ADS 468x60

02 January 2021

அரசாங்கத்துக்கு 2021 இல் இருக்கும் மூன்று சவால்கள்!

இன்று நாம் எமது நாட்டை மற்றும் எமது பிராந்தியத்தினை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமானால், அதற்காக அரசாங்கம் மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவினை ஏற்படுத்தல் அதற்கான சமுக இடைவெளியினை பேணுவதனை கட்டாயமாக்கல் மற்றும் அதற்கான சுகாதார வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துதல் இவற்றுக்கெல்லாம் மேலாக எமது நாட்டு மக்களுக்கு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியினை விரைவாகக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

இந்த முதலாவது அணுகுமுறையுடன் தொடர்புடையதாக அரசாங்கம் தயாரித்துள்ள பல கொள்கைகளால் சமுகத்துக்கிடையேயான குழப்பம் இல்லாமல் செய்யும் ஒரு ஒற்றுமைக்கான ஏற்பாட்டினை அரசாங்கம் பிறந்திருக்கின்ற புதுவருடத்துடன் முன்னெடுத்து ஒற்றுமையினை உறுதிப்படுத்த வேண்டும்.

அனைவரும் எதிர்பார்க்கும மூன்றாவது முக்கியமானதும் சவாலானதுமான விடயம் நாட்டினுடைய பொருளாதார வளர்சியினை எடுத்துச் செல்லுதல். இதில், வரவுசெலவுத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வர்த்தகச் சார்புக் கொள்கைகள் மற்றும் 2021 ஆம் ஆண்டில் அவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கான பல உறுதிமொழிகள் ஆகியவற்றினை நடைமுறைப்படுத்துவதில் வெற்றிபெற்றால் நிச்சயம் அரசாங்கம் பல சவால்களுக்கு விடை கண்டுவிடும். அதில் மீளத் திருப்பிக் கொடுக்கவேண்டிய வெளிநாட்டுக்கடன் மிக முக்கியமானது. இதற்காக பல நீண்டு நிலைத்திருக்கக்கூடிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது இன்றியமையாதது. 


0 comments:

Post a Comment