இடர் ரீதியாக தொடர்பினைப் பேணல் என்பது பேரழிவை எதிர்கொள்ளும் ஒரு அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இதில் ஈடுபட்டுள்ளன. எவ்வளவோ தகவல் பரிமாற்றம் இன்று வளர்ந்துள்ளது அதனை அந்தந்த பொறுப்பானவர்கள் செய்தாலும் சில இடங்களில் மக்கள் அந்தப் பணியை கணக்கில் எடுப்பதில்லை. இதனால், ஆபத்தைக் கண்டாலும் ஆபத்தில் இருக்கும் உயிர்கள் பறிபோவதனை தடுக்க முடிவதில்லை. ஆனாலும் மறுபுறம், இலங்கையின் நெடுஞ்சாலைகள் சில இடங்களில் நீர்ப்பாசன மட்டத்தில் இருப்பதால், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு சாதாரண மக்கள் பலியாகும் நேரங்கள் உள்ளன. சில இடங்களில், சம்பவம் தொடர்பான உடனடி நடவடிக்கை பொறிமுறையின் பற்றாக்குறையும் மக்களை இழப்புக்குள்ளாக்குகின்றது. காரைதீவு மாவடிப்பள்ளி உழவு இயந்pர விபத்து பற்றிய சில தகவல்கள் அத்தகைய நிலையை உணர்த்துகின்றன.
மத்ரஸா பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் வீட்டிற்குச் செல்வதற்காக சம்மாந்துறையில் பேருந்தில் ஏறினர், ஆனால் காரைதீவுப் பகுதியின் மாவடிப்பள்ளி பகுதியிலிருந்து வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் பயணம் பாதியிலேயே முடியாமல் நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து பேருந்து அந்த இடத்தைத் தாண்டி செல்ல முடியாததால் டிராக்டர்கள் மூலம் பயணத்தை எளிதாக்க முயன்றனர். இதுதவிர வேறு மார்க்கங்களை ஆயத்தம் செய்யாத நிலையில், இந்த குழந்தைகளை ஏற்றிச் செல்ல பாதுகாப்பான வழி இருந்திருந்தால், இந்த மலர்கள் அகால மரணமடைந்திருக்காது என்று நாம் எப்போதும் கூறலாம். இப்படிப் பார்க்கும்போது, சில நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் பிரச்சனை, பொறிமுறைகளின் செயல்பாடுதான் காரணம். அதற்கு, அதிகாரிகள், மாத்திரம்தான் என கூறாமல் பொதுமக்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது என்பதனை உணரவேண்டம். சாதாரண பிரச்சினைகளை ஏலவே உணர்ந்து செயற்படுவதற்கான பயன்பாட்டு நுண்ணறிவுக்கு டிகிரி தேவையில்லை. அதற்கான தொடர்பாடலை பெற எத்தனையோ வழிகள் உள்ளன.
அவைகள் இன்னும் வலுப்பெறவேண்டும். பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்காணிப்பில் பொதுமக்கள் சிவில் சமுக ஒத்துழைப்புடன் அறிவுறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதற்கான முன்னாயத்த செயற்பாடுகளை, திட்டங்களை காலங்காலமாக செய்தும் அதனை நடைமுறைப்படுத்த தவறிய பல சந்தர்பங்களை இன்னும் எமது பகுதிகளில் காணுகின்றேம். அதுவே வளர்சிபெறவேண்டும்
0 comments:
Post a Comment