ADS 468x60

26 May 2017

விபுலாநந்தர் பணியில்

இவர் பணியில் செல்ல இலகில்
எவர் உண்டு இன்னும் உலகில்

மட்டு மாநிலத்தின் சொத்தாய்
எட்டுத் திசையும் மலர்ந்தகொத்தாய்
முருகனின் அருளால் மயில்வாகனனாய்
முத்தமிழில் உருகி வித்தகனாய்

துறவில் கலந்து விபுலாநந்தராய்
தமிழை உயர்த்தும் பேராசானாய்
மொழியில் தேர்ந்த விஞ்ஞானியாய்
அறிவில் தெழிந்த கலைஞ்ஞராய்

23 May 2017

படுவான்கரையில் சிறுவர்களுக்கு நடப்பது என்ன? அதிபரின் அதிர்சியூட்டும் தகவல்.

 அதிர்ச்சியில் உறைய வைத்தது அந்தத் தகவல். ஏனைய சமுகம் மூக்கில் விரல்வைக்க காரணமாக இருந்த அதே எமது கல்விச் செல்வம் இன்று அவர்களாலயே பரிகாசிக்கும் அளவுக்கு அது எம்மக்களிடையே பின்தள்ளப்பட்டுள்ளது.

'இந்த போரதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் கிட்டத்தட்ட 345 பாடசாலைச் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் இடையில் நிற்கின்ற அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கல்வியறிவை முழுமையாகப் பெறமுடியாத சமுகமாக உள்ள இந்த மக்கள், நாளாந்த வாழ்க்கையில் அதிகளவான ஏமாற்றங்களையும், பின்னடைவுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் இங்குள்ள பாடசாலைகள் அதிகஸ்ட்டப் பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் நல்ல ஆசிரியர்களை இங்கு வரவழைத்து கல்வியை முன்னேற்றுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளரும், மட்/ மகிழூர் வித்தியாலய அதிபருமாகிய திரு.பிரபாகரன் அவர்கள் இந்த மாணவர்கள் பெற்றோர்களிடையே உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

20 May 2017

மேலும் தண்ணி கீழும் தண்ணி புலம்பும் இடம்பெயர்ந்த மக்கள்..

'வெள்ளம் விட்ட பாடில்லை இன்னும், ஆடு, மாடு எங்கட வீடு எல்லாம் தண்ணிலதான் கிடக்கு ஓடி வந்து இங்க கொடுவாமடு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறம்' என்று ஒரு அம்மா அடிக்கும் மழையின் நடுவில் கொடுகிக் கொண்டு சொன்னார்.

மெதுவாக ஆனால் பாரிய சேதத்தினை ஏற்ப்படுத்தும் அனர்த்தங்களில் வெள்ள அனர்த்தம் முக்கியமானது. இலங்கையில் தாழ்ந்த பிரதேசங்களில் கிழக்கு மாகாணம் தொடர்ந்து வெள்ளத்தினில் பாதிக்கப்பட்டு வருவது பதிவாகியுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேசத்தின் வேப்பவெட்டுவான் பகுதியில் இருந்து 18.12.2012 அன்று அவசரமாக இடம்பெயர்ந்து கொடுவாமடு பாடசாலை மற்றும் அங்குள்ள பிரம்பு தொழிற் பயிற்சி நிலையங்களில் தங்கியுள்ள 143 பாதிக்கப்பட்ட மக்களை பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் வேண்டிக்கொண்டதற்க்கிணங்க 22.12.2012 அன்று பார்வையிட்டு அவர்களுக்கான ஒரு தொகை உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தோம்.

மட்டு நகர் மேடை மேலே!

மட்டு நகர் மேடை மேலே
மீன் மகள் பாடுது
வாவி மகள் ஆடுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

மட்டு நகர் மேடை மேலே
மீன் மகள் பாடுது
அலையில் சுருதி கூடுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

18 May 2017

நினைக்க முடியாத பிரிவில்

என் இனத்தின் சாவைக்கூட 
நினைக்க முடியாத பிரிவில்
நானும்!
கொத்துக் கொத்தாக உயிர்கள்
ஆகுதியான போது - அதில்
மகிழ்ந்து, 

முள்ளி வாய்க்கால் முற்று!

முள்ளி வாய்க்கால் முற்று
முடிந்து போகாத கூற்று
ஆப்பாவி மக்களின் பாவம்
அடங்காது அவர்களின் சாபம்

18 April 2017

கல்வியில் முன்னிற்கும் இலங்கைப் பெண்களின் ஊழியச்சந்தையின் நிலைப்பாடு

உலகலாவிய ரீதியில்; கிழக்கின் நாகரிகம் எப்பொழுதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது. பெண்னே குடும்பத்தின் தலைவியாகவும், அந்தக் குடும்பத்தின் பாரங்களை சுமக்கும் ஒருத்தியாகவும் இருந்து வந்துள்ளாள். அதனால்தான் பல கீழைத்தேய நாடுகள் பெண்களை தெய்வமாக வணங்கி வருகின்றமை ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது. 

இதனால் பண்டைக் காலத்தில் சமுகத்தில் அவர்கள் மதிப்பினையும், முக்கிய வகிபாகத்தினையும் கொண்டிருந்தனர். இந்த நிலை மேலைத்தேயத்தவர்களின் வருகையின் பின்னரே அவர்களது எழுத்துக்களால், சிந்தனைகளால் மற்றும் விமர்சனங்களால் மாற்றடைய ஆரம்பித்தது. அத்துடன் பல நாடுகளை அவர்கள் கைப்பற்றி ஆளத்துவங்கியதுடன் சமுக அந்தஸ்த்து ஆண்களிடம் கைமாறியது. இவர்கள் மதம், மற்றும் ஆயுதம் என்பனவற்றினை கருவியாக கையிலெடுத்து போராடியமையூடாக அவர்களை சமுகத்தில் ஆஐானபாகுவாக காட்டியது எனலாம்.

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?'  என்கின்ற கேள்விக்கு பதிலாக மனிதன் மனிதனாக, மனிதனுக்காக வாழுகின்றபோதுதான் பிறர் மனதில் நீங்காத ஞாபகத்தினை விதைத்துவிடுகிறான் என்பது பொது. இவ்வாறு அகமும் புறமும் நேர்மறையான முறையில் அனைத்து காரியங்களையும் செய்து, சாதித்து எமது பிரதேச மக்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தினைப் பிடித்து, மறைந்தும் மறையாமல் அனைவரதும் நன்மதிப்பினைப் பெற்று நிற்பவர்தான் இறைபதம் அடைந்த அமரர் பெ.வ.ஆறுமுகம் ஐயா அவர்கள்.

அன்னாருடன் இரண்டாவது தலைமுறையின் வரிசையில் பல காலம் கலை மற்றும் ஆண்மீகப் பயணத்தில் ஒருங்கே செயலாற்றியவன் என்ற முறையில், இவர் இன்றும் எவ்வாறு மக்கள் மனதில் நிலையாக நிற்கின்றார் என்பதனை அன்னாரது கலை, கல்வி மற்றும் சமூக ஆண்மீகப் பணிகளின் ஊடாக நிறுவலாம் என எண்ணுகிறேன்.