ADS 468x60

26 February 2012

மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கிகாரம்...

மட்டக்களப்பு பேச்சித் தமிழுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் அங்கிகாரம் வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் ஒன்றல்ல. மட்டக்களப்பு தமிழர்கள் எவ்வாறு பூர்வீகக் குடிகளோ அவ்வாறே அவர்கள் பேசும் தமிழ் செந்தமிழாகப் போற்றப்படுவதற்க்கு வடமொழிக்கலப்பு மிகவும் குறைவான இருப்பது ஒரு காரணமாகும் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வெளியான மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர்-1996 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழர்கள் பேசும் தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இழையோடி நிற்ப்பதனை சான்றாதாரத்துடன் நிரூபித்திருக்கும், இலங்கையில் ஆரம்ப குடிகளாக இங்குள்ள தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதனை வாகரை வாணன் அவர்களின் '"பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்' எனும் நூலை ஆதாரமாகக்கொண்டு ஆணியடித்துச் செல்ல இதனை வரைகிறேன்.

06 February 2012

"புதிர் உண்ணுதல்" பாரம்பரியத்தின் சுவாரசியம்தான் என்ன?

தமிழர்களின் வாழ்வு; பொருளாதாரம், அரசியல், சமயம் மறறும் கலாசாரம் என்பனவற்றுடன் ஒன்றொடொன்று பிரிந்துவிடாமல் பிணைந்திருப்பது அதன் வரலாற்று முதிர்சியை புடம்போட்டுக் காட்டுதுங்க..

இன்று தைப்பூச திருநாளுங்க...உன்மையில் நம்ம தமிழர் பண்பாடு மற்றய இனத்தினரையும் விரும்பவைக்கும் வகையில் அதில காணப்படுகின்ற பண்பாடு,  நாகரிகம் மற்றும் ஒழுக்க விழிமியங்கள் சிறப்பாக அமைந்திருக்கு..

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

01 January 2012

இறந்த காலக் காயங்கள், எதிர்கால மாயங்கள் பற்றி சிந்தித்து கையில் இருக்கும் தங்கக் தருணங்களை தவற விடாதீர்கள்'

'கடந்த காலத்தில் எந்தச் சாதனையும் நிகழ்த்தப்படவில்லை நிகழ்ந்ததெல்லாம் இந்த விநாடியில்தான். வருங்காலத்தில் எதுவும் நிகழப்போவதில்லை. நிகழ்வதெல்லாம் இந்த விநாடியில்தான்!' என்கிறார் எக்ஹர்ட் டோல்.  பல பேர் நாம் சென்றவற்றை நினைத்தே இருக்கின்ற விநாடியை, சந்தோசத்தினை நான் உட்ப்பட இழந்து விடுகிறோம் அல்லவா!. என எக்ஹர்ட் டோல் குறிப்பிடுவதனை அவர் அவரது “The Power of Now”  எனும் நூலில் குறிப்பிடும் விடயத்தினை புதிதாக பிறக்கும் புது வருடத்தில் நமது வாழ்க்கைக்கு பொருத்தி பார்க்கவே  இந்த கட்டுரையை எழுதுகிறேன். 

'தோல்வி என்று எதைச் சொல்வீர்கள்? எதிராளியுடன் போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியாத புள்ளி, தோல்வி. ஆந்த விநாடியில் அதை நாம் ஏற்றுக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? வேற்றிக்காகத்தான் திட்டமிடுகிறோம், போராடுகிறோம். ஆனால் அதையும் மீறி நம் கணக்கு தப்பும்போது எதுவாயினும் எதிர்கொள்வதுதானே சமயோகித நிதர்சனம்! தோல்விகளிடம் மட்டுமே நாம் சரணாகதி அடையத் தேவையில்லை. வெற்றி, வேதனை, சாதனை, சோதனை போன்ற அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாம் சரணாகதி அடையப் பழக வேண்டும். என்கிறார் எக்ஹர்ட் டோல்.

25 December 2011

அனர்த்த முன்னாயத்த முனைப்பில் மட்டக்களப்பில் தேசிய பாதுகாப்பு தினம்

உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் இயற்க்கை அனர்த்தம்; ஒரு பொதுவான விடயமாக இருந்து வருகின்றது.  அபிவிருத்தி அடையாத  நாடுகளை மட்டுமல்ல , அபிவிருத்தி அடைந்த மேற்குலக நாடுகளையும் அடிக்கடி இயற்க்கை அனர்த்தங்கள் விட்டு வைக்கவில்லை, இருப்பினும் அவற்றின் 90 விகிதமான இயற்கை அனர்த்தங்கள், அதனால்; வரும் பாதிப்புகள், உயிர் இழப்புகள் என்பன மூன்றாம் உலக நாடுகளிலேயே ஏற்ப்பட்டு வருகிறது. இன்று இலங்கைத் தீவு இலகுவாக அனர்த்தங்களுக்கு பாதிக்கப்படும் நாடாக மாறியுள்ளது. இவை கடந்த இரண்டு தசாப்த காலத்தில் பாரிய வெள்ளம், சுனாமி, மண்சரிவு மற்றும் வறட்சி என்பனவற்றினால் மக்களை பொருளாதார சமுக அடிப்படையில் ஒரு படி பின்னோக்கி தள்ளியள்ளது.

18 December 2011

திகிலிவெட்டை மக்களும், மண் வாசனையும்..


கொடுத்துச் சிவந்த கைகள் போல வளங்கொழிக்கும் கிழக்குப் புற தழிழ் விழை நிலங்களையும், தழராத சுறுசுறுப்பான படுவான் மக்களையும் பார்த்து வியக்காதவர் யாரும் இல்லை. மட்டக்களப்பின் சிறப்பே வந்தோரை வாழவைக்கும் இன்முகமும், ஊரெங்கும் குளிர்பரப்பும் வாவிகளும் தான். இப்படி சிறப்புற்று விளங்கும் மீன்பாடும் மட்டு நகருக்கு வடக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் கிரான் பிரதேச செயலக எல்லைக்குள் சந்திவெளிக்கு அப்பால் குறிஞ்சி, முல்லை மருதம் என்று மூன்று நிலங்களும் ஒருங்கே அமைந்து, பச்சை ஆடைபோற்றி படர்ந்து பூத்துச் சிரிக்கும் எமது தாய் மண்ணான 'திகிலி' என்று அம்மக்களால் செல்லமாக  அழைக்கப்படும் திகிலிவெட்டை எனும் கிரமத்தின் 'வாங்கோ' என்று வரவேற்க்கும் மக்கள், குழந்தைகள், மாடுகள், ஆடுகள், பச்சை பசேல் என்ற பயிர்ச் செடிகள் இன்னும் நிறையவே கண்டேன்.

11 December 2011

இரக்கமற்றவள்.


நீ இரக்கமற்றவள் என்பதை- என்
அன்புப் பரிசல்களை
திரும்பத் தந்து காட்டாதே!
உன்னிடம்
விட்டு வைத்துள்ள-
எனது
அப்பாவி இதயத்தை,
ஒரு மூடி நஞ்சு கொடுத்து
கொண்டு விடேன்!

அது இன்னும்
உன்னைப் போல்
அலையும்
முகமூடிக்காரர்களுக்கு
சத்திரமாய்
அமையும் பெண்ணே!

09 December 2011

விரும்புகிறேன்.....


விரும்புகிறேன்.....
போலியற்ற முகங்களை,
புன்னகைக்கும் உள்ளங்களை,
கேலி செய்யாத நட்பை,
கீழ்த்தரம் இல்லாத வாழ்க்கையை....

விரும்புகிறேன்.....
கடவுளைக் காண - உன்மை,
காதலி கிடைக்க,
பேர் சொல்ல சாக,
பேச்சில் உன்மையை.....

08 December 2011

நான் ஒரு பொறுக்கி

















வயலில் கதிர் பொறுக்கி
வாய்க்காலில் மீன் பொறுக்கி
அரிசியில் நெல்லுப் பொறுக்கி
அரிக்குமேலைக்குள் கல்லுப் பொறுக்கி

கல்லூரியில் அறிவு பொறுக்கி
காதலில் இதயம் பொறுக்கி
வலைத்தளத்தில் தகவல் பொறுக்கி
வாத்தியாரிடம் பாடம் பொறுக்கி

காசி பொறுக்கி- மாஸ்டர்
கோசு பொறுக்கி- ஆசான்
ஆசி பொறுக்கி
நேரம் பொறுக்கி- பரீட்சைக்காய்
வாரம் பொறுக்கி
ஏய் பொறுக்கி பீ பொறுக்கி
எடுத்ததெல்லாம் பொறுக்கி

அரசியலில் குப்பை பொறுக்கி
ஆண்மீகத்தில் அமைதி பொறுக்கி
வெட்டியாய் வேலை பொறுக்கி
வேதனையில் வேண்டாதது பொறுக்கி
வாழ்ந்ததெல்லாம் பொறுக்கி- இதனால்
வாங்கிய பேரும் பொறுக்கி.