ADS 468x60

12 April 2020

நாடு எதிர்நோக்கும் பிரச்சினையும் புதுவருட எதிர்வுகூறலும். #COVID19

இன்று மக்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டு வாழ்வாதாரம் முதற்கொண்டு தமது வாழ்க்கைக்கே ஆதாரம் இல்லை என்ற நிலையில் இலெட்சக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கிய நிலையில் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது. ஆனால் வெறுமனே தமக்கிடையே பாரம்பரிய புத்தாண்டு வாழ்த்துக்களை மாத்திரம் தொலைவில் இருந்து தொலைபேசியில் பரிமாறிக்கொள்ளும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மூலம் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் என நம்புகின்றோம். அது ஒரு பிரகாசமான மற்றும் வளமான ஆண்டின் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும்;.

இந்த புத்தாண்டு அடித்தட்டு மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்து நிற்பவர்களுக்கும் ஒரு நன்மைபயற்காத மற்றும் கடினமான நேரத்தினை உருவாக்கியுள்ளது. ஒருபுறம் கொரோனா வைரஸின் பயம், மறுபுறம் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, குறைந்த அல்லது வருமானமே இல்லாமை, வேலையின்மை மற்றும் பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் ஏராளமான மக்கள் இன்று வாழ வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பை விட இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக மோசமான அடியாகும், ஏனெனில் முழு பொருளாதாரமும் சீர்குலைந்த நிலையில் பலரின் வாழ்வாதாரங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

எதிர்பாராத சித்திரை வருடக்கொண்டாட்டங்கள்

பால்பொங்கல்;, இனிப்பு இறைச்சிகள் மற்றும் சுவையான உணவுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாறாக, நாட்டின் பெருமபாலான் மக்கள் குறைந்தளவு அல்லது வருமானம் அறவே இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு கொண்டாட்டம் சிக்கனமாகவே இருக்கும்.

முறைசாரா வேலையில் தினசரி ஊதியம் பெறும் தொழிலாளர்கள், விவசாயிகள் அல்லாத  தொழிலாளர்களில் 59 சதவீதமாக உள்ளனர். அவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பும் இல்லை அதனால்; வருமானமும் கிடையாது. அவர்களில் பெரும்பாலோருக்கு வேலையின்மை காலத்தை கழிப்பதற்காக கையில் போதியளவு சேமிப்பும் கிடையாது. இலவச உணவு வழங்கல் மற்றும் அரசாங்கத்தின் ஊடான சமுகத்தின் தொண்டு நடவடிக்கைகளை வழங்குவதற்கான முயற்சிகளால் மட்டுமே அவர்கள் காப்பாற்றப்படக்கூடிய ஒரு தீவிர அவல நிலையில் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உண்மையிலேயே பாதிக்கப்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு உணவு மற்றும் பண உதவிகள் உரியநேரங்களில் முறையாகக் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது அவர்களது வலியை இன்னும் அதிகரிக்கும். இது அரச ஊழியர்களினது வினைத்திறனான செயற்பாட்டினிலேயே தங்கியுள்ளது. 

எதிர்பார்த்த பெரும்போக அறுவடை

இந்த ஆண்டு அதிஷ்ட்டவசமாக குறிப்பாக ஒரு நல்ல பெரும்போக விளைச்சல் புத்தாண்டுக்கு முன்னதாக அதிக இழப்புகள் இல்லாமல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இது சந்தேகத்திற்கு இடமின்றி புத்தாண்டைக் கொண்டாட சில்வகையில் உதவியாக இருக்கும்;. ஒரு நல்ல பெரும்போக அறுவடையானது கிராமப்புற மக்கள் கடினமான நேரங்களை தாங்கிக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும், இருப்பினும் ஏனைய அனைத்து தொழில் துறைகளில் ஏற்பட்ட முடக்கமானது கிராமப்புற மக்களின் வருமானமட்டத்தினை மிக வெகுவாகப் பாதித்துள்ளது. அதுபோல் அரசாங்கம் பல நல்ல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றபோதும் தற்போது பயிற்செய்கையாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களைச் உரிய முறையில் சந்தைப்படுத்துவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

நாட்டின் கடின பொருளாதார நிலை

இன்று இருக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தின் நிலை உண்மையில் நம் அனைவரையும் சோர்வடையவைத்துள்ளது. பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஏற்றுமதி இறக்குமதித்; துறையாகும். ஏற்றுமதி வீழ்ச்சியால் வர்த்தக இருப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சென்மதி நிலுவையில் பாரிய பற்றாக்குறை எதிர்பார்க்கப்படுகின்றது. அதுபோல் நம்நாட்டுக்கு கணிசமான வருவாய் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையின் வருவாய் குறைந்திருப்பது, வெளிநாட்டில் தொழில்புரியும் எம்மவர்களின் நாணயப் பரிமாற்றம் குறைவடைந்துள்ளமை மற்றும் மூலதனத்தின் குறைந்த உட்பாச்சல்கள் காரணமாக பாரிய வீழ்ச்சியை பொருளாதாரம் சந்தித்து வருகின்றது.

சர்வதேச வர்த்தகமும் கொவிட்19 உம்

உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி; மற்றும் தேயிலை ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி வர்த்தக பற்றாக்குறையை விரிவாக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும், அத்தியாவசியமற்ற மற்றும் எரிபொருளின் மேலதிக இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளமையானது வர்த்தக பற்றாக்குறையை ஓரளவு ஈடுகட்ட வாய்ப்புள்ளது.

வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டின் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தாலும் கூட, இது அன்நியச்செலாவணி அனுப்புவதில் ஏற்படும் மோசமான முன்னேற்றங்கள், சுற்றுலா வருவாயின் விரைவான வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளின் தொடர் வீழ்ச்சி; ஆகியவற்றின் காரணமாக ஒரு பெரிய சென்மதிநிலுவைப் பற்றாக்குறையினை ஏற்படுத்தும் என பொருளியலாளர்கள் எதிர்வுகூறுகின்றனர். இவை நாட்டின் வெளிப்புற நிதிப்பாச்சல் நிலையை பாரியளவில் மோசமாக்கும் ஒரு பெரிய பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

மீளக்கட்டியெழுப்பல்

இந்த மோசமான நிலையிலிருந்து நாம் விடுபடவேண்டுமானால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகலாம்;, இது உலகளாவிய பொருளாதார மீட்சியிலேயே தங்கி இருக்கின்றது. ஆகவே 2021 ஆம் ஆண்டு முடிவில் வளர்ச்சி வேகத்தில் மாற்றம் ஏற்படும் என நாம் நம்புகினறோம் அதனால் நாம் அனைவரும் இரண்டு மடங்காக அடுத்த புத்தாண்டைக் கொண்டாட தயாராகலாம் என நம்புவோம். 

எதிர்கொள்ளும் நெருக்கடி நேரங்கள்

நாம் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தம் என்னவென்றால், இன்னும் சில மாதங்கள் குறிப்பாக ஏழைகளுக்கும் தத்தமது வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கும் மிகக் கடினமான நேரமாக இருக்கும். அத்துடன் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைக்கு ஏற்பட்ட பின்னடைவு பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். இது நாட்டின் சென்மதி நிலுவை, வேலைவாய்ப்பு மற்றும் வருமானங்களின் சமநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.

தழைவிடும் நம்பிக்கைக்கீற்று

புத்தாண்டு பிறப்பதில்;, எமெக்கெல்லாம் இருக்கும் நம்பிக்கைகளும்; எதிர்பார்ப்புகளும் என்னவெனில்;;: இந்த கொடிய தொற்றுநோயானது எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு நாள் அடங்கிப்போகும்;, உலகப் பொருளாதாரம் மீட்சி பெற்று விரைவில் மீட்கப்படும் மற்றும் நிச்சயம் ஆண்டின்; இறுதியில் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்.

ஆயினும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முடிவு அல்லது பொருளாதார மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் இன்னும் எமக்குப் புலப்படவில்லை. சீனா தனது பொருளாதாரத்தை நகர்த்தத் தொடங்குகிறது, இது ஏனைய நாடுகளின் பொருளாதார முன்னகர்வில் ஓர் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் வெள்ளிடைமலை. 

சர்வதேச பொருளாதார மீட்டெடுப்பு

இந்த மோசமான நிலையைத் மெதுமெதுவாகத் முற்றும் தணிப்பதால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இது வைரஸின் உலகளாவிய கட்டுப்பாடடை மேற்கொள்வதன் மூலமும் மற்றும் சர்வதேச பொருளாதார மீட்சியையும் பொறுத்தே அமையும். இதற்கிடையில், இலங்கை பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதால் தற்போதைய பொருளாதார முட்டுக்கட்டைகளை சமாளிக்க சர்வதேச உதவி அதிகம் தேவைப்படும் என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சர்வதேசமே இந்த நோய்க்கு ஆட்பட்டிருப்பதே கவலைக்குரியது.

உலகப் பொருளாதாரம் வழமைக்கு மாறி நகரத் தொடங்கும் போதுதான் இலங்கையின் இறக்குமதி-ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் வளர முடியும். இலங்கை பொருளாதாரம் உலகளாவிய வேகமான போட்டித்தன்மை மற்றும் முன்னேற்றங்களால் ஈடுகொடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் மறுமலர்ச்சியானது கொவிட்-19 ஐ இல்லமற்செய்வதுடன் உலகளாவிய பொருளாதார மீட்சியின் வேகத்தையும் பொறுத்தே தீர்மானிக்கப்படும். ஆனால் இவை இரண்டையும் நிச்சயிக்க முடியாத தருணத்தில் நாம் நிற்கின்றோம்.

இறுதியாக

இந்த புத்தாண்டு மலரும் பொழுது, கொவிட்-19 தொற்றுநோய் எதிர்காலத்தில் அடங்கியிருக்கும், மற்றும் உலகப் பொருளாதாரம் மீட்கப்பட்டு இலங்கை பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு உதவுவதோடு ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் நிச்சயம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

இருப்பினும், கொவிட -19 தொற்றுநோய் பரவலை தட்டையானதாக்க சில அறிகுறிகள் உள்ளன, இது உலகளாவிய பொருளாதார மீட்சிக்கு ஒரு முன்நிபந்தனையாகும். வுழமைக்கு மாறாக சர்வதேச பயணங்களுக்கு அதிக நேரம் எடுக்கும் மற்றும் இலங்கையின் சுற்றுலா இந்த ஆண்டு குறைந்த மட்டத்தில் இருக்க வாய்ப்புள்ளது. எது எவ்வாறாயினும் 2021 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரிய உந்துதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

சமூகத்தில் அதிக செல்வந்தர்கள் வசதிபடைத்தவர்கள் இந்த கால கஷ்டத்தைத் உணர்ந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது உணவுத் தேவைகளைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு ஒரு கரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். கடுமையான தேவை உள்ள இந்த நேரத்தில், சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூகத்தை மதித்துநடக்கும் உணர்வு ஆகியவை மக்களின் மோசமான நிலைமைகளைத் தணிக்கும் என நம்புகின்றேன். இது சுனாமி நாட்டை பேரழிவிற்கு உட்படுத்திய காலத்திற்கு ஒத்ததாகும். சமூகத்தில் உள்ள அனைத்து துயரங்களையும்; தணிக்க வேண்டிய நேரம் இது. இது நம்பிக்கையோடு வாழ வேண்டிய நேரம், விரக்தியுடன் அல்ல என்பமை புரிந்து நடப்போம் தெரிந்து நடப்போம்.

0 comments:

Post a Comment