01 October 2010
சிறுவர்கள் எமது எதிர்காலத்தின் நம்பிக்கைச் சொத்தாகும்
சிறுவர்கள் எமதென்று எப்போதும் எழுவோம்...
போதுமே!
இளமையில் வறுமை
பாலியல் பரிதவிப்பு,
கூலிக்கு வேலை
பள்ளிக்கு வேலி,
பாசத்துக்கோ நாசம்,
விளையாடத் தடை,
விலைபோகும் நிலை,
பெற்றோரின் பிரிவு,
போதுமே!
சட்டங்கள் சாக்குப் பைக்குள்
உறையிட்டுத் தூங்கும்போது,
திட்டங்கள் போட்டு என்ன பயன்?
இது ஒன்னும்,
மொகஞ்சதரோ ஆராய்ச்சி இல்லை!
புதிதாய் கண்டறிய...
வீட்டுக்கு வீடு ரோட்டுக்கு ரோடு.....
நீதியின் கண்ணில் மிளகாய் தூவி!
அரங்கேறும்
துஸ்ப்பிரயோக நாடகம் தான்!
மலரா மொட்டுகள்
வாசன அறிய முன்னே,
உலர விடுவதுதான் நியாயமா?
ஆசியாவின் மூலைகள் எங்கும்
அளிக்கையாகும் லீலைகள்தான்...
திறந்த சிறையில்...
ஆயுட் கைதிகளாய்..
நிரபராதிகள் இங்கே!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
மன்னர்கள் மகாத்மாக்கள்,
எத்தனை எத்தனை...
ஓ! கடவுளே!
அத்தனையும்
கருவிலே கருக்கப்படும்
நரகத்தின் வீடா!
பேசிப் பேசி என்ன பயன்?
யோசிக்க வேண்டும்.....
சட்டங்களுக்கு உயிர் கொடுப்போம்
திட்டங்களை அமுலாக்குவோம்
கலங்கரை விளக்குகளை,
வாழவிடவோம்..
எல்லோரும் தொழுவோம்..
சிறுவர்கள் எமதென்று
எப்போதும் எழுவோம்....

24 September 2010
14 September 2010
தேவதையே!
உன்னைப் பார்த்ததில்லை
விழி சேர்த்ததில்லை
இருந்தும்,
உடல் வேர்த்தேன்- உன்
வார்த்தை தேன் கலந்த
மொழியில் மயங்கி
உன்னிடம் தோர்த்தேன்!
நீ
நிலவானவளோ!
சிலையானவளோ!
மலரானவளோ!
மானானவளோ!
புரியவில்லை- விழி
உலகின் அழகை எல்லாம்....
தேடல் செய்தும் முடியவில்லை...
ஓகோ!- நீ!
இந்திரன் சபையில
மந்திரம் செய்யும்
பிரியமானவளோ!
மன்மதன் மயங்கும்
மகாராணியோ!
இல்லை இல்லை -நீ
என்னை இழுத்த காந்தம்- உன்
இதழ்கள் சிவக்கும் காந்தழ்
வெண்ணெய் மணக்கும் பேச்சு
பெண்ணே நீ பெண்ணல்ல
மயக்கும் புன்னகை!
ஒளிரும் பொன்னகை!
இனிக்கும் தேனிலா! எனக்கு தேவதை...!!!!
05 August 2010
வாழ்துச்சூடி...
உன்னை கண்டு பிடித்ததால்
நானும் ஒரு கொலம்பஸ் உலகில்!
சோடிக்க உன்னை வார்த்தைகள் இல்லை
வாடிக்கையாக பேசிறேன்....
கைமணக்கும் மண்டுர் பலாப்பழமே!
நெய் மணக்கும் எருவில் வத்தாளைக் கிழங்கே!
களுதாவளை கொழுந்து வெத்தலையே!
மட்டுநகர் வாவி உன் அழகான மேனி;
வாகரை கொம்புத்தேனோ -உன்
வாய் இனிக்கும் வார்த்தை!
பட்டிப்பளை பசும்பாலோ –உன்
பால் வழியும் முகம்தானும்
பக்கம் வந்து நீ சிரித்தால்
பாடுமீன் ஓசை வரும்!
அலையடிக்கும் கிழக்குக் கரை- எனை
அலையவைக்கும் உன்கொலுசு.
தாலாட்டு வசந்தன் அம்மானை எல்லாம்
ஓன்றாக கேட்குதடி- நீ
உதிர்தும்; வார்த்தையிலே...
படுவான் கரை சூரியன்போல் - நீ
கொடுத்து சிவந்த கைகள்
படுபாவி எனை அனைத்து
பாராமல் போகுதடி..ம்ம்ம்ம்
நான் புவியரசாய் இருந்திருந்தால்
உனக்கு அரியாசனம் தந்திருப்பேன்
வெறும்
கவியரசனாய் இருந்ததால்
கவியாரம் மட்டும் சூட்டுகிறேன்.
27 May 2010
வெள்ளம் வருமுன் காப்போம்
காலநிலை மாற்றங்களுக்கிணங்க இலங்கையானது வெள்ளம்ரூபவ் புயல்ரூபவ் சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு இலகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளமையை முன்னைய வருடங்களில் இருந்து தற்போது வரை கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளம் நீர்நிலைகள் ஒழுங்கான முறையில் வடிந்து செல்வது தடைப்படும்போது ஏற்ப்படுகின்றது. வெள்ளம் வடிந்தோடுகின்றரூபவ் மற்றும் தாழ்நிலைப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைப்பதன்மூலம் வெள்ளம் தடைப்பட்டு அதன் ஆபத்தினை அதிகரிக்கச் செய்கின்றது.
வெள்ளம் ஏற்ப்படுவற்க்கான காரணங்கள்.
வெள்ளப்பாதுகாப் இடங்களில் குடியேற்றத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்க்கான வழிமுறைகள்.
வெள்ளநீர் மூலம் குப்பை கூழங்கள் கொண்டு சேர்க்கப்படுவதுடன் நஞ்சு கலந்த மாசுறுதலும் அதன்போது ஏற்படுகின்றது இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்ப்படுத்துகின்றது.
குறிப்பாக வெள்ளம் நீர்நிலைகள் ஒழுங்கான முறையில் வடிந்து செல்வது தடைப்படும்போது ஏற்ப்படுகின்றது. வெள்ளம் வடிந்தோடுகின்றரூபவ் மற்றும் தாழ்நிலைப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைப்பதன்மூலம் வெள்ளம் தடைப்பட்டு அதன் ஆபத்தினை அதிகரிக்கச் செய்கின்றது.
வெள்ளம் ஏற்ப்படுவற்க்கான காரணங்கள்.
- வெள்ள அனர்த்த மட்டங்களை கருத்தெடுக்காமல் நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளல்.
- அதிகரித்துவரும் சனத்தொகை காரணமாக நிலப்பகுதியின் அளவு குறைந்து வருகின்றமை இதனால் வெள்ளளம் வடிந்தோடுகின்ற இடங்களில் வருமானம் குறைந்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம்.
- வடிகால் அமைப்புகளை தூய்மை செய்வதில் காணப்படுகின்ற பொது மக்களின் அசண்டையீனமான போக்கு.
- மண்ணை முறையற்ற முறையில் அகன்றெடுத்தல்.
- நீர் வழிந்தோடி தேங்கி நிற்கும் இடங்களை நிரப்புதல் மற்றும் அவற்றின்மீது கட்டிடங்களை அமைத்தல்.
- சாப்பிட முன்னும் பின்னும் கைகளை தூய்மையாக கழுவுதல் வேண்டும்.
- நுளம்பு தொல்லையில் இருந்து பாதுகாப்பு பெற நுளம்பு வலைகளை பாவித்தல் வேண்டும்.
- இவற்றின்போது வயிற்றோட்டம்ரூபவ் வாந்திபேதி என்பன ஏற்ப்பட வாய்ப்பிரிப்பதனால் தூய நீராகாரங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியமாக இருக்கும்.
- மேற்கூறிய நோய்களுக்குரிய அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடி வைத்தியரை நாடி ஆலோசனை பெறுவது சாலச் சிறந்ததாகும்.
- நித்திரை செல்லும்போது கால் மற்றும் கைகளை மூடும்படியாக துணிகளால் போர்த்தவேண்டும்.
- கமடைந்த நோயாளிகளை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
- தண்நீர் தேங்கி நிற்கும் இடங்களை இல்லாது செய்தல் வேண்டும் (தகரப் பேணிரூபவ் டயர்ரூபவ் சிறட்டை போன்றன)
- பாதுகாப்பற்ற வழிகளில் கிடைக்கும் நீராகாரங்களை அருந்துதல்.
- சமைக்கப்படாத உணவினை உட்கொள்ளல்.
- வெட்டி வைக்கப்பட்டிருக்கும் பழவகைகளை உட்கொள்ளல்.
- வெள்ளத்தினால் வந்த நீரை தேங்கி நிற்க அனுமதித்தல்.
வெள்ளப்பாதுகாப் இடங்களில் குடியேற்றத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்க்கான வழிமுறைகள்.
- வெள்ளம் வடிந்தோடுவதற்கென ஒதுக்கப்பட்ட வலயத்தினுள் குடியேற்றத்தினை சரியான முறையில் தடைசெய்தல்.
- சட்டமுறையற்ற குடியேற்றதிட்டங்களை தடுப்பதற்க்கான ஒழுங்குமுறையான அவதானிப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை எடுத்துவருதல்.
- புதிய குடியேற்றத்திட்டங்களை தடைசெய்யப்பட்ட இடங்களில் ஊக்குவிப்பது மற்றும் உதவிபுரிவது நிறுத்தப்படவேண்டும்.
- வெள்ளத்தினை வழிந்தோடச் செய்வதற்க்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்கள் குறிப்பாக சதுப்பு நிலங்கள் பாதுகாப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
- வெள்ளம் வழிந்தோடுகின்ற நிலங்களை அண்டியுள்ள பிரதேசங்களை மீள ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகளை வலுவாக தடைசெய்வதுடன் அவற்றின்மீது வலுவான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
- சரியான நீர் வழிந்தோடக்கூடிய வடிகால்கள் அது வெளியேறும் வழிகள் என்பவற்றை நகரப்பகுதியினுள் திட்டமிட்டபடி அமைக்கப்பட உறுதிசெய்யப்பட வேண்டும்.
- நீர் வழிந்தோடக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்திருத்தல் அறிவுறுத்தல் வேண்டும்.
- குடிநீரினைப் பெறுகின்ற இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதனால் அதில் பெறும் நீரினைக் குடிப்பதினால் மாசடைந்த நீர் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் வரலாம்.
- குறிப்பாக நீண்ட நாள் வெள்ளம் தங்கி நிற்ப்பதனால் சிறுவர்கள்ரூபவ் வயோதிபர்கள் மற்றும் அங்கவீனர்கள் தொற்றுக்காய்ச்சல்ரூபவ் குளிர் ஜீரம் என்பனவற்றினால் இலகுவில் பாதிப்படைகின்றனர்.
- வெள்ளப் பாதிப்புக் காரணமாக மனநிலை பாதிப்படைதல்ரூபவ் தூக்கமின்மைரூபவ் இருக்கின்ற நோய்களின் அதிகரித்த தன்மை மற்றும் தற்கொலை சம்மந்தமான எண்ணங்களைத்தூண்டுதல் என்பனபோன்ற அபாயங்களை ஏற்படுத்துகின்றது.
- இதற்கு மேலாக வெள்ளம் ஏற்ப்பட்டதின் பின்பு புதிதாகப் பிறந்த குழந்தைகள்ரூபவ் கற்பினித்தாய்மார்கள் பாதுகாக்கப்பட வேண்டிய சிரமமும் ஏற்ப்படுகின்றது.
- தூய சுட்டாறிய நீரினை அருந்துதல் அதற்க்காக வீடுகளில் பாவனைக்கு பயன்படுத்தப்படும் நீரில் குளோரினை இட்டு பாவித்தல்.
- எப்பொழுதும் குடிநீரை சிறிய மூடி கொண்டரூபவ் சுத்தமான கொள்கலன்களில் சேமித்து வைத்தல் வேண்டும்.
- உணவினை மூடிவைத்து பாதுகாப்பதுடன் அவற்றை சூடாற முன் உண்ணுதல் வேண்டும்.
- இயற்கையாக அமைந்திருக்கும் நீர் வழிந்தோடக்கூடிய வழிகளில் குடியேற்றத்திட்டங்களை அமைத்தல் தடைசெய்யப்பட வேண்டும்.
- புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக நீர்நிலைகள்ரூபவ் நீர் வழிந்தோடும் இடங்கள் பாவிப்பது தடைசெய்யப்படுதல் வேண்டும்.
- ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட வெள்ளம் வழிந்தோடும் இடங்கள் மீளவும் பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
- வெள்ளத்தினால் பெரியளவிலான மண்ணரிப்பு உருவாகின்றதுரூபவ் அத்துடன் இது பாலங்கள்ரூபவ் கட்டிடங்கள் என்பனவற்றை சிதைவடையச் செய்கின்றது.
- மனிதர்களால் கட்டப்பட்ட வீட்டின் சுவர்கள்ரூபவ் கதவுகள்ரூபவ் கூரைகள் அத்துடன் வீடுகள் என்பன சிறிய வெள்ளத்தினாலும் பாதிப்படைகின்றது.
- விவசாய நிலங்களில் ஏற்ப்படுகின்ற வெள்ளத்தின்போது விவசாயப்ப் பயிர் செய்கைகள்ரூபவ் மிருக வளர்ப்புப் பண்ணைகள் அத்துடன் செல்லப்பிராணிகள் என்பன வெள்ளத்தின்போது மிகுந்த பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.
- வேள்ளம் போக்குவரத்தினை சீர்குலைத்து விடுகின்றது இது அங்கு உடனடி உணவுத்தட்டுப்பாட்டினை உண்டுபண்ணுவதுடன் அதுவே மக்களை பட்டினிச் சாவுக்கும் இடடுச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்ப்பட்டு விடுகின்றது.
- வெள்ள காலங்களில் அதன் வடிந்தோடும் தன்மையைப் பொறுத்து மக்களின் இடப் பெயர்வுகள பாரியளவில் ஏற்ப்பட்டு வருகின்றன.
- இதன்போது மக்ககள் தற்காலிக வீடுகளிலும் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களிலும் குடியமர்த்தப்படும் போது தூய்மையான நீரைப் பெறுவது மற்றும் போதியளவு உணவினைப் பெறுவது மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுவதுடன் அங்கு ஏற்ப்படும் சுத்தமற்ற தன்மை உணவு மற்றும் குடி நீர் மூலம் வரும் நோய்களுக்கு ஏதுவாக அமைந்து காணப்படும்.
- ஓவ்வொரு வருடமும் வரும் வெள்ள அனர்த்தத்துக்கென பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை வழங்க வேண்யெ நிர்ப்பந்தம்.
- வேள்ளம் ஏற்ப்பட்டதன் பின்னர் பல்வேறு நோய்கள் உண்டாகுகின்றனரூபவ் குறிப்பாக கொலராரூபவ் தைப்பொயிட்ரூபவ் டையேரியா மற்றும் காய்சல் போன்ற இன்னோரன்ன நோய்களையும் உண்டுபண்ணுகின்றது.
வெள்ளநீர் மூலம் குப்பை கூழங்கள் கொண்டு சேர்க்கப்படுவதுடன் நஞ்சு கலந்த மாசுறுதலும் அதன்போது ஏற்படுகின்றது இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்ப்படுத்துகின்றது.
03 May 2010
மன இறுக்கத்தை தளர்த்த எழிய வழிமுறை
01 May 2010
உதயமே உனக்கொரு சலூட்.....
கிழக்கில் உதயம் தானடா
கிழித்து பாயும் படகடா
வழியவிடு ஓடுகின்ற ஆறு- போட்டி
வந்துவிட்டால் ஒன்றல்ல நூறு..
சேவையில மக்களுக்கு அஞ்சாத சிங்கம்- இது
ஜெயித்ததெல்லாம் போட்டியில் மங்காத தங்கம்
ஆதியில தோன்றியதும் எங்கள் உதயம் தானடா
பாதியில போகாத பலமும் உண்டு கேளடா
தேத்தாத்தீவு மண்ணுக்குள்ள வீரமுண்டு பாரடா- இத
தேசமெல்லாம் கொடிநாட்டும் படையணியின் ஊரடா
முன்னேற போகச் சொல்லி வெளிசசம்போட்ட விளக்கடா-நாம
முடித்ததெல்லாம் வெற்றியெண்டு முழக்கமிட்டு சொல்லடா
சூறாவளி போல நீயும் செல்லவேண்டும் முன்னடா
சுற்றிருக்கும் பகைகளெல்லாம் மெல்ல ஓடும் பின்னடா
உதயம் உதயம் என்று சொல்லி உரத்து சொல்லிப்பாரடா
வயிற்றில் இருக்கும் மழழைகூட வந்துசேரும் உன்னுடன்
மட்டக்களப்பு மண்ணுக்குள்ள ஆலவிருட்சம் நீயடா
கெட்டபேரு வாங்காத திட்டம்போடும் கழகண்டா
கையில் எடு உறுதிமொழி சேவை சேவை என்று
காக்கவேண்டும் ஊரைநாம களத்தினிலே நின்று.
நாளை நடைபெற இருக்கும் புதுவருட விளையாட்டை முன்னிட்டு இந்த வாழ்துபாவை சமர்ப்பிக்கிறேன்......









