ADS 468x60

14 April 2020

கொரோணா: இலங்கைக்கு சந்தர்ப்பமா சறுக்கலா?

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதால் உலகம் முழுவதும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது, மேலும் அனைத்து நாடுகளும் தங்கள் தங்கள் குடிமக்களை ஊரடங்கு உத்தரவுபோட்டு வெளியில் உலாவ விடாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


இந்த சீனரின் கொடிய நோய் பரவல் கற்றுத்தந்த பிரகாசமான அடுத்த பாதையைப் பற்றி யாராவது யோசித்திருக்கிறார்களா? ஆம் உண்மையில் மறுபக்கம் சிந்திப்போமானால் இது அவரவர் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளில் - முதன்மையாக உணவுப் பொருட்களான - அரிசி, காய்கறிகள், முட்டை, பால், இறைச்சி போன்றவற்றை தங்கள் தங்கள் நாடுகள் வேறுநாடுகளில் இருந்து இறக்குமதி இல்லாமல் தங்கள் சொந்த நாடுகளிலேயே எளிதில் உற்பத்திசெய்து கிடைக்கக்கூடிய வகையில் நாம் தயாராகவேண்டும் என கற்றுத்தந்துள்ளது. 

இந்த கற்றுத்தந்த பாடங்களை நன்குணரும்வகையில்  கண்களைத் திறக்கச் செய்துள்ளது. இந்த உணர்வே நாம் ஒவ்வொருவருக்கும் நமது நாட்டின் மீதான சுதந்திரம் மற்றும் பற்று ஆகியவற்றினை அதிகரிக்கும் தருணத்தினை உண்டுபண்ணியுள்ளது. தங்களை வல்லாதிக்கம் உள்ள நாடுகள் என அழைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு முன்னால் இதே தேசபக்தி உணர்வுடன் நாட்டை பெரும் உயரத்திற்கு இட்டுச்செல்ல ஒரு உண்மையான தேசியத் தலைவர் எழுந்து அவர்களுக்கு எடுத்துக்காட்டாக எமது நாட்டை தன்னிறைவான நாடாக்கவேண்டிய காலம் கைகூடியுள்ளது. 

மறுபுறம சீனா தனது சொந்த கல்லறையை தோண்டியுள்ளது அல்லது சொந்தக் காலில் சூனியம் வைத்துள்ளது எனச் சொல்லுகின்றனர். குறிப்பாக அனைத்து நாடுகளும் அவற்றின் அத்தியாவசிய தேவைகளில் தன்னிறைவு பெற்றால், சீனாவின் ஏற்றுமதிகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து, அதனால் அவர்களது பொருளாதாரத்தை பாதிக்கும். இதனால் எந்த வகையிலும் உலக வல்லாதிக்க சக்தியாக இருக்க வேண்டும் என்ற பெரிய திட்டம் பகற்கனவாகிவிடும். அவ்வாறு ஒவ்வொரு நாடும் இந்த உலகச் சுற்றுவட்டத்தில் இருந்து விடுபடுமிடத்து சீனாவின் வர்தகக் கனவு வீழ்ச்சியடையும் அது மிகப்பெரும் பாடமாக சீனாவுக்கு அமையும். மறுபுறம் அந்தந்த நாடுகளுக்கான தன்னிறைவுப்பாதையும் திறக்கப்படும்.

எங்கள் சொந்த தாய்நாட்டினை திரும்பிப்பாருங்கள்இ அன்று இலங்கை ஒரு காலத்தில் 'கிழக்கின் தானியக்களஞ்சியம்' என்றும் 'இந்து சமுத்திரத்தின் முத்து' என வும் அழைக்கப்பட்டது. ஆது இன்று எங்கு போய்விட்டது? அன்றய மன்னர்களும் மக்களும் ஒன்றிணைந்து உழைத்தார்கள் இந்த நாமத்தை பெற. ஆவை மிண்டும் இந்தச் சந்தர்பத்தில் தேவைப்படுகின்றன. ஆகவே அந்த பழயகால பெருமையை மீண்டும் கொண்டுவர முயற்சிப்போம். இதை அடைவதற்கு சாதி, மதம், இனம், அரசியல் மற்றும் பிற பிரிவுகளில் உள்ள அனைத்து வேறுபாடுகளையும் தூக்கி எறிந்து, ஒரே தேசமாக ஒன்றுபடுவோம்

0 comments:

Post a Comment