
25 December 2011
அனர்த்த முன்னாயத்த முனைப்பில் மட்டக்களப்பில் தேசிய பாதுகாப்பு தினம்

18 December 2011
திகிலிவெட்டை மக்களும், மண் வாசனையும்..

கொடுத்துச் சிவந்த கைகள் போல வளங்கொழிக்கும் கிழக்குப் புற தழிழ் விழை நிலங்களையும், தழராத சுறுசுறுப்பான படுவான் மக்களையும் பார்த்து வியக்காதவர் யாரும் இல்லை. மட்டக்களப்பின் சிறப்பே வந்தோரை வாழவைக்கும் இன்முகமும், ஊரெங்கும் குளிர்பரப்பும் வாவிகளும் தான். இப்படி சிறப்புற்று விளங்கும் மீன்பாடும் மட்டு நகருக்கு வடக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் கிரான் பிரதேச செயலக எல்லைக்குள் சந்திவெளிக்கு அப்பால் குறிஞ்சி, முல்லை மருதம் என்று மூன்று நிலங்களும் ஒருங்கே அமைந்து, பச்சை ஆடைபோற்றி படர்ந்து பூத்துச் சிரிக்கும் எமது தாய் மண்ணான 'திகிலி' என்று அம்மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திகிலிவெட்டை எனும் கிரமத்தின் 'வாங்கோ' என்று வரவேற்க்கும் மக்கள், குழந்தைகள், மாடுகள், ஆடுகள், பச்சை பசேல் என்ற பயிர்ச் செடிகள் இன்னும் நிறையவே கண்டேன்.
11 December 2011
இரக்கமற்றவள்.
நீ இரக்கமற்றவள் என்பதை- என்
அன்புப் பரிசல்களை
திரும்பத் தந்து காட்டாதே!
உன்னிடம்
விட்டு வைத்துள்ள-
எனது
அப்பாவி இதயத்தை,
ஒரு மூடி நஞ்சு கொடுத்து
கொண்டு விடேன்!
அது இன்னும்
உன்னைப் போல்
அலையும்
முகமூடிக்காரர்களுக்கு
சத்திரமாய்
அமையும் பெண்ணே!
09 December 2011
விரும்புகிறேன்.....
08 December 2011
நான் ஒரு பொறுக்கி

வயலில் கதிர் பொறுக்கி
வாய்க்காலில் மீன் பொறுக்கி
அரிசியில் நெல்லுப் பொறுக்கி
அரிக்குமேலைக்குள் கல்லுப் பொறுக்கி
கல்லூரியில் அறிவு பொறுக்கி
காதலில் இதயம் பொறுக்கி
வலைத்தளத்தில் தகவல் பொறுக்கி
வாத்தியாரிடம் பாடம் பொறுக்கி
காசி பொறுக்கி- மாஸ்டர்
கோசு பொறுக்கி- ஆசான்
ஆசி பொறுக்கி
நேரம் பொறுக்கி- பரீட்சைக்காய்
வாரம் பொறுக்கி
ஏய் பொறுக்கி பீ பொறுக்கி
எடுத்ததெல்லாம் பொறுக்கி
அரசியலில் குப்பை பொறுக்கி
ஆண்மீகத்தில் அமைதி பொறுக்கி
வெட்டியாய் வேலை பொறுக்கி
வேதனையில் வேண்டாதது பொறுக்கி
வாழ்ந்ததெல்லாம் பொறுக்கி- இதனால்
வாங்கிய பேரும் பொறுக்கி.
05 December 2011
இலங்கையின் பேண்தகு வீட்டுத் திட்ட செயன்முறைகளும், வாழ்கை முறையும்.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் அவன் வாழ்வதற்க்கு தேவையான உறைவிடம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இதனால்தான் எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் வீட்டுத்துறை முக்கியமானதாகக் அபிவிருத்தி திட்டங்களில் கருத்தில் எடுக்கப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பினைத் தூண்டி விடுகின்ற வகையில் எல்லாத் துறைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் முகாமைத்துவத்தின் தேவையை வலியுறுத்துகிறது. அழகான வீடு ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானத் தேவையாகும். இது முழுவதுமாக வீட்டுக்காரரின் விருப்பு மற்றும் வாழ்கைத் தரம் என்பன மூலம் செல்வாக்குச் செலுத்துகின்றது. வீட்டுத் திட்டங்களில் ஏற்ப்படுகின்ற முன்னேற்றம் பல வழிகளில் நன்மை பயக்கின்றது. உதாரணமாக பொருளாதார நன்மைகள், சேரிப்புற வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி, சேமிப்பு ஊக்குவிப்பு, நேரடி மறைமுக கட்டுமானப் பணி வேலைவாய்ப்புகள் மற்றும் நுகர்வு என்பனவற்றினை குறிப்பிடலாம்.
26 November 2011
சீரற்ற காலநிலையும் சீரளியும் மக்களும்;தொடரும் போராட்டம்.
வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும் ஆனால் போராட்டமே வாழ்க்கையாகலாமா! எவ்வாறாயினும் அது தான் இன்று எம்மக்களின் நிலைப்பாடாகி விட்டது. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளயே போராடிப் போராடி சலித்து விட்டனர். ஐந்து தசாப்த கால உரிமைப் போராட்டம், உடமையையும் உயிரையும் காக்கப் போராட்டம், உணவுக்காகப் போராட்டம், வறுமையோடு போராட்டம் இன்னும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து வருகின்ற இடர்களுக்கு(Risks) எதிராகப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தப் போராட்டத்தினை மக்கள் சுயமாக நின்று வென்றுவிட முடியாது. அதற்க்கு மக்கள் சத்தியில் உருவாக்கப்பட்ட அரச இயந்திரத்தின் தேவைப்பாடு முக்கியமானதாகும். அதற்கு அப்பால் மக்களது ஒத்துழைப்பு மற்றும் அவர்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வுகள் மேலதிகமாக வலுச் சேர்ப்பவையாகத்தான் இருக்கும், ஆனாலும் இவை பொறுப்புள்ளவர்களின் அசண்டையீனங்களால் தான் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் பறித்துச் செல்லும் துர்ப்பாக்கியமான நிலைக்குள் தள்ளியள்ளது.
21 November 2011
இது உந்தன் நாடே

ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா
அன்று யுத்தத்தின் அடி
இன்று வறுமையின் பிடி
இதுதான் உந்தன் வாழ்வா
உந்தன் குருதியில் உறுதியை
ஊட்டிடடா தமிழா
வழி இன்று தெரிகின்ற போது
விழி மூடி தூங்குவதா நீ
எல்லோரும் மன்னர்கள் தானே
ஏன் இன்னும் சேவகம் உனக்கு
ஏரு பூட்டி மாற்றான் வாழ
சோறு கொடுத்த எம் தமிழா
தேர்தல் மட்டும் நமக்கோர் வழி
நினைவில் வையடா
02 November 2011
விடியலே விடியலே.....
விடியலே
நீயும் ஓர வஞ்சக்காரனா!
உனைக் கண்டு
மொட்டுக்கள் சிரிக்கினறது
சிட்டுகள் களிக்கின்றது
எனக்கு மட்டும் ஏன்- நீ
தூரத்தில்...
எரிமலைபோல் பொங்கி
உரிமை உரிமை என்று
ஊர் அதிர நடித்து
பொய் உரைத்து,
எம் தமிழர் முகத்தில்
கரி இறைக்கும்
அரசியல் இருளில் நானும்
விடியலே...
எனக்கு மட்டும் ஏன்- நீ
தூரத்தில்...
01 November 2011
காதல் ஒரு காட்டு மூங்கில்

ஆகாய மேகம்
நீலக் கடல்
மெல்லிசை
குழந்தையின் சிரிப்பு
மலை அருவி
இவைபோல்
காதலும் அழகானது.
இன்னும்>
மனம் நெகிழும்
கண்ணீர் சிந்தும்
இரண்டு ஒன்றாகும்
உயிர் விடும்.....
காட்டு மூங்கில்
கையில் பட்டால்
காற்றும் இசைக்கும்
வெய்யில் பட்டால்
காடும் எரியும்...
ஃ காதல் ஒரு புல்லாங்குழல்
எரிவதும் இசைப்பதும்
எம் கையில்....
31 October 2011
நீயும் நானும்..

பிடித்திருக்கு பிடித்திருக்கு
புரியவில்லை ஏனென்று...
காற்றை அழைந்து
கதைத்த நிமிடங்கள்
வலைத் தளத்தில்
வளைத்த வார்த்தைகள்
பக்கத்தில் வந்து
வெட்கித்த சாயல்கள்
பள்ளிப் பிள்ளைபோல்
பார்த்த பார்வைகள்
கல்யாணத்துக்கு நாள்
குறித்த நினைவுகள்
காது வலித்தும்-செல்லில்
கரைந்த காலங்கள்
எரிமலையாய் எழுந்த கோபம்
இதமாக விழுந்த பார்வை
பிடித்திருக்கு பிடித்திருக்கு
நீயும் நானும்
நிஜத்தில் வாழ....
26 October 2011
தீப திருநாள் வாழ்துகள்

விட்டிலுக்கு விழக்கு ஒளி
வீட்டுக்கு தீபம் ஒளி
தொட்டிலுக்கு குழந்தை ஒளி
தொடர்இருளில் கதிர் ஒளி
வாழ்க்கைக்கு கல்வி ஒளி
கல்விக்கு கற்றோர் ஒளி
வாடுவோர்க்கு அன்பு ஒளி
வானமெங்கும் நிலா ஒளி
கண்ணுக்கு கருணை ஒளி
கயவர்க்கு ஞானம் ஒளி
காற்றுக்கு ஜீவன் ஒளி
காதலுக்கு உன்மை ஒளி
துன்பத்தில் நட்பு ஒளி
துணையான மனைவி ஒளி
இன்பத்தில் செல்வம் ஒளி
இனித்திடும் தீபாவளி ஒளி ஒளியே!
15 October 2011
நல்லொரு கூத்து
உலகத்தின் செம்மொழி அந்தஸ்த்து பெற ஒரு மொழிக்கு எத்தனையோ தகுதிகள் வேண்டும் அத்தனையும் தன்னகத்தே கொண்டு நாம் வாழும் போதே தழிழனாய் பிறந்தேன், என்ற பெருமை கொள்ள வைக்கும் எங்கள் அழகு தமிழுக்கு அழகு சேர்க்கும் தழிழ் இலக்கிய விழா கிழக்கு மண்ணின் முக வெத்திலையாக இருக்கும் மீன்பாடும் தேன்நாட்டில், கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் ஏற்ப்பாட்டில் நடாத்தப்படுவது பாராட்டபட வேண்டியது' என கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி பிறேம்குமார் நிகழ்வுகளின் இடையே நிறுவிக்காட்டினார்.
ஒரு இனம் நீண்டிலங்க அதன் கலை, கலாசாரம், பண்பாடு, மொழி இந்த நான்கு சக்கரங்களும் தேவை. மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரப்பிடியில் கை நழுவிய எமது இனத்துவ அடையாளங்கள், இன்று மின்னல் போல் ஆங்காங்கு பளிச்சிட்டு மறைந்தாலும,; அவை மின்னத் தொடங்கி இருக்கிறதை நினைத்து பெருமை தான்.
02 October 2011
வயோதிபத்துக்கு எறும்புகள் கொடுக்கும் கௌரவம்.

'உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்பது என்னவோ மனிதனுக்கு மட்டுமல்ல, எமக்கெல்லாம் உதாரணமாகத் திகழும் கடினமாக முயற்சியுடன் ஓயாது உழைக்கும் எறும்புகள், தேனீக்கள் போன்ற ஜீவன்களுக்கும் சேர்த்துத்தான் என எண்ணத் தோணுகிறது.
முதியோர்கள் இனிக்கும் அடிக்கரும்பு, கடைந்தெடுத்த வெண்ணை, கனிந்து வந்த பழுத்த பழங்கள், காற்றும் மழையும் கடந்த வந்த அனுபவக்கப்பல்கள் அவர்கள் ஞானிகள், வழிகாட்டல்கள் இன்னும் எல்லாம் அவர்களே. ஆதனால்தான் அவர்கள் கனம் பண்ண வேண்டியவர்களாக உலகலாவிய ரீதியில் ஞாபகப் படுத்தப்படுவது பெருமைக்குரியது.
மனிதர்கள் ஒன்றும் புத்திஜீவிகளாக, கலைஞர்களாக, உழைப்பாளியாக பிறப்பவர்கள் அல்லர், மாறாக அவர்கள் அவ்வாறு உருவாகிக் கொள்கிறார்கள். நிறைய விடயஙந்கள் மனிதன் ஏனைய ஜீவாராசிகளிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறான். இதனைத்தான் கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்னார் 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான்' என்று.
நாம் எறும்புகளிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு புதிய விடயம் என்ன தெரியுமா!
26 September 2011
யாழ் இசை வாணி.
பெரிய சமுத்திரத்தினை கிழித்து வரும் வெள்ளலைபோல் மனதில் பிரபாகித்த மகிழ்சிகள் ஒன்றா! இரண்டா! நெடு நாள் ஆசையின் நிறைவேற்றமாய் கூழாங் கற்களுக்கிடையே மாணிக்கம் போல் பாடும் சின்னக் குயில், நாதங்களின் பள்ளிக் கூடம், வேதங்களின் இசை கோலம், கீதங்களின் சொந்தக்காறி, வடக்கின் இசை வசந்தம், யாழ் வாணி 'ஆதித்தியா' பழிச்சென என்னை பார்த்து சிரிக்கிறாள்.
கண்டேன் கலை முகத்தினை ஆச்சரியத்தோடே, முழுசாய் இருந்த நான் தலை கால் புரியாமால் முக்காலாய் போனேன். 'நீங்கள் ஆதித்யாவா மா' என்றேன.
பட்டதாரிகள் படும் பாடு...

உலகத்தில் பொருளாதாரத்தில் வழர்ந்த காடுகள் எல்லாம் வாழ்வாதாரத்தில் தன் நிறைவுகண்டமையால் தான் என்பது வரலாறு. வாழ்வாதாரம் வளர வளங்கள் தேவை, வளம் இருந்தும் வளர முடியாத பல நாடுகள் இன்றும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முடியாமல் போகின்றது. இலங்கை இதற்கு ஒன்றும் சளைத்தது அல்ல. பொருளியல் கூறும் குறை; வறுமை, குடிநீர்ப்பற்றாக்குறை, வேலையின்மை, குறை வருமானம், உணவுத் தட்டுப்பாடு, அரசியல் ஸ்த்திரமின்மை, கடன் சுமை போன்ற இன்னோரன்ன.
கொழும்பின் சந்து பொந்துகள் எல்லாம் வந்து நிரம்பிய பட்டதாரிகள் பட்ட பாடுகள் பார்த்தேன், குழந்தையுடன் பல பெண்கள், குடுப்பத்துடன் சில பேர்கள், வலம் இடம் தெரியாமல் வந்திறங்கியோர் ஒரு தொகை, பஸ்சில் பயணம் செய்து இறங்குமிடம் துலைத்தோர் எத்தனைபேர், கண்விழித்து வந்து புண்பட்டோர் ஒரு புறம், பயணப்பை துலைத்து பரதவித்தோர், மொழி தெரியா முழிச்சவர்கள் என்று வேலை தேடி வேர்த்துப் போனவர்களை எம் திருநாட்டில் பார்த்தேன்.
ஒருவர் கூறினார்
22 September 2011
முரண்......

நியாயம் அநியாயம் எல்லாம் இப்போ கதைக்கப்படுவது குறைந்துவிட்டது. கலியுகத்தில் நடப்பதெல்லாம் அநியாயம்தான், அல்லாது நன்மை செய்பவன் நாதியற்றுதான் கிடக்கிறான். இருப்பினும் எச்சசொச்சமாக நன்மை செய்பவர்களும் உளர்.
உள்ளம் என்பது ஆமை அதில்
உன்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி.
ஆதலால் உள்ளம் ஆமைபோல் எல்லாவற்றயும் உள்ளே இளுத்து அடக்கி வைத்திருக்கிறது கண்டு கொள்வது சிரமம். நெஞ்சில் என்ன இருக்கிறது என்பதனை வாய் வார்த்தைகளை கொண்டு அறிய முடியவில்லை, நாடகமேடையில் நடிக்க வந்தவர்கள்போல் யதார்த்தத்துக்கு மாறாக நடிக்கிறவர்கள் அநேகம் அநேகம்.
03 September 2011
அதிர வைக்கும் ஆதித்யா குட்டி.
உலகத்தில் மிக விரும்பப்படுவது சிறுவர்கள் அவர்களுடைய ஆக்கங்கள், செயற்ப்பாடுகள் அதுபோல் எல்லாமே. என் வாழ் நாளில் ஏன் எல்லோரது வாழ்விலும் இந்த அளவுக்கு கவர்ந்த திறமையான அழகான செல்லக் குழந்தை ஆதித்யா என்று சொன்னால் அது ஒன்றும் மிகையல்ல. ஆதித்யா குட்டி உங்களுக்கு எனது தெய்வத்தின் ஆசீர்வாதம் என்றும் இருக்க வேண்டுகிறேன்.
சக்தி தயாரிக்கும் நிகழ்சிகள் அனைத்தும் ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை; இருந்தும் சக்தியின் யூனியுர் சுப்புர்ஸ்ரார் நிகழ்ச்சியில் என்னை கவர்ந்த தெய்வக் குழந்தை ஆகித்யா தான்.
என்ன அசத்தலான குரல், என்ன அடக்கம், என்ன மரியாதை, ஞானம் இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய வளத்தை இறைவன் அவளுக்கு கொடுத்து இருக்கிறான் வார்த்தைகளில் சொல்ல முடியாத திறமைசாலி. எனக்கு இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளில் மிகப் பெரிய ஆசை ஆதித்யாவை சந்தித்து நேரில் ஒரு பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசிப்பதுதான்
25 August 2011
'மேலைத்தேச நாடுகளில் அனர்த்தம்' மனிதனை ஆழும் இயற்கையின் எடுத்துக்காட்டு-

யப்பானில் ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை உலக வரலாற்றின் தொழில் நுட்ப்பம், விஞ்ஞானம் இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத சக்தி ஒன்று உண்டு என்பதை கண் மண் தெரியாமல் நாங்கள் தான் தொழில் நுட்ப்பத்தில் பெரியவர்கள், நாங்கள்தான் விஞ்ஞானத்தில் பெரியவர்கள் அதனால் தான் எங்கள் நாடுகளை அனர்த்தங்கள் தாக்குவதில்லை, ஏழை நாடுகளைத்தான் இவை துவம்சம் பண்ணுகின்றது என்ற தலைகள் எல்லாம் மலை சாய்ந்து போன இழப்பில் இருக்கின்ற பெரியவர்கள் உணரத் தொடங்கி விட்டனர் இப்போது.
நுண் நிதி நிறுவனத்தின் குறிக்கோள்கள் எவ்வவாறு நலிவுற்றோரை பலப்படுத்துகிறது.

இலக்குச் சந்தையை தெரிவு செய்வது, நுண் நிதிச் சேவையை வழங்குனர் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அறியப்பட்ட கேள்வி ஆகியவற்றில் தங்கியுள்ளது. எந்தவொரு நாட்டிலும், சேவை வழங்கப்படாத அல்லது குறைவாக சேவை வழங்கப்படுகின்ற தொழில்களும் குடும்பங்களும் உள்ளன. இவர்கள் பொருளாதார ரீதியில் செயலூக்கமற்ற மிக வறியவர்களிலிருந்து தமது சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற வளர்ந்திருக்கின்ற சிறிய தொழில் முயற்சிகள் வரை பரந்து காணப்படுகின்றன.
24 August 2011
கிறிஸ் மனிதன் ஒரு கேள்விக்குறியா?????
இன்று கிறிஸ் மனிதன் தொல்லை கடந்து வந்த பயங்கரவாத சூழலைவிடவும் மிகமோசமானதாக இருப்பதனை நடந்தேறுகின்ற நிகழ்வுகளை வைத்து சொல்லக்கூடியதாய் இருக்கின்றது. நெடுநாளாய் எழுதுவதற்கு உந்தியபோதும் கிடைப்பற்கரிய நேரம் போதாமையால் எழுதமுடியாமல் போய் விட்டது. இருப்பினும் இந்த திட்டமிடப்பட்ட நடவடிக்கை எவ்வாறான பாதிப்புகளை, அடக்குமுறைகளை கொண்டுவந்துள்ளது என்பதனை பார்க்கவேண்டியுள்ளது.
10 August 2011
காதலே வெறும் மாயடா!!!!
காதலே வெறும் மாயடா
ஆதலால் ஆசை மாயடா
வெற்றியை முன்னோக்கிப் பாரடா- உனை
வந்திடும் பின்னோக்கி ஊரடா............
கேவலம் பெண்ணுக்கு அடிமயா!
அவலமே உனக்கென்ன முடுமயா!
சொந்தங்கள் உன்க்கொரு தோழடா- நீ
பேர் சொல்லப்பிறந்த ஆளடா.!.
செல்லம் செல்லம்எண்டு சாகிறாய்!
சீர்கெட்ட பெண்ணுக்கு மோகிறாய்!
உள்ளம் வைத்தவளை தேடடா- நீ
ஒன்றுமறியாத மாடடா! இல்லை
காதலே வெறும் மாயடா
ஆதலால் ஆசை மாயடா
வெற்றியை முன்னோக்கிப் பாரடா- உனை
வந்திடும் பின்னோக்கி ஊரடா.............
26 July 2011
நானும் மனிதனாய்...
என் காமத்தின்
இடைவெளிகளை
காதலின்
படுதோல்விகளை
நீ நெருங்கிப் பழகிய.....
அர்த்தநாரீசம்,
இவையெல்லாம்
இன்னும்
நானும் நீயுமாய்
இருப்பது போன்று
தோத்தரவாக்குகின்றது.
காலத்தின்
காவல் அறைக்குள்-நான்
வாழவும் சாகவும் -முடியாமல்
வானத்தின் கோலங்களாய்-என்
வசந்தங்கள் தொலைந்தும்
நீயும் நானும் இருந்த
நினைவுகளின் ..
மாத்திரைகளுடன்
இன்றோ நாளையோ
என்றோ என்று
நானும் மனிதனாய்....
19 July 2011
றோல் மடல்....

றோல் மடல் என்பது ஒரு விதமான மனவியல் அணுகுமுறை என்று கூறலாம். வாழ்க்கையில் சில பாத்திரங்கள் எங்களை வெகுவாகக் கவர்ந்து கொள்ளும், சில வெறுப்பை ஊட்டும். இன்று சினிமா, விளையாட்டு, மொடலிங், தொடர் நாடகங்கள் இவை எல்லாம் இளம் தலைமுறையினரை பலப்படுத்தியுள்ளதா, பலவீனப்படுத்தி உள்ளதா? ஏன்றால் பலவீனப் படுத்தியுள்ளது என்றே விடை வரும்.
குறிப்பாக இளம் பெண்களிடையே தங்களுடைய வாழ்கை துணைவர் எப்படி இருக்க வேணும் என்ற கேள்விக்கு வந்த பதில்களில் அயன் சூரியா, சியான் விக்ரம், கில்லி விஜய் போன்று கொஞ்சம் பசன், கொஞ்சம் வில்லத்தனம், முழு அக்டிவான ஆளா இருக்கும் ஆண்களைத்தான் பிடிக்குமாம்..
12 July 2011
அனர்த்தங்கள் மனிதனை ஆழும் இயற்கையின் எடுத்துக்காட்டு-
யப்பானில் ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை உலக வரலாற்றின் தொழில் நுட்ப்பம், விஞ்ஞானம் இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத சக்தி ஒன்று உண்டு என்பதை கண் மண் தெரியாமல் நாங்கள் தான் தொழில் நுட்ப்பத்தில் பெரியவர்கள், நாங்கள்தான் விஞ்ஞானத்தில் பெரியவர்கள் அதனால் தான் எங்கள் நாடுகளை அனர்த்தங்கள் தாக்குவதில்லை, ஏழை நாடுகளைத்தான் இவை துவம்சம் பண்ணுகின்றது என்ற தலைகள் எல்லாம் மலை சாய்ந்து போன இழப்பில் இருக்கின்ற பெரியவர்கள் உணரத் தொடங்கி விட்டனர் இப்போது.
22 June 2011
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை.
நான் பார்த்த வரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும,; மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகின்ற கேள்வி, 'ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஸ்ட்டங்களைக் கொடுக்கணும்?' இந்த கேள்வி கேட்க்கப்படும் போதெல்லாம் நான் படித்த கதை ஒன்று ஞாபகம் வருகிறது.
அது ஒரு கிராமம், சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான், அப்போது 'என்னைக் காப்பாற்று காப்பாற்று' என்று ஒரு அலரல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்து பரிதாபமாகக் கத்துகிறது. 'உன்னை வலையில் இருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி வீடுவாய்' நான் மாட்டேன் எனறு முதலையை காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.
20 June 2011
கன்னியின் மடியில் சாய்வதும் இன்பம்..
19 June 2011
கண்ணகி இலக்கிய விழா.
"மழைக்கு வர்ணன், காற்றுக்க வாயு துன்பத்தில்
திளைக்கும் உலகை காப்பது விஸ்னு
கற்புக்கு அரசி கண்ணகி தானே.....
உலகமே உணரும் வண்ணம் உன்மையை உரைத்த தாயி
ஊரெல்லாம் குடியிருந்து உலகாழ்வது அழகு.
ஊருக்கு உண்மை அழகு
உன்மைக்கு பெண்மை அழகு- அந்தப்
பெண்மைக்கு கண்ணகிதான் அழகு"
கண்ணகி தனிப்பெரும் இலக்கிய, ஒழுக்க, தமிழ் பண்பாடுகளின் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழும் ஒரு படைப்பாகும். இதனால்தான் இன்றும் குறிப்பாக தமிழர்கள் வாழ் இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் அவளுக்கு விழா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இருந்தும் பொதுவாக விழாக்கள், நிகழ்வுகள் அவற்றைப்பாதுகாப்பதற்க்கான முனைப்புகள் இதுவரை எடுக்கப்படவில்லை காரணம் மூன்று தசாப்தகால யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் பலவீனம் என்பன போன்ற இன்னோரன்ன காரணங்களை சொல்லலாம். இவற்றை உணர்ந்த மட்டக்களப்பு வாழ் அறிஞ்ஞர்கள், கலைஞர்கள் சமுகம் பெருவளவிலான முனைப்பில் இதனை இப்பொழுது அழகாக திட்டமிட்டு நடத்துகின்றனர்.
13 June 2011
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை...
'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவள் அடி தொழ மறுப்பவர் மனிதர் இல்லை' அன்னை வர்ப்பினில்தான் ஒரு பிள்ளையின் இலட்சியம், ஆழுமை, மனப்பாங்கு விருத்தி, தலைமைத்துவம் என்று எல்லாம் அடங்கி இருக்கின்றது என்பதை பறை சாற்றும் வகையில் ஒரு உன்னத பணியை கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் மற்றும் சமுகத்தொண்டனுமான திரு ஞா.தில்லைநாதன் அவர்களின் தலைமையில், 11 யூன் 2011 அன்று கிழக்குப்பல்கலைக்கழக பிரதான மண்டபத்தினில் அன்னையர் கௌரவிப்பு நிகழ்வு, கலைப்பீட சிறப்பு கற்கை மாணவர்களின் உறுதுணையுடன் நடத்தப்பட்டது. அதிதிகளாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசா, சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ஜெய்சங்கர் மற்றும் பிரதிப்பதிவாளர் மும்தாஜ் ஆகியோருடன் மாணவர்களின் தாய்மார், மாணவர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்......
இதில் மானவர்களின் அன்னையர்கள் அவர்களின் முன்னே, இப்பிள்ளைகளை பெற்றெடுத்த பெருமைக்காக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது எல்லோரயும் மனம் நெகிழ வைக்கும் ஒரு பெறுமதி மிக்க நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வாழும்போதே போற்றுதல் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அங்கு அவர்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள், கல்வி நிலை, அவர்கள் மீது அன்னையர்கள் எடுக்கவேண்டிய கருசனைகள் என்பனவும் சிலாகிக்கப்பட்டதுடன். மாணவர்கள் விரிவுரையாளர்களின் கவிதை, பேச்சு, இன்னோரன்ன நிகழ்வுகளும் சேர்த்து அவையை களைகட்ட வைத்தமை சிறப்பு. இதில் பாராட்டுகளும் வாழ்துகளும் அதன் ஒருங்கிணைப்பாளர் தில்லைநாதனுக்கே சேரவேண்டும்.
புத்தக வெளியீடு
அன்னயர் தின சிறப்பு மலர் வெளியீடு ஒன்று இடம்பெற்றது. இதில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான ஆக்கங்களை உள்ளடக்கமாக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதன் ஆசிரியராக செல்வி நிஸாந்தினி, 3ம் வருட சமுகவியல் சிறப்பு கற்கை மாணவி இருந்து நெறிப்படுத்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது இம்மலரின் முதல் பிரதியினை சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியரும், கலைப் பீடாதிபதியுமான மா.செல்வராசா அவர்கள் பெற்றுக்கொள்ள அடுத்த பதிவு பிரதிப்பதிவாளர் மும்தாஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ஓளிந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுத்து, மாணவர்களின் இயலுமைகளை அவர்களது தாய்மாரின் முன்னே அறியப்படுத்தி. வாழ்க்கையின் ஒளி பொருந்திய பாதைக்கான வழிகளாக விரியச் செய்யும் ஒரு ஜனரஞ்சக சமுகமயமாக்கல் செயற்பாட்டியின் முதற்க்கட்டமாக இதனை செய்துள்ளதாக விரிவுரையாளர் ஞா.தில்லைநாதன் குறிப்பிட்டிருந்தார்.
10 June 2011
கண்ணகிக்கோர் கவியாரம்....

மின்னல் ஒளிபரப்ப சென்நெல் கதிர் இசைக்க
சோவெனத் தருக்கள் பூத்து சொரிந்து மணம் வீசிநிற்க்க
ஆவெல்லாம் பால் சொரிந்து அழும் பிள்ளை பசிதீர்க்க
தென்னகத்தே கண்ணகித்தாய் வண்ணமதாய் பிறக்கின்றாள்.
மதுரை மானகரம் மங்களமாய் அருள் பரப்ப
எதிரே நின்றபகை எல்லாம் ஒளிந்துவிட
உதிரும் புன்னகை உதட்டினில் ஜொலிக்க
உதித்தாள் பூம்புகார் மண்ணில் உத்தமி
தெய்வக் குழந்தையாய் உதித்த தேவி மானாக்கன்
கையில் மகளாய் மலர்ந்து நின்றாள்
வையகத்தே ஆயிரங்கண்ணாள் அம்பிகை வடிவில்
உய்யவைக்க வந்துதித்தாள் ஊரெல்லாம் நமக்காக
பத்தியால் கொண்ட சித்தியால் பெற்ற வெற்றியால்
உள்ளத்தால் உயர்ந்த எண்ணத்தால் அழகு வண்ணத்தாள்
மெல்லத்தான் மலர்ந்தாள் அழகால் வளர்ந்தாள்
புன்னகைத்தாள் தெய்வத்தைப் பின்னவைத்தாள்
கண்ணகித்தாய் என்று எண்ணவைத்தாள் நம்மையெல்லாம்.
மெல்லத்தான் அழகை சொல்லத்தான் இடையிலில் மாசாத்தான்
மகனாய் வளர்தான் பக்தியில் உயர்ந்தான் சித்திகள் பெற்றான்
இதை சொல்லத்தான் மனதில் எண்ணித்தான் விரைந்தான் மதுரையை அடைந்தான் கோவலன் தந்தை மாசாத்தான்.
இட்டபடி இறைவன் கட்டளைக்கு ஏற்ப்ப கட்டளகி கண்ணகியாள் கட்டளகன் கோவலனை திட்டமிட்டபடி மதரையில் திருமணம் முடித்தனர்.
சட்டங்கள் தவறாமல் தவமயில் கண்ணகியும்
துதித்தாள் கணவனை மதித்தாள் கொண்ட சிறப்பால்
கோவலனும் எதைத்தான் கொடுக்க மறுத்தான் வாழ்வில் சிறந்தான்.....இந்நாளில்....
நெஞ்சில் பட்டதோ ஊழ்வினை தொட்டதோ வாழ்வினை சுட்டதோ
கோவலனை விட்டதோ இல்லை
மஞ்சம் கொண்டதோ மார்க்கம் மாறியதோ மாதேவி ஆசை தேறியதோ மயிலாள் கண்ணகி மதித்த கணவனுக்கு.
இசையில் இழகியதால் இன்பத்தில் பழகியதால்
பிசகாமல் அழகியவள் பின்தொடர்ந்து சென்றதால்
ஆசையில் ஆபரணங்கள் அத்தனையும் விற்றதால்
வசைமொழி கேட்டதால் வாடி நின்றான் கோவலன்.
ஆங்கே மன்னவன் பாண்டியனின் மனைவியின் சிலம்பமும் தொலைந்து போனதுதான் என்னே என்ன ஆச்சரியம்.....
மன்னவன் பாண்டியன் பிடித்தான் கோவலனை அடித்தான் மன்னவனின் வசைகேட்டுத் துடித்தான் தன்நெஞ்சில் தானே கையால் இடித்தான் எண்ணமெல்லாம் துண்டு துண்டாய் ஒடித்தான் கோவலனும்.
பாண்டிமா மன்னவனின் பாவத்தில் கொன்ற செய்தி கேட்ட காலத்தின் காவல் நாயகி, ஞாலத்தின் கற்ப்புக்கரசி, உன்மையை மட்டும் உரைக்கும் உத்தமி, நன்மையை நலமாய் நல்கிடம் மாது என் செய்தாள் தெரியுமா?
மதுரை மன்னனின் மாளிகை நோக்கி
மற்றோர் சிலம்பை கையில் தூக்கி
சென்றாள் சினத்தை உடலெங்கும் பரவி
போய்முன் நின்றாள் கணவனை
கொன்றவர் யார் என்று வினவி
வழக்கைத் தொடர்ந்தாள்
வாழ்கைக் கேட்டு தன்
பிழைப்பைக் கெடத்த பெருமன்னன் முன்னே.
மன்னவன் பாண்டியன் மறுத்துரைக்க,
கையில் இருந்த சிலம்பமும் மன்னவனால்
களவாடியதென்ற சிலம்பமும்
ஒன்றென மன்னன் பொய்யில் -என்னை
பழித்துரைத்ததை தையல் கண்ணகியாள,;
அங்கம் சிவசிவக்க பொங்கிவரும் கோபம்
தகதகென்று நெருப்பாய் எரிய
எங்கும் இருக்கும் இறைவன் இருப்பதென்றால்
மன்னன் வாயின் வார்தை பொய் என்றால்
நின்றால் இறைவன் முன்றால்
உன்மை கொன்றால் மதுரை மா நகரே
பத்தி எரிக என்றாள் சிலம்பை வீசி.
மழைக்கு வர்ணன், காற்றுக்க வாயு துன்பத்தில்
திளைக்கும் உலகை காப்பது விஸ்னு
கற்புக்கு அரசி கண்ணகி தானே.....
உலகமே உணரும் வண்ணம் உன்மையை உரைத்த தாயி
ஊரெல்லாம் குடியிருந்து உலகாழ்வது அழகு.
ஊருக்கு உண்மை அழகு
உன்மைக்கு பெண்மை அழகு- அந்தப்
பெண்மைக்கு கண்ணகிதான் அழகு.
வங்கக் கடல் மாலையிட சங்கத்தமிழ்
எதிரொலிக்கும் மங்களத் திருநாடாம் இலங்காபுரியில்,
நீர்த்தாய் குளிர்பரப்ப நிலத்தாய் வளங்கொலிக்கும்
பார்த்தால் பசிதீர்க்கும் பசிஞ்சோலைப் பட்டினமாம் -
மீனினம் பாட்டிசைக்க மானினம் துள்ளியோடும்
வானகம் கறுக்கக் கண்டு மயில்கள் கோலாகலிக்கும,;
பசித்தோரின் முகம் பார்த்து பசிதீர்க்கும் பொன்னாடாம்
மட்டக்களப்பதனில்,
தாமரை மலர்கள் எல்லாம் வாவெனக் கையசைக்கும்,
மாமதுரை பூத்து நின்று வாசம் பரப்பிநிற்கும்
செட்டியார் குலமக்கள் செறிந்திலங்கும் செடடியூரில்
வந்தமர்ந்த மாதுக்கு கையில் தீச்சுடரும், மடியில் மடிப்பிச்சையும்,
தோழில் காவடியும், சொண்டில் அலகும் குத்தி, வசந்தன் வைத்து
கும்மி கரகம் ஆடி, பசிந்தாள் இலையில் பசிஆற்றி குளிர்தில் வைத்து கொண்டாடும் வைகாசி இது வரும் போது ஊரெல்லாம் கைராசி...
06 June 2011
கவலைக்கிடமாகி வரும் மனித வாழ்க்கை.....
மனிதர்கள் என்ன புல்பூண்டு, பூச்சுகள் கூட அழிந்து விடக்கூடாது என்று சட்டம் இயற்றி அவற்றை எல்லாம் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இன்று மனித அவலத்தில் மிகமோசமாக இருப்பது வீதி விபத்துக்கள்தான். யுத்தம் போன்று மனித சமுகத்தினையே அச்சுறுத்தும் ஒரு இடர் எனவும், அதனால் வீதி சமிக்ஞைகளை கையாழ்வதில் ஒருமித்த அர்ப்பணிப்பு சாரதிகளுக்கு தேவை எனவும் அண்மையில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு மாநாட்டில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
01 June 2011
மட்டக்களப்பு கிராமங்களில் துளிர் விடும் தழிழ் உணர்வுகள்.

'தேன் கதலி சூழ்ந்ததனால்
தேத்தாத்தீவு என்ற
நான் பிறந்த மண்ணுக்கு
நல்ல தமிழ் வணக்கம்'
மட்டு வாவி குளிர் பரப்பும் தேத்தாத்தீவினில், தேன் சொட்ட கவிபாடிய கவியரங்க நிகழ்வின் நீள அகலம் பற்றியதான ஒரு குறுக்கு வெட்டு பார்வை இங்கு சிறிய கட்டுரையாகத் தரப்படுகின்றது.
24 May 2011
பெண் சிசுக்களைப் பலிகொடுக்கும் இந்தியா....

இந்த உலகத்தில் இந்தியாவில் ஏழு வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகளில் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, தரவுகளின்படி எட்டு மில்லியன் பெண் குழந்தைகள் கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர் இந்தியாவில். வறுமை, விருப்பமின்மை, பெண்கள் இன்னொரு வீட்டுக்கு போகும் ஒருத்தி, சீதனக் கொடுமை இது போன்ற ஏராளமான காரணங்களினால் பெண் குழந்தைகள் தாயின் முன்னே பரிதாப கரமாக இறக்க வைக்கும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், பெண்கள் பிறப்பது ஒரு சாவக்கேடு என்ற ஒரு அநியாயத்துக்கு நியாயமான காரணங்களினால் கருவிலும், பிறந்த பின்னும் எத்தனையோ குழந்தைகள் அழிக்கப்படுகின்றன என்ற உன்மையை பீ.பீ.சீ செய்தி சேவை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கல்வான் என்ற பெண்மணி 2 பெண் பிள்ளைகளைப் பெற்று எடுத்து பின்னர் மூன்றாம், நான்காம் ஐந்தாம் பிள்ளைகள் பெண்ணாகப் பிறக்க இருப்பது ஸ்கான் பரிசோதனை மூலம் அறிந்த பின்னா,; தனது மாமியார் அவரை அச்சுறுத்தி, இந்த மூன்று பிள்ளைகளையும் கருவிலே அழித்தனர், அது தனது மாமியார் தன்; மகனை விவாகரத்து செய்யப்பண்ணப் போவதாகச் சொல்லியே இதனை சாதித்தனர். இதற்கு பின் பிறந்தது ஆண்குழந்தை, ஆதலால் அவனுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் கல்வான் தெரிவித்திருந்நதாக அச்செய்தி கூறுகின்றது. அவர்களுக்கு தேவை ஆண் குழந்தையே, ஏனெனில் அப்போதுதான் அவனுக்கு கொழுத்த சீதனம் பெற்று கொள்ளலாம் என்று அவர்கள் கூறியதாக கல்வான் மனமுடைந்து சொல்லி இருந்தாள்.
குழந்தைகளை இறக்கவைக்கும் முறை..
தேவையில்லாத குழந்தைகளை அங்கு கொல்லும் அநாகரிகமற்ற செயல் மிகவும் கொடூரமானது. குழந்தை பிறந்தவுடன் ஈரப்பைக்குள் போட்டு மூச்சி எடுக்கவிடாமல் கொலுவது, பிறந்தவுடன் குழந்தைக்கு பாலுடன் நெல்மணிகளை போட்டு அது மெல்லிய தொண்டையை அறுப்பதனால் அக்குழந்தையை இறக்க வைப்பது, அக்குடுமமபத்தினரால் அல்லது இக்கொலை செய்வதில் பரிட்சயமானவரினால் தான் இவை செய்யப்பட்டு, அந்த ஏழைத்தாய் அதன் பின் குப்பை கூட்டும் வேலைக்கு பலவந்தமாக 50 ரூபாய் பணத்துக்கு அனுப்பி கொடுமைப்படுத்துகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக தழிழ் நாட்டில் தர்மபுரி, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில்; அதிகம் காணப்படுவதாக சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும் தர்மபுரியில் மாத்திரம் வருடத்துக்கு 1300 கழந்தைகள் அவ்வாறு கொல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
சட்டங்களும் ஓட்டைகளும்...
1961இல் இந்தியா சட்டப்படி சீதனம் வேண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்திருந்த போதிலும் அவை இன்றும் ஒரு படி வளர்சியடைந்து அது வறியவர் செல்வந்தர்கள் என பகுபாடு பார்க்காமல் எல்லோரையும் பாதித்துள்ளது. இந்த பெண்ணின் செய்தி மில்லியன் கணக்கான குடும்பங்களின் மூடத்தனமான செயலையே சுட்டி நிற்கின்றது.
தகவலின்படி 1961 இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது ஆனால் அவை இன்று 914 ஆக குறைந்துள்ளது. அதற்கும் மேலாக பெண்களின் வளர்ச்சி எல்லா துறைகளிலும் பரிநமித்து நிற்ப்பதோடு, சைனாவின் ஆண்களுக்கான பெண்களின் போதாமையினை விட இந்தியாவில் அது மிக மோசமடைந்துள்ளது, என்று தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றது.
பரிசோதனைகளும் பாதகமும்.
குழந்தை பிறந்து 24 மணிநேரத்துக்குள் குடம்பத்தினரின் சம்மதம் அல்லது விருப்பத்தடன் கொலை செய்தல் (Infanticide) மற்றும் கருவிலே பிள்ளையை வளரவிடாமல் சத்திர சிகிச்சை செய்தல் (Foeticide) இந்த நாட்டுக்கே ஒரு அவமானச் சின்னமாகும் இவை இந்நாட்டின் பெண்பிள்ளைகளை காப்பாற்றுவதற்க்கான பாரிய இடர்களாக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார்.
1974 இன் பின் இந்த பால்நிலையை குழந்தை பிறக்குமுன்னே அறிந்துகொள்ளும் ஆர்வம் இந்நாட்டு மக்களிடையே அதிகரித்துக் காணப்பட தொடங்கியது, என அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிலைய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இது, எத்தனையும் ஆண் பிள்ளைகளை பெறலாம் என்பதற்க அப்பால் பொதுவாக சனத்தொகை வளர்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு உத்தியாகவும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தொரிவிக்கின்றனர்.
குறிப்பாக 1980 களின் பிற்ப்பாடு, வயிற்றில் கருவுற்றிருக்கும் குழந்தைகளின்; பால் வகுப்பை அவர்களின் உடல் அமைப்பைப் கொண்டு கண்டறியும் பரிசோதனை (Ultra Sound Determination test) பத்திரிகைகளில் முந்தியடித்துக் கொண்டு விளம்பரப்படுத்தியமை அதன் கேள்வியின் நிலையை உணர்த்துளின்றதல்லவா. 1994 காலப்பகதியில் ஆரம்ப கால உயிரியல் தீர்மானத்திற்க்கான பரிசோதனை (Pre- Natal determination Test (PNDT)) குழந்தைகளின் பால் வகுப்புக் கண்டு பிடித்து குழந்தைகளை கொலைசெய்வது தடை செய்யப்பட்டு இருந்தது.
இருப்பினும் 2004 இல் இது மீண்டும் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டு குழந்தை கருத்தரித்த சிறு காலத்திலேயே கண்டறிய கூடிய நிலையில,; இது இருந்து வந்தது. இருப்பினும் இத்தகைய குழந்தைகளை கருவிலே அழித்தல் சட்டப்படி 12 வாரத்துக்குத்தான் அந்நாட்டுச் சட்டப்படி செல்லுபடியாகும், ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதனை அறிய 14 வாரம் தேவைப்படுகின்ற படியினால்தான் இது சாத்தியமாகின்றது. இன்று இந்திய நாடெங்கும் 40,000 பால் நிலைப் பரிசோதனை நிலையங்கள் முளைத்து, பல விலாசமே இல்லாமல் துலைந்து போய்விட்டதாகவும் BBC செய்தி தெரிவிக்கின்றது.
ஆகவே ஒட்டு மொத்தத்தில் இந்த கொலைக்கான ஒட்டுமொத்த முதற்க்காரணம் இந்த குழந்தை பிறக்குமுன்னரான பரிசோதனைகளின் அதிகரிப்பு, சட்டத்தின் இறுக்கமற்ற தன்மை, குடும்பத்தின் மூட நம்பிக்கை, பெண்கள் மீது வைத்திருக்கும் வெறுப்பு, சீதனக் கொடுமை போன்ற இன்னோரன்ன காரணங்கள் இக்குழந்தைகள் பரிதாபகரமாக கொல்லப்படுவதற்கு தூண்டுதலாக இருக்கின்றது. ஒரு மன வேதனை என்னவெனில் முல்லை கொடி படர கொப்பு இல்லாமல் சுடு வெயிலில் கிடப்பதை தாங்காமல் தனது தங்கத் தேரினை அது படர்ந்து செல்ல நிறுத்திச் சென்ற காருண்யமான நாட்டில் ஒரு மனிதக் குழந்தை வாழவிடாமல் அழிக்கும் செய்தி காதில் வெண்ணீராய் பாயுது.
23 May 2011
தமிழ் முத்தம்..
கைகள் சுற்றி வழைத்து
கழுத்தின் நாண் உயர்ந்து
இழுத்து உடன் அணைதது
பழுத்திருக்கும் இதழோரம்
பனித்திருக்கும் சுவை கலக்கும்
மேலை தேச முத்தச்சுவை
காமம் அடக்கும் கயிறாகலாம்
கன்னத்தில் குழந்தை முத்தம்
கைகளில் வீர முத்தம்
நெற்றியில் காதல் முத்தம்
நெஞ்சில் கலங்கும் முத்தம்
எத்தனை எத்தனை முத்தம்
அத்தனையும் இருந்தாலும்
தழிழ் கலந்து தழுவும் முத்தம்
தரணியிலே நிலைக்கும் நித்தம்
22 May 2011
நாகரிக வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் நாட்டுப்புற வழக்காறுகள்.
மனித இனம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த அளவு பழமை மிக்கது நாட்டுப்புறவியலாகும். இதில் மட்டக்களப்பு அளவில் எத்தகு நிலையில் நாட்டுப்புறவியல் விளங்கியது என்பதைக் காணும் போது, மட்டக்களப்பில் நாட்டுப்புறவியல் துறை தனித்ததொரு துறையாக வளரவில்லை. ஆனால் அது சமயம், தமிழ், விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளை சார்ந்து மட்டக்களப்பில் ஒரு சமுகத்தின் நாரிகக் கண்ணாடியாகவே அமையப்பெற்றிருந்தது.
குறிப்பாக மானுடம் தொடங்கிய காலம் முதலே நாட்டுப்புற வழக்காறுகள் தோன்றிவிட்டன. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்த படைப்புத்திறன் மிக்க வழக்காறுகள் இலக்கியமாகப் பரிணமித்தன. அவை,
1) பொது மக்களைச் சார்ந்த மரபுமுறைகள் என்றும்,
2) பொது மக்கள் இலக்கியம் என்றும்,
3) பொதுப் புராணவியல் என்ற
பெயர்களிலும் வழங்கப்பட்டன.
ஆனால் வில்லியம் ஜான் தாமஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி.1846 ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலைக் குறிக்கும்
"Folklore" என்ற சொல்லை உருவாக்கி உலகுக்கு வழங்கினார். இச்சொல்லே பெருவாரியாக எல்லா நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு, மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப் பாடல் என வழக்காறுகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் இலக்கியம் என்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டுப்புறவியல் என்பது பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) என்பது அவர் கருத்தாகும்.
உலக நாடுகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரெஞ்சு, ஜெர்மன், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இவ்விலக்கியத்தின் பல்வேறு கூறுகளை, தத்தம் மண்ணின் மணம் வீசத் திறனாய்வு செய்து உலகளாவிய அளவில் நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பினை உணரும்படி செய்தன
ஒரு சமுகத்தின், இனத்துவத்தின் தனித்தன்மையை புடம்போட்டு, பட்டை தீட்டிக்காட்டுவது அதன் வளக்காறுகள், ஒழுக்க விழுமியங்கள், பண்பாட்டு மரபுகள் என்பவைதான். நாகரிக வேலிக்குள் அகப்பட்டுக்கிடக்கும் தேன் தமிழ் வந்து பாயும் மட்டக்களப்பின் வழக்காறுகள் மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின் தற்பொழுது சிறியளவில் தூசிதட்டி பார்க்கும் ஒரு போக்கு வரவேற்க்கத்தக்கதே. இருப்பினும் அவையெல்லாம் அழிந்து போகும் இத்தறுவாயில் மீட்டெடுக்க போதுமான சத்திகளா! என்ற கேள்வி தொக்கு நிக்கின்றது. சோதிடம், கிராமிய பூசை நடைமுறைகள், விருந்தோம்பல், கூத்து, கரகம், கும்மி, மகிடி, விளையாட்டுகள், பழமொழிகள், மாந்திரிகம், சோதிடம், பறை மேளம் போன்ற அரிய தழிழ் சொத்துக்கள் இன்று எங்கே போய்விட்டது??
"காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.""http://vadaliyooraan.blogspot.com/"
ஆய்ந்து அறிந்து சொல்லுவது ஒன்றும் முக்கியமல்ல, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு தழிழுர்கள் ஒவ்வொருவுரினதும் பொறுப்பல்லவா? இல்லாவிடின் நாளை இன்னொருவன் வந்து இங்கு தழிழர்கள் வாழ்ந்தார்களா! என்று கேட்கும்போது, நாங்கள் அவற்றின் அடையாளங்களை துலைத்து பல்லை இழித்தால் பயன் இல்லை.. நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.. இச்சமாதான காலத்தில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீளமைக்க வேண்டும்.. அது தான் நமது அடுத்த பரம்பரைக்கு இனத்துவ அடையாளமாக அமையும் என்பதை உணர வேண்டும்.
இந்த நிலையில் நான் மட்டக்களப்பின் மத்தியில் முந்திரிகை மணம் வீச வெள்ளரி வளம் கொலிக்கும் புதுக்குடியிருப்பு என்னால் மதிக்கப்படும் ஒரு தழிழ் கிராமம் என்றால் அது மிகையாகாது. அங்கு அண்மையில் நடந்து முடிந்த கண்ணகை குளிர்திதில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, அத்தனை பாரம்புரியம், பண்பாடு, நாரிக விழுமியம்..சோக்கான குடிமக்கள்... இது போன்று எமது ஏனைய தழிழ் மக்கள் தங்களது தனித்துவத்தினை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்.அதன் சில புகைப்படங்கள் இங்கே...
ஆனால் இப்போது, சினிமா மோகம், ஊடக துறையின் முறைகெட்ட அபார வளர்ச்சி, தொலைத் தொடர்பு தொல்லை, பாரம்பரியத்தை பாராமுகமாப் பார்க்கும் அநாகரிக மாயை..போன்ற இன்னோரன்ன காரணங்களால் எமது தமிழ் மக்களின் தூய தனித்துவங்கள் மழுங்கடிக்கப்பட்டு மாற்றான் பிள்ளைகளாக மாறி நமக்கென ஒரு தனித்துவம், கலாசாரம், இன்னும் எல்லாவற்றையும் அழித்து வாழுகின்ற சமுகத்தை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது.
பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள், பாடசாலைகள் இவர்கள் ஒரு சமுகத்தின் முதுகெலும்புகள் அல்லவா அவுர்கள் வளைந்து விடக்கூடாது நிமிந்து நின்று இந்த கமுகத்தின் தனித்துவம் காப்பது அவர்களது பொறுப்பாகும் அல்லவா??
20 May 2011
கண்டீர்களா, என் காதல் தேவதையை!...
19 May 2011
முழு நிலா
பளிச்சிடும் முழு நிலா –உன்
பார்வை தேன் பலா..
என்னிடம் நீயிலா...
ஏங்கிடும் நம் உலா.
கண்கள் இமை மூடும்
குளிரோடை..
காமன் மலர் தோட்ட
மணவாடை..
இதழ்களின் இடையினில்
இதமான தேன் விழும்
இரவுகள் விழித்திடும்
இளமகள் தேருலா
கைகள் அணைத்திட
உனைத் தொட
குனிந்திடும் முகத்தினில்
மோகம் வந்து சேரும்..
பளிச்சிடும் முழு நிலா.....
18 May 2011
சாதனை!
இதயம்..
நெஞ்சினுள் கூடு கட்டி,
நினைவுகள் கோடி வைச்சி,
பஞ்சிபோல் உள்ளே இருக்கும்..
இதயமே!
கண்ணை வைத்து,
காதை வைத்து,
வாயை வைத்து,
வயிற்றை வைத்து
உன்னைக் காட்டும் - இறைவன்,
இதயம் வைத்து,.....
மறைத்து விட்டான் மனதை..
வெற்றுச் சிரிப்பில்,
விழுந்து எழுந்து
கட்டி அணைப்பில்,,,,,
விட்டு மறந்து.....
பட்டதெல்லாம் வேசம்..
தொட்டதெல்லாம் மோசம்...
உன்னைக் காட்டும் - இறைவன்!!
இதயம் வைத்து
மறைத்து விட்டான் மனதை..!
என் கண்ணில் கண்ணீர்....
உன்கண்ணில் உதிரம்!!
என் வயிற்றில் பசி .....,
உன் முகத்தில் கலவரம்..
எனக்கு காச்சல் வந்தால்
உனக்கு தலை வலிக்கும்...
எனக்கு நீ என்றேன்
உனக்கு நான் என்றாய்...
இதயம் கண்டேன்..
உன் செயல்களின்
மறுமொழியில்
கண்களின் உவர் கசிவுகளில்
இதயம் கண்டேன்.
மென்மையாகப் பேசுவோம், மேன்மை பெறுவோம்.

'நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு' உலகத்திலேயே பெரிய ஆயுதம் எது எனின் அது நாக்குத்தான்... அதை நாங்கள் அவதானமாகப் பாவிக்காவிடின் பின்னர் மிக மோசமான பழிக்கு ஆளாகி விடுவோம், என்கின்ற உன்மையை வள்ளுவப் பெருந்தகை மேலுள்ள அடியில் தெழிவுறுத்தியுள்ளார்.
பேச்சற்ற சிந்தனை இருக்கலாம், ஆனால் சிந்தனையற்ற பேச்சு இருக்கவே கூடாது. மனிதனின் தனிச்சிறப்பே, அவனின் சிந்தனைத் திறன்தான். சிந்தனையின் வெளிப்பாடே பேச்சு, பேசும் திறன். மனித இனத்துக்கு மட்டும் இறைவன் கொடுத்த அருள் பரிசு அது.
இன்றய வாழ்வின் தனிமனிதனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாய் இருப்பது பேச்சுத்திறன். இதைத்தான் 'நாநலம்' என்பார் வள்ளுவர்.
'நாநலம் எனும் நலனுடமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று'
வாய்திறந்து வெறும் வார்த்தைகளைக் கொட்டுவது பேச்சு அல்ல. அது பேதைகளின் வார்த்தை சலசலப்பு, ஜாலமும் கூட. அங்கு கருத்துகள் கலக்காத காற்று ஓசை மட்டுமே, கேட்பவரின் நெஞ்சையும் அது தொடுவதில்லை, கேளாதாரையும் ஈர்ப்பதில்லை.
சமுதாயத்தின் மதிப்பும் மரியாதையும் தேடித்தருவது பேச்சுத்தான். ஒரு சொல் வெல்லும்; மறு சொல்லோ கொல்லும்! இத்தகைய சக்தி வாய்ந்த கருவியை, அறிவின் துணை கொண்டே பயன்படுத்தவேண்டும். அதனால்தான் சொல்வார்கள், எண்ணங்களின் மேலாடையே பேச்சு என்று.
பண்டைய காலத்தில், பேசும் கலை மிகவும் உச்ச நிலையில் இருந்தது. அக்காலத்தில் மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்க வேறு வழி இருக்கவில்லை, எனவேதான் பேச்சு, கலை வழியாக, கவிதையாக, கருத்துக் குவியல்களாக, எழிமையாக ஏற்றம் மிகு நடையில் சொல்லி வைத்தார்கள்.
இன்று அச்சுக்கலையின் அபார வளர்ச்சியாலும், ஊடகம், சினிமா மோகம் இது போன்ற அறிவியலின் விளைவுகளாலும் பேச்சுக்கலை மூச்சிழந்து நலியத் தொடங்கி இருக்கிறது. அழகாக - அறிவுடன் - இனிமையாக பேசத் தெரிய வேண்டும். எந்தச் சூழ்நிலையில், எவருடன் பேசுகிறோம் என்பதனை உணர்ந்து, மற்றவரின் திறன் அறிந்து, எளிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.
உன்மையில் 'சிந்தனையின் அழகு சொல்லில் மிளிர்கிறது' என்பார் இராஜாஜி. எவரிடமும் பேசுவதற்கு முன் தெளிவான சிந்தனை ஓட்டம் வேண்டும்.

மேன்மையாகவே மேதினியில் பேச வேண்டும், கேட்பவரின் உள்ளத்தை அன்பால், அறிவான சொற்களால், இனிமையாக, இதமாகப் பேசி முற்றுகையிட வேண்டும். அந்த மோகன வேலை நமக்கு முழு உலகத்தினையே வாங்கிக் கொடுத்துவிடும் இல்லையா. அன்பு இதயம் கிடைத்துவிட்டால், அவணியில் ஆகாத காரியமும் உண்டே.. எனவே அன்பாகப் பேசித்தான் பழகுவோமே!!!!!