ADS 468x60

10 April 2020

ஓளித்து விளையாடுபவர்களை ஊரடங்குபோட்டுக் கட்டுப்படுதமுடியாது. #COVID-19


கொரோனா வைரஸ் நாம் வருத்தப்படுவதற்கான தனது இடைவிடாத அறிகுறிகளைக் அது காட்டுவதில்லை, ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுடன் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் அதன் கொடிய விஷத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறது, தன் பரவலையும் அதன் பேரழிவினையும் உலகிற்கு கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அந்த வைரஸ் செய்து வருகின்றது.
.
இந்த நிலையில் இலங்கையில் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை களங்கப்படுத்துவதிலிருந்தும், ஓரங்கட்டுவதிலிருந்தும் விலகி அவர்களை சகமனிதர்களாக மதிக்கவேண்டும் என சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது, ஏனெனில் இது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாத்திரமல்ல அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியவர்களையும் மருத்துவ உதவியை நாட தயக்கம் கொள்ளவைக்கின்றது.

தொற்றுக்குள்ளான  நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு மற்றும் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தொமதமின்றி சிகிச்சையளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வைரஸ் பாதித்த 28 வயதான கர்ப்பிணிப் பெண், தனது அறிகுறிகளை பொய்யாகக் கூறி, தன்னை களுத்துறயில் உள்ள நாகோடா மருத்துவமனையில் சேர்த்துக் கொண்டார், அங்கு அவர் தனது குழந்தையையும் பெற்றெடுத்தார். வேருவலவில் உள்ள பன்னிலவில் வசிக்கும் இந்த பெண்ணின் கவனக்குறைவு, அவருக்கு வைத்தியம் பார்த்த தாதிய ஊழியர்களையும் தனிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றிருக்கின்றது.

இவை நடக்க அனுமதிக்கக் கூடாத சம்பவங்கள், ஏனெனில் இது ஆபத்தான வைரஸை ஒழிக்க அரசாங்கம், சுகாதார சேவைகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய போராட்டத்தை மிகவும் கடினமாக்கிவிடுகின்றது.

இதற்கிடையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்; அனில் ஜசிங்க தெரிவிக்கையில், அமைச்சு அவசர ஹொட்லைன் எண்: 1390 ஐ ஒழுங்குசெய்துள்ளது, இதன் மூலம் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதாக நினைக்கும் அல்லது அந்த அறிகுறிகளை உணரும் எவரும் எவ்வாறு சிறந்த முறையில் கையாள வேண்டும் என்பதற்கான இலவச மருத்துவ ஆலோசனையைப் பெறலாம் எனக்குறிப்பிட்டுள்ளர். 

ஏதாவது நோய் அறிகுறியைக் கண்டதும் முதல் சந்தர்ப்பத்தில் ஒரு மருத்துவமனைக்கு விரைந்து சென்று காண்பிப்பவர்களுடன் தெரியாமல் தொடர்பு கொள்ளக்கூடிய மருத்துவர்கள், தாதியர்கள்; மற்றும் பிறருக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்கும் முயற்சியாக இந்த ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஹொட்லைனில் பெறப்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிக்கும் மருத்துவர்கள் அறிகுறிகளை சரிபார்த்து, சுவசரிய ஆம்புலன்ஸ் சேவை வழியாக நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்க தேவையான இடங்களில் உதவி செய்வார்கள் என்றார்.

சுகாதார அமைச்சும் அரசாங்க தகவல் துறையும் அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் அங்கீகரிக்கப்பட்ட அரச ஆதாரங்களால் வெளியிடப்பட்ட செய்திகளை மட்டும், எந்தவொரு குழப்பத்தையும், பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும் படியும், கேள்விக்குரிய செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டது.

'ஒரு தெரிந்தவரை, உறவினரை அல்லது அந்நியரை தழுவிக்கொள்வது, கைகொடுப்பது, முத்தமிடுவது, பஸ்ஸில் பிரயாணிப்பது அல்லது தங்கள் குழந்தையை உண்மையான பயம் இல்லாமல் பள்ளிக்கு அனுப்புவது பற்றி இன்று யாரால் யோசிக்க முடியும்? சாதாரண மகிழ்சிபற்றி பற்றி யார் சிந்திக்க முடியும்? மற்றும் அதன் ஆபத்தை யாரும் இலகுவாக மதிப்பிட முடியாது? நம்மில் யாரும் ஒரு தொற்றுநோயியல் நிபுணரோ, புள்ளிவிவர நிபுணரோ அல்லது தீர்க்கதரிசியோ அல்ல?

 அது எதுவாக இருந்தாலும், கொரோனா வைரஸ் வலிமையான காலினை ஊண்டி, வேறு எதுவும் செய்ய முடியாதது போல உலகை நிறுத்திவிட்டது. நம் மனம் இன்னும் முன்னும் பின்னுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயல்புநிலைக்கு' திரும்ப வேண்டும் என்று ஏங்குகிறது, நமது எதிர்காலத்தை நமது கடந்த காலத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கிறது மற்றும் அதனால் ஏற்படும் சிதைவை மட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. ஆனால் சிதைவு உள்ளது. இந்த பயங்கரமான விரக்தியின் மத்தியில், எங்களை நாங்களாகவே மறுபரிசீலனை செய்ய இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இன்றய நிலையில் திடீர்என இயல்பு நிலைக்கு திரும்புவதை விட மோசமாக எதுவும் இருக்க முடியாது. 

உலகெங்கிலும் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளைப் போலவே, இலங்கையும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராகப் போராடுகிறது, அது இன மத, குலம், என்றவகையில் குறிப்பாக யாரையும் தேர்ந்தெடுத்து பாதிப்பதில்லை. 

இதை அலட்சியப்படுத்தும் மக்கள், யாராக இருந்தாலும், இந்த கொடிய வைரஸுக்கு இரையாகி விடுகிறார்கள், மேலும் அனைத்து இலங்கையர்களுமஇந்த பொதுவான எதிரியை நம் மண்ணிலிருந்து அழிக்க நமக்காகப் பாடுபடும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு காரணம்.

பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் தொடர்ந்து ஒளிந்து விளையாடுவதைத் தொடர்வார்களானால்;, விதித்த ஊரடங்கு உத்தரவுக்கு எந்த முடிவும் இருக்காது என்பதே முடிந்த முடிவாகும்.

0 comments:

Post a Comment