ADS 468x60

19 December 2016

கல்விக்கான உதவி நோக்கி- கட்டம் இரண்டு- இருநூறுவில் பாடசாலை

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு// 
வவுனதீவு பிரதேசம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினுள் காணப்படுகின்றது. இது இம் மாவட்டத்துக்குள்ளேயே கல்வியில் மிகவும் பின்தங்கிய இடமாகும். இங்கு காணப்படுகின்ற அநேகம் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் மந்தமாகக் காணப்படுவதுடன் இங்குள்ள மக்களும் மாணவர்களும் கல்வியில் அக்கறையற்றவர்களாகவும், நாட்டம் குறைந்தவர்களாகவுமே காணப்படுகின்றமையை உணர்ந்து, இருநூறுவில் பாடசாலையில் கல்விகற்க்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பான சப்பாத்துக்களை கனடா வாழ் எம் உறவுகளின் சிடாஸ் அமைப்பின் நிதி உதவியுடன் 03.03.2013 அன்று வழங்கி அவர்களை ஊக்குவித்து உதவினோம்..

17 December 2016

எல்லைப்புற பகுதி மக்களிடையே இந்து மத தத்துவங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்களில் எமது இந்து மதத்தின் அறக் கருத்துக்கள், தத்துவங்கள், அடங்கிய விடையங்களை தெளிவுபடுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் கி.குணநாயகம் தெரிவித்தார்.
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் மட்டக்களப்பு காந்திபுரம் சிவசக்தி இந்து கலா மன்றத்திற்கு இசைக் கருவிகள், வாழ்வாதார உதவி, உலர் உணவுப்பொதி, மாணவர்களுக்கான கற்றல் புத்தகங்கள், இந்துமத நன்நெறிக் கோவையான பகவத்கீதை, என்பன இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன.

15 December 2016

வம்மியடியூற்று அரும்புகள் பாலர் பாடசாலை நிகழ்வில்

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் வம்மியடியூற்று இந்து இளைஞர் கலா மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அரும்புகள் பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் சனிக்கிழமை(3) வழங்கி வைக்கப்பட்டன. 
http://battinaatham.com/description.php?art=6754
    
    

16 November 2016

கொம்புச்சந்தியானின் இசைக்கப்படாத எழுத்துகள்!!

கொம்புச்சந்தி அப்பன் மீது பாடிய எனது இசைக்கப்படாத எழுத்துகள்!!

இலங்காபரி உயர்ந்த இறைவா

காவல் நீயே கலியுக வரதா
காலடி நிதம் வந்து தொழுதேன்- உன்
காலடி நிதம் வந்து தொழுதேன் -நின்
அருள் மழையில் தினம் நனைவேன்

நித்தமுன் தரிசனம் நீங்காத பாக்கியம்
நான் என்றும் பாடனும் நாம சங்கீர்த்தனம்
நாயகனே நானுன் பாதம் அர்ப்பணம்
இலங்காபரி உயர்ந்த இறைவா  நின் சந்நிதானம்
(கவல் நீயே கலியுக வரதா)

11 November 2016

இன்னும் எத்தனை நாள்

இன்னும் எத்தனை நாள் இப்படியே வெறுமனே வரிசெலுத்தும் பரம்பரையாய் மட்டும் வாழ்ந்து போவது, மூலப்பொருட்களை மட்டும் விளைவித்து அறாவிலைக்கு தொலைக்கும் ஆதரவற்ற, கொடுப்பனவில்லாத சனங்களாய் மற்றவருக்காய் மாடாய் உழைத்த இந்த சமுகம் எப்போதுதான் அரசியல் விமோசனம் பெறப்போகின்றனவோ! தெரியவில்லை. சந்தர்ப்பங்களையெல்லாம் தட்டிப்பறிக்கும் இவர்கள் அரசியல் சாணக்கியர்களாம், அது அரசியல் சாணக்கியமல்ல அடக்கி ஒடுக்கும் சாணக்கியம் என்பதை புரியாதவர்கள் விரைவில் புரிவார்கள். இந்த சந்தர்ப்பம் இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் என்று ஒருவர் சொன்னதாக கொட்டை எழத்தில் பொறித்து கோசம் இட்டனர் அது இப்போது சரியாக மாறிவந்து நிற்க்கிறது, ஏனெனில் இப்போது மக்கள் அதனை உணரும் ஒரு சந்தர்ப்பத்தினை மக்களுக்கு காட்டிக்கொடுத்துள்ளார்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை, இல்லாமல் மாறும் பொருள் தேடி, அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ, இந்நாட்டில் மலரும் சமநீதி. நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம், இருந்திடும் என்னும் கதை மாறும். இந்தக் கனவோடு மட்டும் வாழாமல் சமநீதி பெற்று மற்றவரையும் சமநீதியுடன் வாழவைக்க எண்ண வேண்டும். போடுங்க போடுங்க பார்க்கலாம் என்று சொல்ல இது என்ன கிடுகு மட்டை வியாபாரமா? பட்டினிச் சாவை தொலைக்க மானத்தையும் மாற்றானிடம் அடகு வைக்கும் பரம்பரையாய் மாற்றாமல் விட மாட்டோம் என்பது போல் அல்லவா நம்ம அரசியல் ஆசான்கள் இருக்கிறார்கள். பள்ளிப்படிப்பைத் தொலைத்து கொள்ளி விற்க்கப் போகும் சிறுவர்கள்இ வயலையும் வளவையும் அயலவர்க்கு விற்க்கும் எம்மவர்இ ஆசுபத்திரி கூலிவேலைக்கும் தேடிவைத்த சொத்தையெல்லாம் அடுத்தவனுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசியல் அனாதைகளாக இந்த வந்தோரை வாழவைத்த மக்களை மாற்றிவிட்டீர்களே!. யாரிடம்போய்ச் சொல்லட்டும். ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க, இயற்கை தந்த பரிசாகும், இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க, நினைத்தால் எவர்க்கும் அழிவாகும். நல்லதை வளர்ப்பது அறிவாற்றல், அல்லதை நினைப்பது அழிவாற்றல்... நல்லதை நினைக்க எல்லோரும் தலைப்படுங்கள்

கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை

பல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும்இ நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம்.

எமது மகளிர் தின கௌரவிப்பில்

எமது குழுமத்தினர் 10.03.2013 அன்று திருப்பழுகாமம் கிராமத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தினை கொண்டாடினர். பழுகாமம் கிராமத்தின் மிகவும் பாதிக்கப்பட்டு தங்களது கணவன்மாரை இழந்தஇ வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வரவளைத்து அவர்களுக்கு ளால் திருவாளர் சிவர் அண்ணா அவர்ககனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சேலைகள் வழங்கி வைக்கப்பட்டது.