இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுத் தேர்தலில் அரசாங்கம் பெற்ற வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. அமைச்சரின் சிறப்புரிமைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழு இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
25 November 2024
இதுவரை எதை செய்ய நாடாளுமன்றம் சென்றார்கள்?
இன்று மிகப்பெரிய ஒரு மாற்றத்துக்கான பரீட்சை ஆரம்பம்
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (25ஆம் திகதி) முதல் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பதட்டமில்லாமல் அனைவரும் சித்திபெற முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
விழிப்பாக இருங்கள்: பரீட்சை நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதை மீறினால் 5 வருடங்களுக்கு பரீட்சைகளுக்கு தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
21 November 2024
தலைவர்களுக்கு புகழாரம் சூட்டுவது நம் வேலையல்ல
இன்று நாம் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தில் இருக்கின்றோம்;. தேசிய மக்கள் சக்தி புதிய ஆட்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம், சாதாரணமாக ஒரு அரசியல் கட்சியின் வெற்றியை ஒட்டியதல்ல. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிஜமாகும் ஒரு நேரம்; மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்பை எடுத்துச் செல்லும் பொறுப்பின் நேரம்.
ஆனால் திடீரென உண்மையான முன்னேற்றம் எளிதில் வராது. அது நம் தலைவர்களும், நாமும் இணைந்து உடனடியாகச் செயல் படும்போது மட்டுமே சாத்தியமாகும் ஒன்று.
20 November 2024
ஒருபோத்தல் சாராயத்துக்கு இவ்வளவு வரியா நாம கொடுக்கிறம்!
விடயத்துக்கு வருவோம். ஓராண்டுக்கும் மேலாக, நாட்டின் முன்னணி மது உற்பத்தி நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதது குறித்து, இன்று சமூகத்தில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்த கதை உண்மையில் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சில நரித்தந்திரங்களால் அரசாங்கத்திற்கு உரிய வரிகளை செலுத்துவதில்லை என பல்வேறு சமூக அமைப்புகளும் ஊடகங்களும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்தன.
ஆனால் அந்த வரி மோசடிகளோ வரி ஏய்ப்புகளோ குறையவில்லை. நாளுக்கு நாள் அது வளர்ந்து கொண்டே வந்தது.
19 November 2024
தமிழ் மக்கள் சிறந்த மாற்றத்துக்காக என்.பி.பியைச் சுற்றி திரண்டுள்ளனர்
வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களில் மொத்தமுள்ள 28 ஆசனங்களில் 12 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி தனிப்பெரும் கட்சியாகக் கைப்பற்றியது. என்.பி.பி நாடு பூராவும் பெற்ற வெற்றியை விட இந்த வெற்றி மகத்தானது.
3 சதவீதமாக இருந்த என்.பி.பி 42 சதவீதமாக உயர்ந்தது. அதனால்தான் அது பொதுத் தேர்தலில் 62 சதவீதமாக மாறியது. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை விட என்.பி.பி 12 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்கள். 54 நாட்களுக்குள் 'அனுபவம் வாய்ந்த' ரணில் 17 லட்சம் வாக்குகளையும், சஜித் 24 லட்சம் வாக்குகளையும் இழந்தார்கள். இப்படி இருந்தால், எதிர்காலத்தில் இந்த சரிவு மேலும் வளரும் என்பது உறுதி. இது என்.பி.பி அரசின் ஆட்சியின் வெற்றியைப் பொறுத்தே அமையும்.
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி அபாரமானது. அது சும்மா அல்லாமல் வடக்கிலிருந்து தெற்கேயும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பரவிய வெற்றி. 22 தேர்தல் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த் 21 மாவட்டங்களை என்.பி.பி கைப்பற்றியது.11 November 2024
14ம் திகதி மகிழ்சியான நாடாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்- எதியோப்பியா சொல்லும் பாடம்
05 November 2024
பொதுப் பணத்தை நம்பியிருக்கும் அதிகாரிகளை நாட்டின் மீது அக்கறையுள்ள அதிகாரிகளாக மாற்றுவதே முதல் பணி.
இன்று நடப்பவற்றை அவதானித்தால் நாம் அழுவதற்கு பிறந்த நாட்டு மக்களா! என எண்ணத்தோணுது. வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது மக்கள் அழுகிறார்கள். நிலச்சரிவுகள் வந்து அண்டை வீட்டாரை உயிருடன் புதைக்கும்போது மக்கள் அழுகிறார்கள். வீதி விபத்துகளில் இளைஞர்கள் உயிரிழக்கும்போது ஒட்டுமொத்த நாடும் அழுகிறது. நாட்டின் ஆட்சியாளர்கள் கொழும்பில் குளிர் அறைகளில் இவற்றை பேசிவிட்டு ஓரிரு வாரங்களில் அனைத்தையும் மறந்து விடுகின்றனர். மழைக்காலத்தில் மரங்கொத்திகள் கூடு கட்ட பேரம் பேசுவதும், மழைக்காலம் முடிந்ததும் அந்த எண்ணத்தை மறந்து விளையாடுவதும் ஒரு கதை. இலங்கையின் ஆட்சியாளர்களும் அப்படித்தான்.
01 November 2024
திறனை வளர்
இந்த உலகம் நமக்காகக் காத்திருப்பதில்லை, ஆனால் நமது திறமைகளுக்காக மட்டும் காத்து நிற்கிறது. உன் திறமையை நம்பினால் அது உன் காத்திருப்புக்கு கைகொடுக்கும்.
இந்த உலகம் நமக்காக காத்திருப்பதில்லை. காலம் ஒருபோதும் நின்று விடுவதில்லை. நாம் நம்முடைய வாழ்க்கையை காத்துக்கொண்டு, எதற்கும் காத்திருக்கையில், இந்த உலகம் தன் பாதையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், இந்த உலகம் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே நமக்கு இடம் கொடுக்கிறது – அது நம் திறமைகள்.
உனது திறமைகளுக்கு நீ மதிப்பு கொடுத்தால், உன் திறமை உலகத்தின் கவனத்தை ஈர்க்கும். உனது திறமை உனக்கே தேவையான வாய்ப்புகளைத் தேடி கொண்டு வரும்.
நம்பிக்கை என்பது உன் திறமையைப் பறவையாக உயர்த்து விடும் அசைவான சிறகுகள்.
முயற்சி உனது திறமையை நன்கு பயன்படுத்தி வெற்றியை உனக்கு தேடி தரும் கருவி.
உன் திறமையை நம்பு. அது உன் கனவுகளையும், உன் எதிர்காலத்தையும் உருவாக்கிக்கொள்வதற்கான முக்கிய அஸ்திரம்.
இந்த உலகம் உனக்கு பதிலளிக்காமல் போகலாம், ஆனால் உன் திறமை, உன் உழைப்பு, உன் நம்பிக்கை உலகத்தையே உன் பின்னால் நிற்கச் செய்யும்.
நான் ஒரு திறமைசாலி என்று நீ நம்பினால், அந்த நம்பிக்கை உன் வாழ்க்கையில் ஒளிக்கற்றையாக நீண்ட காலமாகத் திகழும்.