ADS 468x60

20 May 2011

கண்டீர்களா, என் காதல் தேவதையை!...

Myspace Dark Angels Graphics Angel Clipart
இரக்கை
முளைத்திருக்கும்
இமைகள்
பனித்திருக்கும்..
வெண் மேக
ஆடை மூடி!
கண்ணோரம்
மின்னல் ஓடி!!
மண்ணிலே
பூக்கள் கூடி!!!
வடித்து எடுத்த
சிற்ப்பமோடி!!!!...

கவிக்குள் வராத அழகு!
கவிழும் உனைப்பார்த்து உலகு!!..
தேடித் தேடி ஒடிந்தேன்
ஓடி ஓடி மடிந்தேன் -உலகில்
கண்டீர்களா!!
என் காதல் தேவதையை!...

19 May 2011

முழு நிலா

Myspace Dark Angels Graphics Angels Clipart

பளிச்சிடும் முழு நிலா –உன்
        பார்வை தேன் பலா..
என்னிடம் நீயிலா...
       ஏங்கிடும் நம் உலா.

கண்கள் இமை மூடும்
        குளிரோடை..
காமன் மலர் தோட்ட
         மணவாடை..
இதழ்களின் இடையினில்
         இதமான தேன் விழும்
இரவுகள் விழித்திடும்
        இளமகள் தேருலா

கைகள் அணைத்திட
உனைத் தொட
குனிந்திடும் முகத்தினில்
மோகம் வந்து சேரும்..
பளிச்சிடும் முழு நிலா.....

18 May 2011

சாதனை!



வாழும்போது சாதனை
அது -
கண்களை இருட்டி,
எலும்பினை புடைத்து
உயிரை காவு கொள்ளும்,......
பட்டினிக் கொடுமையில்
சாகும்
உயிர்கெல்லாம்.....
ஒரு பிடி சோறு கொடுப்பது.

இதயம்..

Wing Love Heart Hearts 3d wallpaper animated and screensaver for phone cell mobile skull skulls screensavers wallpapers phones mobiles effects animation firewosks flames flame
நெஞ்சினுள் கூடு கட்டி,
நினைவுகள் கோடி வைச்சி,
பஞ்சிபோல் உள்ளே இருக்கும்..
இதயமே!

கண்ணை வைத்து,
காதை வைத்து,
வாயை வைத்து,
வயிற்றை வைத்து
உன்னைக் காட்டும் - இறைவன்,
இதயம் வைத்து,.....
மறைத்து விட்டான் மனதை..

வெற்றுச் சிரிப்பில்,
விழுந்து எழுந்து
கட்டி அணைப்பில்,,,,,
விட்டு மறந்து.....
பட்டதெல்லாம் வேசம்..
தொட்டதெல்லாம் மோசம்...
உன்னைக் காட்டும் - இறைவன்!!
இதயம் வைத்து
மறைத்து விட்டான் மனதை..!

என் கண்ணில் கண்ணீர்....
உன்கண்ணில் உதிரம்!!
என் வயிற்றில் பசி .....,
உன் முகத்தில் கலவரம்..
எனக்கு காச்சல் வந்தால்
உனக்கு தலை வலிக்கும்...
எனக்கு நீ என்றேன்
உனக்கு நான் என்றாய்...
இதயம் கண்டேன்..

உன் செயல்களின்
மறுமொழியில்
கண்களின் உவர் கசிவுகளில்
இதயம் கண்டேன்.

மென்மையாகப் பேசுவோம், மேன்மை பெறுவோம்.


'நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு' உலகத்திலேயே பெரிய ஆயுதம் எது எனின் அது நாக்குத்தான்... அதை நாங்கள் அவதானமாகப் பாவிக்காவிடின் பின்னர் மிக மோசமான பழிக்கு ஆளாகி விடுவோம், என்கின்ற உன்மையை வள்ளுவப் பெருந்தகை மேலுள்ள அடியில் தெழிவுறுத்தியுள்ளார்.

பேச்சற்ற சிந்தனை இருக்கலாம், ஆனால் சிந்தனையற்ற பேச்சு இருக்கவே கூடாது. மனிதனின் தனிச்சிறப்பே, அவனின் சிந்தனைத் திறன்தான். சிந்தனையின் வெளிப்பாடே பேச்சு, பேசும் திறன். மனித இனத்துக்கு மட்டும் இறைவன் கொடுத்த அருள் பரிசு அது.

இன்றய வாழ்வின் தனிமனிதனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாய் இருப்பது பேச்சுத்திறன். இதைத்தான் 'நாநலம்' என்பார் வள்ளுவர்.

'நாநலம் எனும் நலனுடமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று'

வாய்திறந்து வெறும் வார்த்தைகளைக் கொட்டுவது பேச்சு அல்ல. அது பேதைகளின் வார்த்தை சலசலப்பு, ஜாலமும் கூட. அங்கு கருத்துகள் கலக்காத காற்று ஓசை மட்டுமே, கேட்பவரின் நெஞ்சையும் அது தொடுவதில்லை, கேளாதாரையும் ஈர்ப்பதில்லை.

சமுதாயத்தின் மதிப்பும் மரியாதையும் தேடித்தருவது பேச்சுத்தான். ஒரு சொல் வெல்லும்; மறு சொல்லோ கொல்லும்! இத்தகைய சக்தி வாய்ந்த கருவியை, அறிவின் துணை கொண்டே பயன்படுத்தவேண்டும். அதனால்தான் சொல்வார்கள், எண்ணங்களின் மேலாடையே பேச்சு என்று.

பண்டைய காலத்தில், பேசும் கலை மிகவும் உச்ச நிலையில் இருந்தது. அக்காலத்தில் மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்க வேறு வழி இருக்கவில்லை, எனவேதான் பேச்சு, கலை வழியாக, கவிதையாக, கருத்துக் குவியல்களாக, எழிமையாக ஏற்றம் மிகு நடையில் சொல்லி வைத்தார்கள்.

இன்று அச்சுக்கலையின் அபார வளர்ச்சியாலும், ஊடகம், சினிமா மோகம் இது போன்ற அறிவியலின் விளைவுகளாலும் பேச்சுக்கலை மூச்சிழந்து நலியத் தொடங்கி இருக்கிறது.  அழகாக - அறிவுடன் - இனிமையாக பேசத் தெரிய வேண்டும். எந்தச் சூழ்நிலையில், எவருடன் பேசுகிறோம் என்பதனை உணர்ந்து, மற்றவரின் திறன் அறிந்து, எளிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.

உன்மையில் 'சிந்தனையின் அழகு சொல்லில் மிளிர்கிறது' என்பார் இராஜாஜி. எவரிடமும் பேசுவதற்கு முன் தெளிவான சிந்தனை ஓட்டம் வேண்டும்.
வார்த்தையில் இனிமை என்ற சொல் தேனில் தோய்க்கப்படவேண்டும். உணர்ச்சிகள் என்ற பட்டாடைகள் போர்த்தப்பட வேண்டும். சொற்க்கள், மலர் அன்புகளாய்க், கேட்பவரின் இதயக் கதவுகளை, தளிர் நடை பயிலும் தழிழ் தென்றலாய் தழுவவேண்டும்.

மேன்மையாகவே மேதினியில் பேச வேண்டும், கேட்பவரின் உள்ளத்தை அன்பால், அறிவான சொற்களால், இனிமையாக, இதமாகப் பேசி முற்றுகையிட வேண்டும். அந்த மோகன வேலை நமக்கு முழு உலகத்தினையே வாங்கிக் கொடுத்துவிடும் இல்லையா. அன்பு இதயம் கிடைத்துவிட்டால், அவணியில் ஆகாத காரியமும் உண்டே.. எனவே அன்பாகப் பேசித்தான் பழகுவோமே!!!!!

14 May 2011

சிலுவை சுமக்கும் காதல்...


Fantasy Women Graphics Dark angels Clipart
P/
ஆவியாகும் ........
என் நெஞசக் கனவுகள்
இன்னும் இன்னும்
உவப்பு மழையாக,
சொரியும்; கண்ணீர்;
மேகங்களுடன்..
அடித்துச் செல்லும்
சோக அலையில்
நானும்,,
எனது ஆசைகளும்
கரையைத் தேடியே..
காலங் கழிக்கும் வேதனை....
மதவெறி பிடித்த
மங்கையின் சோதனை..
எல்லாம்..
என்னை காதல் சிலுவை
சுமக்க வைக்கின்றனவே......

09 May 2011

இந்தியாவில் தாயாகாத பெண்ணுக்கு சன்மானம்....


முழு சந்தோசங்களையும், வாழ்கைகளையும் நேரத்தையும் செலவிட்டு எம்மையெல்லாம் முழுமையாக உருவாக்குவதற்க்காக தன்னை அர்ப்பணிக்கும் ஜீவன் இவ்வுலகில் யார் இருக்கின்றார் என்று கேள்வி கேட்டால், அது தாயாகத்தான் இருக்க முடியும். இவள் உருவாக்க முடியாத உறவு, கண்களில் எண்ணையை வைத்து கருத்தாக காக்கும் உயிர், மன்னவனும் விண்ணவனும் போற்றும் கருணைக்கடல்... அது தாய் ஒன்றாக மாத்திரம்தான் கருதலாம். ஆதனால்தான் அன்னையர் தினம் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டாடப்படுகின்றது.. அது சாலப் பொருத்தமானதும் கூட.

தாய்மை பற்றி ஒரு புதிய தகவல் விடயம் பற்றி தெரிவிக்கலாம் என விரும்புகிறேன். யாரும் திருமணத்தின் பின் தாய்மை அடையக் கூடாது என்று விரும்புவதில்லை மாறாக தாய்மையடைவதை ஒரு பேறாகவே எம்மத்தியில் கருதி வருகின்றமை காணக்கூடியதாய் உள்ளது..

மேற்கு இந்தியாவின் ஒரு சட்டார் எனும் விவசாய பிராந்தியத்தில் அரசாங்கம் 106 அமெரிக்கன் டொலர்களை, திருமணத்தின் பின் இரு வருடங்களுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக வழங்கி வருகின்றது. இதனிடையே அனேகமான பிள்ளைகளை மிகக் குறைந்த இடைவெளியில் பெற்றுக்கொள்ளுவது அவ்வளவுக்கு அரோக்கியம் இல்லை என்பதற்க்கில்லை, என்றும் கருத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. இது சனத்தொகை அதிகரிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அமுலாக்குவது பொருத்தமாகவும் இருக்கலாம் என்பதற்கு இது நடைமுறைப்படுத்துவது என்னவோ உன்மைதான்.

இப்பொழுது இந்தியாவின் சனத்தொகை 1.2 பில்லியனாக இருந்து வரும் நிலையில் இது இன்னும் ஒரு தசாப்த காலத்தினுள் சைனாவின் சனத்தொகையினை விஞ்சி 1.5 தொடக்கம் 1.9 பில்லியன் சனத்தொகையாக மாறி உலகிலே அதிக சனத்தொகையினைக் கொண்ட நாடு என்ன பெயரினை பொறிக்க இருக்கிறது. இது அந்நாட்டு அரசை குறைந்து வரும் வளத்தினிடை கூடிவரும் சனத் தொகையை வைத்து என்ன பண்ணுவது என்ற சங்கடத்திற்குள் உள்ளாக்கியுள்ளதாம். என "சேஞ்ச்" என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகலாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆரோக்கியமான ஒரு சமுகத்தில் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தைகள் இருப்பது உலகத்தின் சமநிலையை பாதுகாக்க உதவியாய் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதனை அதிக வருமானங்களைப் பெறுகின்ற கல்வியில் வளர்ச்சி கண்ட நாடுகள் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வறுமையான மூன்றாம் மண்டல நாடுகளிடையே ஒரு குடும்பத்தில் 4 குழந்தைகளுக்கு மேல் சராசரியாகக் காணப்படுகின்றமை காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் மேற்கிந்தியாவில் மாத்திரமல்ல பல நாடுகளில் காட்டமாக குழந்தைகளை பெறக்கூடாது என்ற சட்டரீதியாக பல கொள்கை அமுலாக்கலை கொண்டு வருவதும், ஊக்குவிப்பு தொகையினை அறிமுகப்படுத்தி தாய்மையை அழிப்பதும் உன்மையிலே தாய்மைக்கு நாங்கள் செய்யும் அவமானமாகத்தான் இருக்கிறது. குழந்தை பெற்றுக் கொள்ளுவதும் பெறாமல் இருப்பது;ம அத்தாயின் முடிவில் இருக்கவேண்டும் என்ற ஒரு பொதுக் கருத்து காணப்படுகின்றது.

இருப்பினும் சிறுவயதில் சட்டரீதியற்ற முறையில் திருமணம் செய்வோர் இந்த பிராந்நியத்தில் 25 விகிதமாக இருக்கின்றது என்றும், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே எது எப்படி இருப்பினும் தாய்மை பற்றி இந்த உலகம் மிகுந்த அக்கறை காட்டி தான் வருகின்றது. மிக நுணுக்கமான முறையில் சட்டங்களையும் கொள்கை அமுலாக்கங்களையும் செய்து ஆரோக்கியமான ஒரு சமுகத்தினை கட்டியெழுப்புவதனூடாக தாய்மைக்கு நல்ல மரியாதையைப் பெற்றுக் கொடுக்கலாம் அல்லவா. நாங்கள் எங்கள் தாயை மாத்திரமல்ல, பாட்டியை, மனைவியை எல்லாம் தாயாக அன்னையர் தினத்தில் மாத்திரமல்ல நாள்தோறும் ஆராதிக்கப் படவேண்டியவர்களே...

அம்மானா சும்மா இல்லடா..











உலகுக்கு உணவளிக்க
களத்து மேட்டு கண்ணம்மா!
உள்ளவரின் பிள்ளைகட்கு
ஊட்டி வளக்க சின்னம்மா!!

நிழலில் நீயிருக்க
வெயில் குளிக்கும் உன்னம்மா!!!
மடியில் சுமந்து
மனிதனாக்கிய என்னம்மா!!!!

காட்சிதந்தும் கருணைதந்தும் 
கடவுள் வேண்டும் இன்னுமா!!!!??