ADS 468x60

31 August 2014

நல்லூர் கந்தன் சந்நிதானம்

நல்லூர் கந்தன் சந்நிதானம்
பார்த்தேன் குலைந்தது எந்நிதானம்
ஈக்கூட நுழையாத இடைவெளி
பார்கும் இடமெலாம் அழைக்கும் கடைவெளி
மக்கள் முகத்தினில் சந்தோசம் கண்டேன்
அகத்தினில் எந்தோசம் கொண்டேன்.

30 August 2014

இது முல்லை வேளை


தங்கம் கலந்த மணல்- அருகே
தாலாட்டும் வங்கப் புனல்
கூட்டமாய் வரும் மீன்கள்- அதை
நோட்டமிடும் மீனவர் கண்கள்
மயிலிறகாய் வருடும் தென்றல்- இது
வருவோர்க்கு வாய்த்த முன்றல்
சூரியனைக் குழைத்து எறிந்த வானம்
நீள் பனைகள் ஒட்டடை துடைக்க
நிலா வருகைகண்டு
உலாவும் பறவைகள் கானம்
இந்த வேளை நமக்கெல்லாம்
பொது உடமைதான்
ஆனாலும் மாற்றான் வீட்டு
மல்லிகைப்போல் இன்னும்
வேலிகள் கடந்து நிற்கும்
வேரற்ற எம்மக்கள்.

23 August 2014

நீ மட்டும் ஏன் கோபிக்கிறாய்!

மழைமேகம் நீரள்ள கடலுக்கு கோபமா
மலைமுகடு கூந்தல் காய காற்றுக்கு கோபமா
உலைமூட்ட எரிவதனால் நெருப்புக்கு கோபமா
மதிவளர்ந்து எறிக்கிறதே வானமே கோவமா
மரமூன்றி வேர்விட்டால் ம
ண்ணுக்கு கோபமா
மனம்மயங்கி இடங்கேட்டால் பெண்ணுக்கு கோபமோ!

மூடுவதால் கண்ணுக்கு கோபமா!
பாடுவதால் இசைக்கு கோவமா!
ஆடுவதால் காலுக்கு கோபமா!
ஓடுவதால் கங்கைக்கு கோபமா!

மலர்ந்து மலர்ந்து மணந்து மணந்து
உலர்ந்து போகுதே மலருக்கு கோவமா!
வானத்தில் திங்கள் வந்தால்
இரவுக்கு கோவமா!
வார்தையில் பங்கம் வந்தால்
வாய்கு கோவமா!
நீயும் நானும் சண்டையிட்டால்
காலத்தின் கோபமா!!!, சாபமா இல்லை பாவமா!!!!

20 July 2014

மட்டக்களப்பு பூர்வீகக் கலைகள் அந்நிய மோகத்தில் ஆடிப்போகும் ஆபத்து...

நாடுகளின் காட்டுவெள்ளம் போன்ற பெருவளர்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் வாழுகின்ற ஆசிய நாடுகள் 50 வருடங்களுக்கு பின்னால் நிற்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. அவைகள் மதவாதம், இனவாதம், மொழிப்பிரிவினை, சாதிச்சண்டை இன்னும் எத்தனையோ.. இவைகள் உழைக்கும் ஆற்றல், கண்டுபிடிப்பாற்றல், புதிது புனையும் ஆற்றல் என்பனவற்றையெல்லாம் அடியோடு அழித்திருக்கின்றது.

19 July 2014

மட்டக்களப்பு வெற்றிலைக்கு இப்படியும் மகிமையுண்டா!! ஆச்சர்யம்!

கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று.  வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.  திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது..

செழுமை நிறை மட்டக்களப்பு மாநிலத்தின் தென் பகுதியில் கடல், வற்றாத ஆறு மற்றும் குளங்கள் நிறைந்த தேத்தாத்தீவு, மாங்காடு, செம்டிபாளையம், குருக்கள்மடம் மற்றும் களுதாவளை போன்ற பிரதேசங்களில் ஆர்வத்தோடு செய்கை பண்ணப்படும் ஒரு பாரம்பரியப் பயிர், கற்ப்பக மூலிகையாக புராணங்களில் கருதப்படும் வெற்றிலை செடி என்றால் அது மிகையாகாது. வெற்றிலை (வெத்தில) எண்டு ஊர் வழக்கில் சொல்லுவர்).மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. இங்கு இதை வெற்றிலைத் தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.

13 July 2014

காலமும் சந்தர்ப்பமும்..

இன்னும் அதிகரிக்கிறது
உன் நினைவினை
இந்த இடைவெளி,
ஏனோ தெரியவில்லை
பொதுவான உனக்கான
பிரார்த்தனைகள்
நீளுகின்றது -அது
என் இயலுமைக்குட்பட்டு....

யாரும் அன்பை இழக்க
ஆசைப்படுவதில்லை!
காலமும் சந்தர்ப்பமும்
அதில் கால் வைக்கிறது.
எனக்கும் அந்தக் காலம்
கைக்கொடுக்குமா!
இன்னும் புரியவில்லை
அதனால்தான்,
ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன்!!

06 April 2014

வாழ்க்கையில் விடி வெள்ளி

நீதானே வாழ்க்கையில் விடி வெள்ளி வாழ்த்திடும் ஒரு பள்ளி வானவில் கோலங்கள் போல் வசந்தங்கள் தரும் உறவு. கடலில் தவித்தேன் சிலநாள்- பெரும் இடரில் களைத்தேன் மறுநாள் எடுப்பார் கையில் பிள்ளை- அன்று எனக்கோர் துணையும் இல்லை காத்ததால் நீயொரு அன்னை களைப்புக்கு நீர்தரும் தென்னை ஏழைக்கும் இரங்கிடும் ஏழை ஏனக்குநீ மணம்தரும் சோலை கேட்டால் கிடைக்கும் உதவி- யாரும் போட்டால் வருமே பதவி பார்த்தால் அறியும் குணத்தால்- எனை பார்த்தாய் உயரும் மனத்தால் தமிழ்என்றால் நீயொரு சிங்கம் தருவதில் குறையாத தங்கம் இரக்கத்தில் நீதான் அரசி இரப்போர்க்கு பசிதீர்க்கும் அரிசி நீதானே வாழ்க்கையில் விடி வெள்ளி வாழ்த்திடும் ஒரு பள்ளி வானவில் கோலங்கள் போல் வசந்தங்கள் தரும் உறவு.

04 April 2014

பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,

வறுமை ஒளிப்பதற்கு 
வாய்த்த வளம் இருந்தும்
திறமை உள்ளவர்கள்-வாய்
திறவாமல் உள்ளனரோ!

வாய்க்காலிலும் வயல்நிலத்திலும்
வள்ளம் ஓடும் வாவிகளிலும்
வானரங்கள் தாவும்
வனங்களிலும் மலையிலும்
வளர்ந்துவிட்ட நீங்கள்....

கறைபட்ட போரால்
கரையற்ற எம்மவரை
யாரோ என்பதுபோல்
பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,?