ADS 468x60

09 April 2020

மூடிய பொருளாதாரத்தை புதிய தலைமுறைக்கு கற்றுத்தரும் கொரோணா.

இன்று உருவாகி இருக்கும் உலக பொருளாதார மந்தம் ஏற்கனவே எமது நாட்டில் இறக்குமதி அதிகரித்து அதனால் ஏற்பட்ட சென்மதி நிலுவை நெருக்கடி அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உதவியாகப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவது ஏற்கனவே முடங்கியுள்ளது இந்தச்சூழலில் சர்வதேச நாணயங்களுக்கு ரூபாயில் தொடர்சியாக ஒரு சரிவைத் தூண்டி வருகின்றது. இவ்வாறு எல்லாவிதத்திலும் ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்தினை கொவிட்-19 எனும் கொடிய கொலையாளி புதிதாகவந்து மேலும் ஒரு அடியினை பொருளாதாரத்தின்மீது போட்டிருக்கின்றது. இது 'மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல்' உள்ளது.


ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் கடந்த ஆண்டு சுற்றுலா வருவாய் 18 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததன் மூலம் ஏற்கனவே இருந்த மந்தமான பொருளாதாரம் மேலும் 4.3 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டாலராக பின்னடைவு அடைந்தது. அதற்கு மேல், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து வழமையாகக் கிடைக்கும் வருமானத்தில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் அனுப்புவது குறைந்தது, இந்த நிலையில் தற்போதைய மொத்த வருமானமாக 5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, இது இதற்கு முன் ஒரு காலத்தில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

கொவிட்-19 அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கிய துறையையும் பாரியளவில் தாக்கியுள்ளது: குறிப்பாக தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி வருவாய்;, இலங்கை தொழிலாளர்கள் பணிபுரியும் மூன்று நாடுகளிலிருந்து பணம் அனுப்புதல் குறைந்தமை (தென் கொரியா மற்றும் இத்தாலி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, மேற்கு ஆசிய பொருளாதாரங்களை சில காலமாக பின்னடைவு செய்யும் குறைந்த உலகளாவிய எண்ணெய் விலைகள் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன) மற்றும் சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி ஆகியவை குறிப்பிடத்தக்கன.

இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி மாற்றீடுகள் தொடர்பான  ஒரு தீவிரமான நடவடிக்கையே நாம்  காண்கிறோம், இந்த நிலை 1977 இல் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதிலிருந்து இல்லாமல் போனதில் இருந்து மீண்டும் கொண்டுவருவதற்கு வழிவகுக்கும் ஒரு நிலையை இப்போது எல்லோரும் உணர்ந்து வருகின்றனர். அதாவது நமக்கு தேவையானவற்றை நம்மிடம் உள்ள வளங்களைப் பயன்படுத்தி நாமே தன்னிறைவை அடைதல்.

இலங்கையில் மலர்ந்த பதிய ஆட்சியின் பின்னர், இந்திய நாட்டிலிருந்து பெற்ற கடன்களை தள்ளிப்போடுமாறு பிரதமர் இந்திய அரசிடம் கேட்டபோது அங்கிருந்து அதற்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றின. அதேபோல் இலங்கை ஜனாதிபதியானதன் பின்னர் தனது முதல் பயணமாக பெய்ஜிங்கிற்குச் சென்றபோது சீன அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆந்த நேரம் பார்த்து ஆபத்தான கொவிட்-19 சீனாவில் இருந்தே பரவத்துவங்கியது. அதன்பின் இந்த விஜயத்தின் பிரதிபலனாக கடனாக் சீனா 500 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்தது, அது எப்படியாவது மீண்டும் ஒரு கடன் சுமையைச் சேர்ப்பதாக இருந்தாலும்;, இந்தக் கடினமான காலங்களில் நாட்டை இந்த ஆபத்தில் இருந்து மீட்க அந்தக்கடன் தொகை பெரிதும் உதவியாக இருக்கின்றது என்பதனை யாரும் மறுக்க முடியாது. இந்தவகையில் அனைத்து நாடுகளும் தங்களது எல்லைகளை வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மூடியுள்ள நிலையில் இலங்கையில் 1977 க்கு முந்தைய சகாப்தத்திற்குத் திரும்புவதை தவிர்க்கமுடியாமல் இருக்கும் வகையில் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்  கொவிட்-19 கொண்டுவந்துள்ளது.

மறுபுறத்தில் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் சுகாதாரத்துறை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் GMOA  (அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்) கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கான சரியான இடத்தில் அரசாங்கத்தின் உந்துசக்தியுடன் தெளிவாக உள்ளது. கமர் அன்ட் டான்ஸ் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இரு மாதங்கள் 'சமூக இடைவெளி' நடவடிக்கைகளுக்கு மக்களை அழைப்பு விடுப்பதன் மூலம், சிக்கல்கள் குறையும் அவ்வாறு குறையுமானால் படிப்படியாக அந்த நடவடிக்கைகளை திரும்பப பெறப்படும். 

இதனடிப்படையில் வைரஸ் பரவுதல் இல்லாமல்போகும்வரை மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வரை மக்களை ஒன்றுகூடாமல் வைத்திருப்பது அவர்களின் வாதம். இந்த நெருக்கடியில் நேரடியாகப் முன்னணியில் இவர்கள் இருந்து செயற்படுவதனால் சேவையாற்றுவதனால் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களும் மருத்துவமனைகளில் உள்ளவர்களும் இந்த கண்ணுக்கு தெரியாத எதிரியின் பாதிப்பை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர், அதனால் பல நாடுகளில் சுகாதார ஊழியர்கள் உயிரையும் இழந்திருக்கின்றனர். 

இந்த நிலையில் மேலும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அவர்கள் வலியுறுத்துவதனை நாம் புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் அவை அனைத்தும் ஒரு கட்டத்திற்கு மட்டுமே நடைமுறைக்குச் சாத்தியமாகலாம்.

இவ்வாறான ஒரு நெருக்கடிச் சூழலில் பொருளாதாரத்தை புறக்கணிக்க அரசாங்கத்தால் முடியுமா? ஊரடங்கு உத்தரவை கடுமையாக திணிப்பது பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்பது மறுப்பதற்கில்லை, இது 'ஆபரேஷன் வெற்றிகரமான பின்னர், நோயாளி இறந்த' நிலைமைக்கு வழிவகத்துவிடக்கூடாது. இந்த நெருக்கடி அரசாங்கத்திற்கு ஒரு குழப்பமாக இல்லாமல் இல்லை.

நாட்டின் முதுகெலும்பு என சொல்லப்படும் மலையகத் தோட்டங்கள் மற்றும் தொழில் சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊரடங்கு காலங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அனுமதி வழங்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளது. அதன்பின் அனுமதி வழங்கப்பட்ட எண்கள் மீறப்பட்டுள்ளதா என்று அவர்கள் அந்த பணியிடங்களை சோதனை செய்கிறார்கள். ஏற்கனவே உரிமம் பெற்ற மருந்தகங்கள் திறந்த நிலையில் இருக்க அவையும் அனுமதி பெற வேண்டும். ஆகவே நாட்டின் உற்பத்தியின் இயங்கு நிலையை உறுதிப்படுத்துவதுடன் மக்களை கொரோணா தொற்றில் இருந்து பாதுகாக்கவும் போராடும் அரசின் நிலை மிக மிக நெருக்கடியானது.

கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளிலும், வைரஸ் பரவுவதற்கான 'வளைவைத் சமாந்தரப்படுத்துவதில்' வெற்றிகரமாக, மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டு, கொள்முதல் செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டன. சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் திறமையான சோதனை, தேடிக்கண்டறிதல்;, தனிமைப்படுத்தல் மற்றும் உள்ழூர் பயணங்களுக்கு தடை விதித்தல் ஆகியவற்றால் நிலைமை கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருவேளை இலங்கை தொற்றுநோயியல் ரீதியாக இந்த பணியை இன்னும் செய்யவில்லை, இருப்பினும் இவற்றை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பி;க்கப்பட்டு ஏனைய நடவடிக்கைகளும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது மறுப்பதற்கில்லை.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் புள்ளிவிவரங்களை காவல்துறை நியாயப்படுத்த முயன்றால், எத்தனை பேர் உண்மையில் உணவு அல்லது மருந்தைத் தேடி வெளியில் வருகின்றவர்கள் பிடிபட்டுள்ளனர்   என்பதற்கு மாறாக குற்றச் சம்பவங்களில இந்தச் சந்தர்பத்தினைப் பயன்படுத்தி, காரணங்காட்டி எத்தனை பேர் தப்பித்துக்கொள்ளுகிறார்கள் என்பதை கண்டறிதல் முக்கியம். குறிப்பாக விவசாயிகள் என்ற பேரில் தேவைக்கில்லாமல் சுற்றித்திரிபவர்கள் இந்த நெருக்கடிச் சூழலில் ஆபத்தானவர்கள்.

அரசாங்கத்தை பலவீனமடையச் செய்துள்ள இந்த தொற்றுநோய்ப் பரவல் ஏழைகளையும், அரசு தலையிடாவிட்டால் வேலையை இழக்க நேரிடலாம் என கணக்கிடப்படும் இரண்டு மில்லியன் மக்களையும் பாதுகாப்பதில் தன்னை தற்காத்துக்கொள்ள முடியாதுள்ளது. இது ஏற்கனவே சமுர்தி (வறுமை ஒழிப்பு) பெறுநர்களுக்கு நிதி வழங்கலை அறிவித்துள்ளது. சமீபத்திய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி கூடுதலாக 1.5 மில்லியன் குடும்பங்களை அடையாளம் கண்டு விநியோகிக்கும் வழிமுறை தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவின் போது பாராட்டத்தக்க மகத்தான பணியாகும்.

இன்று மக்களின் நாளாந்த நுகர்வுக்கான மொத்தக்கேள்வி பலவீனமாக இருப்பதால், அரசாங்கம் இங்குள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து வைப்பாக இருக்கும் பெரும் சேமிப்பைத் தனது தேவைக்காகத் திரட்டலாம் அதுபோல் மிஞ்சியிருக்கின்ற நிலுவைத் தொகையை மத்திய வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம் அவ்வாறு பெற்ற அந்தப் பணத்தை அதிகமாக பணம் தேவைப்படுபவர்களின் கைகளில் விநியோகிக்கவும் முடியும். இவ்வாறு மக்களிடம் பணத்துக்கான மிகக்குறைந்த மொத்தக்கேள்வி மற்றும் அதிகமான உற்பத்தி வழங்கல் விநியோக சூழலில் பணத்தை அச்சிடுவதுதான் ஒரு வழி ஆனால் அவ்வாறு பண்ணுவதால் பணவீக்க விளைவுகள் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை ஒரு 'போர்க்காலச்சூழலில்' வைப்பது நாட்டினை அரசு பொருளாதாரத்தின் உயர்மட்ட கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது என்பதற்கு சமமாகாது. இது பொருட்களை தொடர்சியாக மக்களிடம் விநியோகிப்பதற்கான நீண்ட மற்றும் சிக்கலான விநியோகச் சங்கிலிகளை மட்டுமே புறக்கணிக்கும் அது பொருத்தமானதொன்றாக இராது. நடந்துகொண்டிருக்கும் உணவு விநியோகத்தில் கூட, விவசாய உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட ஒரு நுகர்வோர் தொகுதிக்கு மாத்திரமே அரசாங்கம் சந்தைப்படுத்தலினை மேற்கொள்ளுகின்றது. நாம் பொருட்களை அவசரஅவசரமாக வேண்டி வீட்டில் சேர்த்துவிடவேண்டும் என்ற பதட்டத்தின் மூலம் வரும் பீதியில் சமூக இடைவெளியைப் பேணவேண்டும் என்கின்ற தேவையை அது தோற்கடித்து விடுகின்றமை மற்றொரு ஆபத்தாகும்.

கோவிட்-19 காரணமாக எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் அளவில் குறையும் என்று அதிகாரப்பூர்வமாக மதிப்பிடப்பட்டாலும், 2001 க்குப் பிறகு முதன்முறையாக இலங்கை 2020 இல் பூஜ்ஜியம் அல்லது எதிர்மறை வளர்ச்சி விகிதத்தைக் காணும் என்று பலர் அஞ்சுகின்றனர்.

இது ஒரு இயற்கை பேரழிவு, இது ஒரு தேசிய பேரழிவு. 1978 சூறாவளி, 2004 சுனாமி, வறட்சி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், ஏன் மூன்று தசாப்தங்களாக தொடர்ந்த 'போர்' கூட மிகச்சிறியதாக இருக்கும். ஆகவே இந்த பொருளாதார பேரிழப்பின் பின்னணியில் பொருளாதாரத்தை பாதுகாப்பாக எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக மீண்டும் திறந்துவிடுவதென்பது பொருளாதார மீட்சிக்கு ஒரு முன்னேற்பாடாக இருக்கும்.

0 comments:

Post a Comment