நாடுகளில் தங்கி இருத்தலினையும் கொண்ட நாடுகள், தொற்றுநோய்களின் போது மேலும் உயரவிருக்கும் உயர் கடனுடன் நெருக்கடியிலேயே காலடி எடுத்துவைத்திருக்கின்றன. 

இந்த நாடுகளுக்கான சர்வதேச பணப்புழக்கத்திற்கு போதுமான ஏற்பாட்டு அணுகுமுறைகளை உறுதிப்படுத்த உலக சமூகம் இலங்கைபோன்ற நாடுகளுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.; ஏற்படும் பொருளாதார மாற்றத்துக்கேற்ப அந்த நாடு பெற்ற கடனில அந்தந்த நாடுகளுக்கு சாதகமாக கடன் தொகையினை மீளப்பெறுதலை தகுதி வாய்ந்த நாடுகள் கடன் வழங்குநர்களுடன் இணைந்து ஜி 20 ஒப்புக் கொண்ட பொதுவான கட்டமைப்பின் கீழ் தங்கள் கடனை மறுசீரமைக்க வேண்டும், ஆனால் இது சர்வதேச நிதிச் சந்தைகளுக்குக் கடன்பட்டுள்ள இலங்கை போன்ற சில நாடுகளுக்கு மற்றநாடுகளுக்கு இருக்கும் அந்த சலுகை புறக்கணிக்கப்பட்டுள்ளமை உடன்படாமல் இருப்பது கவலை தருகின்றது.

ஆகவே இந்த துடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிப்பதுடன் நின்றுவிடாமல் சென்ற ஆண்டு ஏற்பட்ட சரிவினை வினைத்திறனாக ஆராய்ந்து அதில் இருந்து மீள எமது மனிதவளங்களை எவ்வாறு செயற்திறனாக பயன்படுத்த இருக்கின்றது இந்த அரசாங்கம் என அனைத்து புத்திஜீவிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து நிற்கின்றார்கள். ஆகவே பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றத்தினை செவ்வனே சீர்திருத்தி புதிய பாதையில் நடைபோடும் ஒரு அரசை நாம் விரும்புகின்றோம். 


0 comments:

Post a Comment