சிறுவர்களின் உள, உடலியல் ரீதியான வளர்ச்சியில் முன்பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனி மனித ஆளுமையிலும் சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கினை வளர்ப்பதிலும் முன்பள்ளிக் கல்வி என்பது பெறும் முக்கியத்துவமும் தேசிய -சர்வதேசிய ரீதியில் உணரப்பட்டவையாகவும் காணப்படுகின்றது. நாட்டின் பிற சமுக சிறார்களுக்கான முன்பள்ளி ஏற்பாடுகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வரும் நிலையில் மட்டக்களப்பின் முன்பள்ளி நிலை மிக மோசமான கட்டத்திலேயே இருப்பது கவலைக்குரியது. இவை முன்பு மொன்டிசோரி, நர்சரி, பாலர் பாடசாலை என்றெல்லாம் வழங்கப்பட்டு தற்போது முன்பள்ளிகளாக தொடர்கின்றது.31 December 2017
எல்லைக் கிராமங்களில் சிறுவர்களின் கவலைக்கிடமான போஷாக்கு மட்டம்.
சிறுவர்களின் உள, உடலியல் ரீதியான வளர்ச்சியில் முன்பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனி மனித ஆளுமையிலும் சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கினை வளர்ப்பதிலும் முன்பள்ளிக் கல்வி என்பது பெறும் முக்கியத்துவமும் தேசிய -சர்வதேசிய ரீதியில் உணரப்பட்டவையாகவும் காணப்படுகின்றது. நாட்டின் பிற சமுக சிறார்களுக்கான முன்பள்ளி ஏற்பாடுகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வரும் நிலையில் மட்டக்களப்பின் முன்பள்ளி நிலை மிக மோசமான கட்டத்திலேயே இருப்பது கவலைக்குரியது. இவை முன்பு மொன்டிசோரி, நர்சரி, பாலர் பாடசாலை என்றெல்லாம் வழங்கப்பட்டு தற்போது முன்பள்ளிகளாக தொடர்கின்றது.26 December 2017
மறக்கவில்லை உன் வஞ்சக்குணத்தை!!

கடல் நான் அறிந்த மட்டில்
நீதான் உலகின் முக்கால்
அறியாதவற்கு நீயே சிக்கல்
உன்னில் பயனித்தே நாடுகளைக் கண்டான்
உன்னை நம்பியே உணவுகளை உண்டான்
பவளமும், முத்தும் பரிசளித்தாய்
பசுபிக்கடலில் தீவுகள் தந்தாய்
25 December 2017
"உங்களை ஆதரிப்பதில் வேலை இல்லை" இவை இல்லாவிடின்!
02 December 2017
மண்ணின் கனவுகளைச் சுமந்துவரும் 'ஊர்க்குருவியின் உலா'
நடைபெற்று முடிந்த புத்தக வௌியீட்டு நிகழ்வினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினர், அதன் செயலாளா் ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான் வே.தவராசா அவர்கள் தலைமையில், இனிதே நடாத்தி முடித்து வைத்தனா்.
தமிழ் சங்கத்தினரின் தட்டிக்கொடுப்பினையும், பாராட்டினையும் முழு உதவியினையும் நான் மனதில் இருத்தி நன்றி கூற விரும்புகின்றேன்.
தொடர்ந்து மழை பொழிந்து கொண்டிருந்தது, ஆனால் எமது நிகழ்வில் மாத்திரம் காலையில் இருந்து மாலை வரை வெறும் இதமான கோடையாக வெயில் எறித்தது. வர்ணபகவானின் ஆசிதான் எம்மை அன்று வடிவாக நடாத்த உதவியது. நன்றி இயற்கையே! மனிதர்களை விட உன் உணர்வு பெரியதுவோ!
27 November 2017
எனது ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறு வட்டு வெளியீடு.
எனது 'ஊர்க்குருவியின் உலா' எனும் கவிதை நூல் வெளியீடானது 2ம் திகதி டிசம்பர் மாதம் 2017 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி கலையரங்கில், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ளது.
இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தன் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பிரதி தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா அவர்களிடமும், அடுத்த பிரதி ஜனாதிபதி சட்டத்தரணியும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுமேந்திரன் அவர்களிடமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
20 November 2017
ஏழ்மையைக் காரணம் காட்டிப் படிக்க முடியவில்லையென்பது சமுதாயக் குற்றமாகும்!
இன்றய சிறந்த மாணவர்கள் நாளைய நற்பிரஜைகள், நாம் அனைவருக்கும் கல்வி என்னும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் அதுபோல் நாம் கல்வியின் மகத்துவத்தினை நன்கு அறிந்துள்ளோம்.
மொட்டுக்கள் மலர்ந்து விரியும் பொழுது மணம் பரப்பும், அதே போலவே மாணவர்களும் சிறந்த கல்வியை பெற்று திகழும்பொழுது அச்சிறப்பு நாட்டையே மேன்மையுறச் செய்யும். மாணவர்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தவும், பாடசாலையின் அவசியத்தினை எடுத்துக்கூறவும் சர்வதேச மாணவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஆண்டுதோறும் நவம்பர் 17இல் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. இன்று சர்வதேச மாணவர் தினமாகும். எமது தமிழ் பிரதேசங்களிலும் மாணவர்கள் கல்வியில் ஈடுபடுவதனை அதிகரிக்க அனைவரும் ஒன்றாகுவோம். சுரவணையூற்று பாடசாலைச் சிறார்களை சந்தித்தபோது
16 November 2017
பெண்களின் அரசியல் மற்றும் தொழில்படையில் அதிகரிப்பின் அவசியம்.
வெறும் 10% விகிதம் தான் அரசியலில் பெண்களின் பங்களிப்பு இலங்கையில் இருந்து வருகின்றது. அத்துடன் மொத்த ஊழியப்படையில் 32% விகிதமாக மாத்திரம் இவர்களது பங்களிப்பு கணிக்கப்பட்டுள்ளது. இதனை குறைந்தது 40% விகிதத்துக்கு 2020 ஆண்டளவில் உயர்த்த வேண்டும் என்பதே பிரதமரின் குறிக்கோளாகும். என கௌரவ பா.உறுப்பினர் #ரோசி #சேனநாயக்க அவர்கள் பெண்களின் முயற்சியாண்மை பற்றி #BMICH இல் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
13 November 2017
கிழக்கிலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்திய தமிழ் இந்து எழிச்சி விழா 2017.
இருமருங்கும் குளங்கள் எங்கு சென்றாலும் வளங்கள் வருவிருந்து பார்த்து வாழவைக்கும் அருமருந்த மக்கள் வாழும் படுவானில் எமது பிரதேசங்களில் விழிப்பிழந்து போகும் எமது பாரம்பரிய அடையாளத்தினை செழிப்புறவைக்கும் நிகழ்வு, நல்ல மனிதர்கள் வாழ்ந்து நாட்டுக்கு தொண்டு செய்த வெல்லாவெளியில் இனிதே எழுச்சியுடன் நடந்தேறியது.





