ADS 468x60

11 April 2020

இன்றய உணவுத்தட்டுப்பாடு அன்றய நீர்வள நாகரிகத்தை நினைவுபடுத்துகின்றது. #COVID-19

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இலங்கையர்கள் 'உணவுப் பற்றாக்குறையை' சந்தித்து வருகின்றனர். உணவுத்தட்டுப்பாடானது புதிதாக இந்த வைரஸ் தொற்று முடக்கத்தினால் மாத்திரமல்ல அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் காரணமாக வரும் வரட்சி மற்று வெள்ளப்பெருக்குக் காரணமாகவும் அவை ஏற்பட்டு வந்துள்ளது. எமது நாட்டினுடைய பொருளாதார நிலையங்களில் கொணடடுவருகின்ற காய்கறிகள் அழுகக்கூடும் என்று ஏகப்பட்ட கதைகள் பரவி இருந்தாலும்;, மக்கள் சுகாதார விதிமுறைகளை சரிவரப் பின்பற்றாததாலும் அவற்றை மூடுவதற்கு அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டியிருந்தது.


இன்று நாம் காண்பதெல்லாம் நாம் கஷ்ட்டப்பட்டு உருவாக்கிய உணவுப்பொருட்களின் வீண்விரயமாகும்;. இதுபோன்ற நிலை கடந்த காலங்களில் நாம் கேள்விப்பட்டதில்லை, ஏனென்றால் அன்று இவ்வாறான கடினமான காலங்களில் எப்படி நாம் உயிர்வாழ்வதற்காக உணவு மற்றும் பணத்தை சேமிப்பது என்பதை எமது மக்கள் அறிந்த, தெரிந்த ஒரு நாடு இது.

இலங்கையர்கள் காலாகாலமாக அரிசியை பிரதானமான உணவாக உண்பவர்கள்.  ஆனால் தற்போதைய தலைமுறை உடகாந்த இடத்தில் இருந்து வேலை செய்வதனால் அரிசியினை உணவாகச் சாப்பிடுவதில் விருப்பம் இல்லாமல் திணறலாம் ஆனால் அன்று  களத்தில் நின்று சுறுசுறுப்பான விவசாய நடைமுறைகளில் ஈடுபடுபவர்களுக்கு அந்த கலோரிகளை எரிக்க அல்லது சமிபாடடயவைக்க அத்தனை பிரயத்தனம் இருந்திருக்கவில்லை. அவர்களுக்கு அந்த அளவு உணவுதான் தேவையாக இருந்தது அந்த வேலைகளுக்கு.

எமது பண்டைய இலங்கையர்கள் அடுத்த நாளைப்பற்றி நினைத்தார்கள்; வெள்ளம் மற்றும் பஞ்சம் போன்ற மிக மோசமான காலம் மாறிமாறி வரலாம் எனக்கணித்து அதற்கான ஆயத்தத்துடன் வாழ்ந்தார்கள். அதற்காக அவர்கள், எவ்வாறு தேவையானவற்றினை சேமித்து? அவர்கள் எப்படி முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தார்கள்? என்பதனை பற்றி முந்தைய விவசாய சமூகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இந்த விவசாயிகள் எதிர்கால நுகர்வு மற்றும் விதைப்புக்காக விதைவகைகளை சேமித்து வைப்பதற்காக 'பட்டறை' என்ற நெல் சேமிப்பு இடத்தினைப்; பயன்படுத்தினர். அந்தக்காலத்தில், ஒரு நபருக்குச் சொந்தமான 'நெல்லுப்பட்டறை'  இல் உள்ள நெல்லு மூடைகளின் எண்ணிக்கை ஒரு நபரின் செல்வத்தையும் சமூகத்தில் அவரவர் செல்வாக்கையும் குறித்து நின்றது. அத்தகைய வசதிகள் உள்ளவர்களின் பிள்ளைகளைக் திருமணம் கட்டிக் கொள்ள அதிக வரவேற்று இருந்தது. 

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது இந்த வருடத்தில் கிடைத்த அறுவடைகளில் இருந்து, சுரை விதை, வெள்ளரி விதை பீர்கு விதை என இன்னும் பல விதைத்தானியங்களை மற்றும் பருப்புகளை அவரவர் மண் சுவர்களில், பழைய ஓலைப்பாய்களில் ஒட்டி வைத்திருப்பார்கள் அவை அடுத்த வருடம் விதைப்பதற்காக சேமித்து வைக்கப் பயன்படுத்திய உத்திகளாக இருந்தன. அதுபோல மழைகாலம் வரும் என கருவாடுகளையும், இறைச்சு வகைகளை காயவைத்தும், பருப்பு வகைகளையும், விறகுகளையும் அதுபோல் கிழங்குகளை ஒடியல் செய்தும், புளியை ஊறுகாய் செய்தும் சிறிது சிறிதாக சேமித்து வைத்து பஞ்சம் என்ற சொல்லை அறியாதவர்களாக அத்தனை முன்னேற்பாடுடன் உணவுத்தட்டுப்பாட்டை அறியாது வாழ்ந்தனர். அதனால் அவர்கள் அன்று தேவைக்கு அதிகமாக விரையப்படுத்தவும் இல்லை.

இன்று சேமிக்கும் பழக்கம் சமூகத்தின் சில பிரிவினரால் மறக்கும் நிலைக்கு சென்றுள்ளது, ஏனெனில் இன்று அறிமுகமாகியுள்ள கிரெடிட் கார்டுகள் மக்களுக்கு மிக உயர்ந்த கொள்முதல் சக்தியை வழங்கியுள்ளன. கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து, வாடிக்கையாளர்களிடமிருந்த பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான சேமிக்கும் பழக்கத்தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆகவே விவசாயிகள் தமது நெல்லுப் பட்டறைகளில் நெற்களை சேமிப்பதை காலப்போக்கில் கைவிட்டு இன்று தமது சேமிப்பைப் மேற்கொள்ள புதிய கருவிகளை பயன்படுத்தியதன் முலம் தாம் தற்போது நிலவும் ஒரு பொதுவான பிரச்சினையை தம்மை எதிர்நோக்கிவரும் என அறிந்திருக்கவில்லை. 

இன்னும் பல நீர்ப்பாசனக் குளங்களைப் பார்க்கும்போது, நமது பண்டைய மன்னர்கள் நம் மண்ணில் விழுந்த ஒரு சொட்டு நீரையும் வீணாக்கவில்லை என்பதைக் நினைவுபடுத்திக்கொள்ளலாம்;. நீர் வெட்டுக்கள் மற்றும் பற்றாக்குறைகள் அப்போது இருந்ததாக நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. அன்று மக்கள் தண்ணீரை சேமித்து வைத்தனர், அன்றாட பயன்பாட்டிற்காக தங்கள் காணிகளுக்குள் கிணறுகளையும் தோண்டிப் பாவித்தனர். அதனால் எமது பண்டைய இலங்கையர்கள் ஒரு 'நீர்வள நாகரிகத்தினைக்' கொண்டவர்கள் என்று பெருமை பேசினர், அவர்களின் வாழ்க்கைமுறை இந்த நீர்பாசனங்களுடன் தொடர்புடையதாகவே இருந்துவந்தது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுக்கு சுப்பர் மாக்கட்டுக்களில் அரிசி பற்றாக்குறை இருந்தது ஞாபகம் இருக்கலாம். அரிசி விற்பனைத் துறையில் ஒரு மாஃபியா இருப்பதற்கான கதைகள் உள்ளன. நெல் ஆலை உரிமையாளர்கள் அவற்றை உருவாக்குகின்றனர் என்று கூறப்படுகின்றது. அந்த வருடத்தில்; அரிசி பற்றாக்குறை இருந்ததனால் அரசாங்கமும் ஒரு உதவியுமற்ற நிலையில் இருக்கவேண்டி வந்தது.

பண்டைய இலங்கை மக்கள் தன்னிறைவு பெற்ற ஒரு சமுகமாக இருந்துள்ளனர் என அறியப்பட்ட ஒரு காலம் இருந்தது, அந்தநாட்களில் நாட்டில் 'சேனா' அறுவடை செழித்தோங்கியது. எமக்குக் கிடைக்கும் தகவலின்படி, இந்த வகை நெல்வகை 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் இது நாட்டின் பழமையான நெல் வடிவமாகவும் அழைக்கப்படுகிறது.

கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதில் இன்று மக்கள் சனி ஞாயிறு தினங்களை மறந்துபோனாலும்  வரவிருக்கும் சிங்கள-தமிழ் புத்தாண்டை மறக்காமல் அதை எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றிய மற்றொரு கவலை எமக்கில்லாமல் இல்லை. எங்களிடம் சில உணவுப் பொருட்களின் பற்றாக்குறை உள்ளது, இதன் விளைவாக எங்கள் புத்தாண்டு அட்டவணைகள் நிச்சயம் மகிழ்சியானதாக இருக்காது. ஆனால் ஒரு நேர்மறையான எண்ணப்பாங்கில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இனிப்பு வகைகளை வீட்டில் தயாரிப்பதில் கவனம் செலுத்தலாம். ஊண்மையில் சூப்பர்மார்க்கெட்டுகளில் நாம் வாங்கி மேசையில் வைக்கும் தயாரிப்புகளை விட இதுபோன்ற வீட்டு தயாரிப்புகள் அதிகம் மதிக்கப்படலாம்.

சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்தபோது இலங்கையர்களுக்கு அவர்களின் நிலங்களில் தேவையான அனைத்தையும் உற்பத்திசெய்யும்; பழக்கம் எமெக்கெல்லாம் கற்பிக்கப்பட்டது. இன்று நாம் வாழும் கான்கிரீட் காடுகள் 'வீட்டுத்தோட்டம்;' அமைக்கும் எண்ணக்கருவை ஆதரிக்கவில்லை. ஆனால் இப்போது கொவிட்-19 இன் விளைவாக வீட்டில் சில காய்கறிகளை வளர்ப்பதை எமது குடிமக்கள் தீவிரமாக பரிசீலிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. சிலரது வீட்டில் ஏற்கனவே அவை வளர ஆரம்பித்துள்ளது.

தொற்றுநோய் ஒரு நாள் மறைந்து வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இருந்தபோதும் நாம் வீட்டில் நமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைச் உற்பத்தி செய்து சேமிக்கும் பழக்கத்திற்குத் திரும்பினால் இந்த எதிர்மறையான சூழ்நிலையிலிருந்து சாதகமான ஒன்றை நாங்கள் இனிவருங்காலங்களில் பெறலாம். #சிந்திப்போம்_செயற்படுவோம்.

0 comments:

Post a Comment