ADS 468x60

14 April 2020

நான்கு மில்லியன் தொழிலாளர்கள் வீட்டில் முடக்கம்.

இலங்கையில் 6 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அதன் மூன்றாவது வாரமாக நீடிக்கிறது. பொது மக்களுக்கு (சேவையில் உள்ளவர்கள் அல்லாத) தொடர்ந்தும் கஷ்டங்கள் சொல்லமுடியாதவை, அவற்றை அவற்றை நாம் யாரும் புறக்கணிக்க முடியாது. 

முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் பஸ் நடத்துனர்கள் என, நாளாந்த வருமானத்துக்காக எமதுநாட்டில் வேலைசெய்யும் தொழிற்படையில் மொத்தமாக கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். அதுபோல் தினசரி கூலிவேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், காய்கறி மற்றும் மீன் விற்பனையாளர்கள் போன்றவர்கள் சுமார் 2.5 மில்லியன் மக்கள் தமது சுயதொழிலில் ஈடபடுகின்ற மக்கள். 

அதுபோல் கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள், பால் பண்ணை நடாத்துபவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள், அதனால் வருகின்ற வருமானத்தினை நம்பி வேலை செய்பவர்கள் என அனைவரும் இன்று ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதனால், செய்ய வழி இன்றி வீட்டில் இருக்கின்றார்கள். அதனால் இவர்கள் அனைவரும் தத்தமது வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். அதனால் அவர்கள் அன்றாட வருமானத்தினை இழந்துள்ளனர். இந்த காரணங்களால் அவர்களில் பெரும்பாலோர் தங்கள் அன்றாட பொருட்களை அவர்கள் வாங்குவதற்கு கையில் பண இருப்பு இல்லாத நிலையில் இருக்கின்றனர்.

உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபோது, நகரங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மளிகைப் பொருட்கள், மருந்து மற்றும் பிற அடிப்படையில் தேவையான பொருட்களை வாங்க வீதிகளில் வருகின்றனர். ஆனால் சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை இவர்கள், பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்கின்ற வேகத்தில் அவற்றை மீறுகின்றனர். இதனால் மற்றவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தூரத்தை வைத்திருப்பது, நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய் பெரிய பெரிய அச்சுறுத்தலினை ஏற்படுத்திவிடுகின்றனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள்
  1. மக்கள் நாளாந்த வருமானம் இல்லாமல் தமக்கு தேவையான பொருட்களை வாங்கும் கொள்வனவு சக்தியிழந்து மிகுந்த மன உழைச்சலுக்குள் இருக்கின்றனர். 
  2. அரசாங்கம் தங்களால் இயன்றளவு பல நடவடிக்கைகளை பாராளுமன்றம், மாகாணசபை ஆகிய இயக்கமற்றுக்கிடக்கும் நிலையிலும் முன்னெடுத்து வருகின்றன.
  3. பாதுகாப்பு, சுகாதார மற்றும் மாநகர சபை ஊழியர்களின் அயராத உழைப்பினால் ஐனாதிபதியின் தலைமையின் கீழ் பாதுகாப்பாக இயங்குகின்றது.
  4. வலுக்கட்டாயமாக நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்றிவருகின்றனர்.
  5. தொலைக்கல்வி என அபிவிருத்தியடைந்த நாடுகளில் என்றோ அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றை, இன்று பாடசாலைக் குழந்தைகள் இருந்து பல்கலைக்கழக மட்டம்வரை கற்க ஆரம்பித்துள்ளனர்.
  6. காரியாலயம் தேடி அலைந்து வெறுப்போடு திரும்பிய பல சேவைகளை வீட்டில் இருந்தேபெறும் பல சேவைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. 
  7. அதுபோல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  8. நடமாடும் சேவைகள் அதிகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  9. ஒன்லைன் சந்தைவசதி அதிகரிக்கவும் ஒன்லைன் கொள்வனவு முறை அதிகரிக்கவும் ஆரம்பித்து இருக்கின்றது.


முன்னே வருவதற்கான தந்திரோபாயங்கள்
  1. 18 வயதுக்கு மேற்பட்டவர் ஒவ்வொருவரும் கட்டாய சேமிப்பை மேற்கொள்ளும் முறைமை ஆரம்பிக்கப்படவேண்டும்.
  2. நல்ல சுகாதாரப் பழக்கவழக்கம் கொவிட் தொற்று முடிந்த பின்னும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், சுகாதார அமைச்சி, மற்றும் காவற்துறையினரின் உதவியுடன் அவை வலியுறுத்தப்படவேண்டும்.
  3. தொலைகல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் இதனால் உயர்கல்வி வாய்ப்பிழந்த மாணவர்களை குறைத்துக்கொள்ளலாம்.
  4. கற்பினிப் பெண்கள், வலது குறைந்தவர்கள், மற்றும் வேறுகாரணங்களால் முடியாதவர்களைவ வீட்டில் இருந்தவாறே வேலை செய்யும் முறைமை மூலம் சீர் செய்யலாம்.
  5. வீட்டுத்தோட்டமுறையை கட்டாயப்படுத்துவதுடன், நஞ்சற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் அரச திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
  6. வெறுமனே மூலப்பொருள் உற்பத்தியாளர்களாக இல்லாமல் நமக்கு தேவையான அனைத்தையும் பெறுமதி சேர்த்து முடிவுப்பொருட்களாக மாற்ற வேண்டும்.
  7. சுயாதீனமாக அரசியல் தலையீடு இல்லாத பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் பணியை தற்போது செய்வதுபோன்று கொண்டுவரவேண்டும்.
  8. அரச ஊழியர்களின் திறனை பெருக்கும் பயிற்சிகளையும் அதனால் அவர்களது வினைத்திறனான சேவைகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலம் இடைவிடாத உற்பத்திப் பெருக்கத்தினை ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.
  9. குறைந்தளவு இறக்குமதி சார்ந்த பொருளாதார நடைமுறைகளை அரச கடைப்பிடித்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதார ஊக்குவிப்பு மையங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.
  10. ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க சலுகைகளை அறிமுகப்படுத்துவதுடன் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவேண்டும். 
  11. உள்ழூர் உற்பத்திக்கான முக்கியத்துவத்தினை அதிகரிக்க அதற்கான ஊக்குவிப்புக்களையும், தொழில்நுட்ம பற்றும் சந்தைவசதிகளையும் உருவாக்கிக்கொடுத்தல் அவசியம்.
  12. முக்கியமாக எதிர்கால மக்களுக்கான நல்ல சேவைகளை வழங்குவதற்கான ஆய்வுகளை ஆரம்பித்து அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கொரோணாவின் பின்னர் நாம் முன்னோக்கி நகர்வோமானால் வெளிநாட்டுக் கடனில் இருந்து விடுபட்டு கடனற்ற தன்னிறைவான ஆரோக்கியமான ஒரு நாட்டுச் சொந்தக்காரர் ஆவது திண்ணம்.

1 comments:

kowsy said...

இவ்வாறு கொரோணாவின் பின்னர் நாம் முன்னோக்கி நகர்வோமானால் வெளிநாட்டுக் கடனில் இருந்து விடுபட்டு கடனற்ற தன்னிறைவான ஆரோக்கியமான ஒரு நாட்டுச் சொந்தக்காரர் ஆவது திண்ணம்.

உண்மைதான். சிறப்பு சீலன்

Post a Comment