ADS 468x60

13 April 2020

அனைவருக்கும் பாதுகாப்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த வார இறுதியில், இலங்கையர்கள் தங்களது அனைத்து இயக்கங்களை தடைசெய்த உலகளாவிய தொற்றுநோயின் இருள்சூழ்ந்த மேகத்தின் கீழ் முக்கியமான தேசிய புத்தாண்டு மற்றும் மத நிகழ்வுகளை கொண்டாடுகிறார்கள். உண்மையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட குறுகிய காலங்களைத் தவிர, இவர்கள்; வீடுகளில் இருந்து ஒருபோதும்; வெளியேற முடியவில்லை, அதுவும் சில பகுதிகளில் மட்டுமே அதுமுடியுமாக இருக்கின்றது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று மலர்ந்திருக்கின்றது, இது நாட்டின் மிக முக்கியமான தேசிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தப் புத்துண்டு முதன்மையாக சிங்கள பௌத்தர்களாலும் மற்றும் தமிழ் இந்துக்களாலும் கொண்டாடப்படுகிறது, ஆனால் பல ஆண்டுகளாக இது இன மதம் கடந்து காலப்போக்கில் நாட்டின் அனைவராலும் மகிழ்ந்து கொண்டாடும் ஒன்றாக மாறியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் புதுவருடமானது இயற்கையுடனான நமது மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டாடுகிறது. இது சூரியன் மீன இராசியில் இருந்து முதல் மேஷ இராசிக்கு இடமாறும் தினத்தைக் குறிக்கின்றது. குறிப்பாக தமக்கு பாதகமில்லாமல் அறுவடைக்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்ததன் விளைவாக புத்தாண்டு மரபுகள் உருவாகின. உண்மையில், ஏப்ரல் மாதத்திற்கான தமிழ் அர்த்தம் வசந்தம் மற்றும் அதஷ்டம் என்பதைக் குறிக்கிறது, இது சமஸ்கிருத மூல வார்த்தையான 'பாக்யா' என்பதிலிருந்து உருவானது.

இந்த ஆண்டு, இந்த பண்டிகைகளை நாம் வீட்டில் இருந்தவாறு கொண்டாடும்போது அதனை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும். இது எங்கள் குடும்பங்களுக்குள் பாதுகாப்பினையும் அரவணைப்பினையும் புதுப்பிக்க வேண்டிய நேரம். 

இப்பொழுது அனைவரும் குடும்பத்துடன் உட்காந்து உணவு பரிமாறும் பாரம்பரியம் மறைந்துவிட்ட ஒரு சமூகத்தில் இது மிகவும் முக்கியமான தருணம். இடைவிடாமல் பணத்தைத் தொடர்து தேடுதல், அதனால் வரும் அழுத்தங்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மாறுபட்ட ஆர்வம், இடைவிடாத வேலைப் பழு ஆகியவை காரணமாக இன்று ஒருவருக்கொருவர் பேசியவாறு மகிழ்சியுடன் உணவை ஒரு இடத்தில் இருந்து உருசித்து உண்ண முடியவில்லை ஏனெனில் அதற்கான நேரம் இருப்பதில்லை அவர்களுக்கு. அல்லது இரவு நேரங்களில் தொலைக்காட்சியில் அனைவரும் உறைந்து ஒருவருடன் ஒருவர் பேசாமல் இருந்துவிடுகின்றனர். அந்த இடைவெளியை நிரப்ப இது ஒரு நல்ல தருணம்.

நவீன வாழ்க்கை முறைகள் காரணமாக குடும்ப வாழ்க்கை முறை கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளன அல்லது தொலைக்கப்பட்டுள்ளனஇ ஆனால் குடும்பங்களை ஒன்றாக வைத்திருக்க நாம் பல விடயங்களை செய்யவேண்டும் என்பதை வீட்டில்இருந்தவாறான வருடக்கொண்டாட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.

அதுமட்டுமல்ல அடித்தட்டு மக்கள் நாளாந்தம் நடுத்தர மக்கள் அசாதாரணமாக இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளையே எதிர்கொள்ளுகின்றனர் என்ற பாடம் இப்புதுவரும் உணர்த்தியுள்ளது. நம்மைப்போல் பிறரை நேசிக்க கற்றுக்கொடுத்திருக்கும் பாடம் எதிர்காலத்தில் துன்பமில்லாத சமுதாயத்தினை உருவாக்குவதற்கான அடித்தளமாக இருக்கும் என நம்புகிறேன்.

நண்பர்களே நாம் ஒவ்வொருவரும் இந்த அசாதாரண சூழல் காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் அசைய முடியாதவாறு இருக்கின்றோம். அதை செய்வதுதான் இந்த இக்கட்டான சூழலை இலகுவாக்க அல்லது தணிக்க சிறந்த மார்க்கமாகும். இந்த நிலையில் நாம் இக்கட்டான சூழலில் அவதியுறும் மக்களுக்கு உதவ முடியாமல் இருப்பதை எண்ணி வருந்துகிறேன். இருப்பினும் நமது ஒன்றுதிரண்ட சக்தியால் நிச்சயம் எதிர்காலத்தில் மாபெரும் முண்டுகோலாக இருப்போம் என்ற நம்பிக்கை பெருமளவு இந்த புதிய வருடத்தில் உதயமாகியிருக்கின்றது.
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே இந்த கொடிய ஆபத்தை வெற்றிகொள்ளலாம் ஆகவே ஒன்றிணைவோம். கட்டியெழுப்புவோம். அனைவருக்கும் பாதுகாப்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

0 comments:

Post a Comment