ADS 468x60

12 April 2020

ஊரடங்கு காலத்தில் புதுவருடம் பிறப்பது வரலாற்றில் முதல்தடவையல்ல! #COVID19

இந்த பண்டிகை காலங்களில் நாடு ஊரடங்கு உத்தரவின் கீழ் இருப்பது சமகால வரலாற்றில் முதல் தடவையல்ல. 1971 ஆம் ஆண்டில், ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கிய தெற்கு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட தூண்டுதல் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தியது.
அதுபோல மூன்று தசாப்த கால வடகிழக்கு கிளர்ச்சியின் போது ஒரு முறை அல்ல பலதடவைகள், பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அனைத்து தீவுக்குமான ஊரடங்கு உத்தரவின் கீழ் நாட்டோடு சீர்குலைந்தது.

இம்முறை முழு இலங்கைத்தீவும் சொந்தக் காணிக்குள் சுருண்டு கிடக்கின்றது. இருந்தும் ஊரடங்குச்சட்டம் இயற்கையின் மகிழ்சியை இம்முறை கெடுக்கவில்லை. ஓளிமயமான வசந்தகாலப் பூக்களான கமுகு, மா, முந்திரிகை எல்லாம் பூத்து வாசம் வீசுகின்றது. எங்கள் மாமரத்தின் கிளைகளில் அமர்ந்து குயில்களெலாம் அழகாகக் கூவ ஆரம்பித்து விட்டன,  ஆனால் பாடும் எமது குயில் பறவை இந்த ஆண்டின் 'ஆரோகணத்தினை' வேறு அவரோகணத்தில் பாட ஆரம்பித்துள்ளது. தங்களது மகிழ்சியை காண முடியவில்லை என்ற சோகத்தில்..

ஈஸ்டர் சண்டே ஞாபகங்கள்

இன்று ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுகிறார்கள், இது மரணத்தின் வெற்றியாகும். நம்பிக்கை மற்றும் புதிய வாழ்க்கையின் மீட்சியினுடைய ஈஸ்டர் செய்தியானது பயம் மற்றும் நிச்சயமற்ற இந்த காலங்களையும் வென்று நிற்கும். திருச்சபை நாட்காட்டியில் இந்த மிக முக்கியமான நிகழ்வைக் கொண்டாட உலகெங்கிலும் உள்ள தேவாலயங்கள் வழக்கமாக நிரம்பி வழியும். ஆனால் இந்த ஆண்டு, கொவிட்-19 தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களுக்குள் சுருங்கிவிட்டது.

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த மிருகத்தனமான குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் ஒரு நாள் இன்று. ஆனால் இந்த நிலையில் இலங்கையர்களுக்கான ஈஸ்டர் ஞாயிறு கடந்தவரும் ஏற்பட்ட அதிர்ச்சி, அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துன்பம், அவர்களுடைய பொருளாதாரம் என்பனவற்றுடன் இன்று நாட்டில் ஏற்பட்ட பேரழிவின் விளைவுகள் எல்லாம் சேர்த்து இன்னும் இவர்களை ஆழமாக பாதித்துள்ளது.

ஒரு வருடம், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பராமரிப்பதற்காகப் போராடும் குடும்பங்கள், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும்போது, அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு, பொருள் மற்றும் அன்பு அரவணைப்பு தேவைப்படுகின்றது. இந்த நிலையில் நாட்டை ஆக்கிரமிக்கும் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்த்துப் போராடும் இந்த இக்கட்டான சூழலில் அவர்களை மறந்துவிடக்கூடாது.

உலக சுகாதார வாரம் அனுஷடிப்பு

இந்த வாரம் உலக சுகாதார தினமாகவும் குறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் ஆரோக்கியம் என்பது நம் காலத்தின் முக்கிய பிரச்சினை. கொவிட்-19 வைரஸ் ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுதத்தி வருகின்றது, மேலும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் பாதித்து கோடிக்கணக்கானவர்களின் வாழ்வில் அது நீங்கொணா துயரத்தினை விதைத்து வருகின்றது. இந்த நெருக்கடி மக்கள் சாதாரணமாக வாழும் இயல்பு முறையை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

உலகின் சுகாதார நிகழ்ச்சி நிரலை இயக்கும் பொறுப்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக சுகாதார ஸ்தாபனம், கொரோனா வைரஸ் ஒரு உலகளாவிய தொற்றுநோய் என்று உலகுக்கு எச்சரிக்கை செய்வதில் தாமதப்படுத்தியதற்காக சில கடுமையான குறைபாடுகளுக்கு உட்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்தது.

அர்பணிப்புள்ள பணியாளர்களும் தலைமைத்துவமும்

இருப்பினும் எமது சிறந்த அரச தலைமைத்துவத்தின் நடவடிக்கையால் அவை பாரிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்ற இந்த நேரத்தில் அதற்கு துணையாக அர்பணிப்போடு தம்மை தியாகம் செய்து மக்களைப் பாதுகாக்க களத்தில் நிற்கும் இந்த நாட்டில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள், தாதியர்கள்; மற்றும் சிறு குறிப்பாக தேசிய தொற்று நோய்கள் ஸ்தாபனத்தின் ஊழியர்கள்;, வெலிகந்த, முல்லேரியா மற்றும் ஹோமகம, மருத்துவமனைகளில் இருந்து கடமையாற்றும் அடிமட்ட ஊழியர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவ புலனாய்வு மற்றும் உள்ளூர் பொலிஸ், துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் இறுதியாக 1990 ஆம்புலன்ஸ் சேவைப் பணியாளர்கள் ஆகியோரின் விடாத அர்பணிப்புள்ள சேவையினால் கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிரான போரில் இவர்கள் அனைவரும் நாட்டுக்காக ஈடுபட்டு வருகின்றனர். ஆகNவு எமது புத்தாண்டில் மக்களின் ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கு நல்வாழ்த்துக்கள் முன்பை விட இப்போது அதிகம் அதிகம் தேவைப்படும் தருணம்.

நிகழ உள்ள உலக மாற்றம்

இவ்வாறான நிலையில் இவை முடிவுக்கு வந்தாலும் இதன்பயனால் பல தொடர்சியான இடர்கள் காத்திருப்பதாக பல உலக அதிகாரிகள் ஆரூடம் கூறிநிற்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அனைத்து உலகத் தலைவர்களையும் அனைத்து யுத்தங்களையும் 'போர்நிறுத்தம்' செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

கொவிட்-19 இற்கு எதிராக ஆரம்ப வெற்றியைப் பெற்ற ஈரான், இது கொரோனா வைரஸை மட்டுமல்ல, அமெரிக்கா விதித்த 'மனிதாபிமானமற்ற மற்றும் அநியாயத் தடைகளின் வைரஸையும்' தோற்கடிக்கும் என்றும், தயக்கமின்றி மேற்கு நாடுகளால் ஆதரிக்கப்படும் என்றும் கூறுகிறது. மேற்கு ஆசியா, சிரியா, ஜெமன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான இராணுவ எந்திரத்தின் துப்பாக்கிகள்; அமைதியாகிவிட்டன. டிரில்லியன் டாலர் இராணுவ வரவு செலவுத் திட்டங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன இந்த சக்திவாய்ந்த நாடுகள் தங்கள் நிதியுதவியின் கீழ் உள்ள சுகாதார அமைப்புகளை ஏன் புறக்கணித்தன? இப்போது சீனாவிலிருந்து ட்சிசன் சிலிண்டர்களையும் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் மருந்துகளையும் தேடி வருகின்றன.

எவ்வாறாயினும், இந்த நெருக்கடி உலகத்தையே அச்சுறுத்திவிட்டு என்றோ ஒருநாள் விலகிச் செல்லும்போது, இந்த நாடுகள் 'உலகின் காவலர்களாக' இருக்க விரும்பும் பழைய வழிகளுக்குத் திரும்பிச் செல்லும் என்பதே உண்மை. ஆனால் மற்றொரு நெருக்கடி எம்முன்னே உள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்  அதுதான் காலநிலை மாற்றம்.

தொற்றுநோயால் மிகவும் மோசமாக தெற்காசிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பிடும் பொழுது ஒரு சிறு பகுதியே இருந்தாலும், தெற்காசியாவை மேற்பார்வையிடும் உலக வங்கியின் துணைத் தலைவர் ஒரு வலைப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது, மிக மோசமான நிலை இன்னும் பிராந்தியத்திற்கு வரவில்லை என்றும் அவ்வாறான ஒரு நிலை வந்துவிடுமோ என தான் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த தொற்றுநோய் நெருக்கடியின் பிரதிபலனாக இங்கு மில்லியன் கணக்கானவர்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்று வங்கி நம்புகிறது அத்துடன் தெற்காசியா முழுவதும் உள்ள அரசாங்கங்களுக்கு உதவ 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இது உருவாக்கியுள்ளது. 

இவ்வாறு பல சவால்களைச் சுமந்த ஒரு வருடமாக இம்முறை மலர இருக்கும் 2020 தமிழ் சிங்களப் புத்தாண்டு அமைதியும் ஆரோக்கியமும் பாதுகாப்பும் நிறைந்த ஆண்டாகவும் அன்பு கருணை உதவி போன்ற மனப்பாங்கை அதிகரிக்கும் ஆண்டாகவும் மலரவேண்டும் என எல்லாம் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

0 comments:

Post a Comment