மரம் நடுதல், ஓய்வு விடுதி கட்டுதல், பாடசாலை கட்டுதல், நீர்த்தொட்டி நிறுவுதல், அன்னசத்திரம் அமைத்தல் போன்ற செயல்களும் முற்காலத்தில் தானமாகச் செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் ஒரு செல்வந்தர் தன் சுற்றுப்புற மக்களுக்குச் செய்யும் தானமாக இருந்தன. ரிக்வேதத்தின் 10:117-ஆம் பாடல்.
அது நல்ல காடுகள் மரங்கள் இருந்தவேளை செய்யப்பட்டவை. ஆனால் அவை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட அவற்றை உருவாக்கும் மனநிலை இல்லாத அழிக்கும் மனநிலை உள்ளவர்கள் மிருகங்களிலும் கேவலமான மனதுடையவர்கள். தேற்றாத்தீவு எனது கிராமம்தான் ஆனால் அக்கறை இல்லாதவர்கள் இருப்பதனையிட்டு கவலையடைகின்றேன்.

அடேய் எலெக்சன் கேட்க்க, கலக்சன் எடுக்க, மண்ணை அகழ, குளத்தை நிரப்ப, விளையாட்டுப் போட்டி, வினோத நிகழ்வுகள், களியாட்டங்கள், லெட்ஷக்கணக்கில் அபிஷேகங்கள் இன்னும் என்னோத்துக்கெல்லாம் கோயிலைப் பயன்படுத்தும் நீங்கள், குளிர்ந்த நிழலும் கொடியசையும் காற்றும் மலிந்த நிலக்கீழ் நீரும் மறுக்காமல் தரும் மரங்களைப் பாதுகாக்க என்ன செய்தீர்கள்? விளையாட்டுக் கழகங்களும், கலைக் கழகங்களும் மலிந்ததுபோல் சூழலைப் பாதுகாக்க எண்ணம் எழவில்லை. அவையும் எமது குடும்பத்தில் ஒன்று மறந்து விட்டீர்கள் போலும்.
அழுது அழது எழுதுகிறேன். அறம்பாடி எழுதுகிறேன் இந்த மரக்குழந்தைகளை மண்ணாக்கியவர்கள் கொடுமைப்பட்டு இறப்பார்கள். அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அதைவி; கொடுமைப்படுவார்கள், அதைப் பார்த்தும் பாராமல் இருந்தவர்கள் அதுக்கு மேல துன்பப்படுவர். ஆ ஊ என்றால் மாலையுடன் நிற்கும நீங்கள் அறம் காக்காகாமல் புறங்காட்டி ஓடும் கோழைத்தனத்தை என்னவெனச் சொல்ல?
பல மதுரை மரங்கள் அடியில் தீக்கொழுத்தி தீக்கொழுத்தி அடியோடு விழுந்து கிடப்பது தாங்க முடியவில்லை. அம்மா, அம்மப்பா, பாட்டன் அதற்கும் முன்னோர் அருமையாக நாம் சுவாசிக்க நல்ல மரம் நட்டார்கள், ஆனால் இன்று நாம் எமது குழந்தைகள் மூச்சுத்திணறி முழுவேதனைப்பட மரங்களின் இடியில் நெருப்பிட்டு ஒன்றொன்றாக வீழ்த்துகின்றனர் இவை எமது அடிவயிற்றில் வைக்கும் நெருப்பு மறக்காதீர்கள். நீங்கள் வேதங்கள் சொல்லும் தர்மத்தை அவமதித்தவர்கள்.

மரம் நடுதல், ஓய்வு விடுதி கட்டுதல், பாடசாலை கட்டுதல், நீர்த்தொட்டி நிறுவுதல், அன்னசத்திரம் அமைத்தல் போன்ற செயல்களும் முற்காலத்தில் தானமாகச் செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் ஒரு செல்வந்தர் தன் சுற்றுப்புற மக்களுக்குச் செய்யும் தானமாக இருந்தன. ரிக்வேதத்தின் 10:117-ஆம் பாடல். அது நல்ல காடுகள் மரங்கள் இருந்தவேளை செய்யப்பட்டவை. ஆனால் அவை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட அவற்றை உருவாக்கும் மனநிலை இல்லாத அழிக்கும் மனநிலை உள்ளவர்கள் மிருகங்களிலும் கேவலமான மனதுடையவர்கள். தேற்றாத்தீவு எனது கிராமம்தான் ஆனால் அக்கறை இல்லாதவர்கள் உள்ள கிராமம் என்பதற்கு தக்க உதாரணம் நான் தரத்தயாராக உள்ளேன்.
அடேய் எலெக்சன் கேட்க்க, கலக்சன் எடுக்க, மண்ணை அகழ, குளத்தை நிரப்ப, விளையாட்டுப் போட்டி, வினோத நிகழ்வுகள், களியாட்டங்கள், லெட்ஷக்கணக்கில் அபிஷேகங்கள் இன்னும் என்னோத்துக்கெல்லாம் கோயிலைப் பயன்படுத்தும் நீங்கள், குளிர்ந்த நிழலும் கொடியசையும் காற்றும் மலிந்த நிலக்கீழ் நீரும் மறுக்காமல் தரும் மரங்களைப் பாதுகாக்க என்ன செய்தீர்கள்? விளையாட்டுக் கழகங்களும்இ கலைக் கழகங்களும் மலிந்ததுபோல் சூழலைப் பாதுகாக்க எண்ணம் எழவில்லை. அவையும் எமது குடும்பத்தில் ஒன்று.
அழுது அழது எழுதுகிறேன். அறம்பாடி எழுதுகிறேன் இந்த மரக்குழந்தைகளை மண்ணாக்கியவர்கள் கொடுமைப்பட்டு இறப்பார்கள். அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அதைவி; கொடுமைப்படுவார்கள், அதைப் பார்த்தும் பாராமல் இருந்தவர்கள் அதுக்கு மேல துன்பப்படுவர். ஆ ஊ என்றால் மாலையுடன் நிற்கும நீங்கள் அறம் காக்காகாமல் புறங்காட்டி ஓடும் கோழைத்தனத்தை என்னவெனச் சொல்ல?
பல மதுரை மரங்கள் அடியில் தீக்கொழுத்தி தீக்கொழுத்தி அடியோடு விழுந்து கிடப்பது தாங்க முடியவில்லை. அம்மா, அம்மப்பா, பாட்டன் அதற்கும் முன்னோர் அருமையாக நாம் சுவாசிக்க நல்ல மரம் நட்டார்கள், ஆனால் இன்று நாம் எமது குழந்தைகள் மூச்சுத்திணறி முழுவேதனைப்பட மரங்களின் இடியில் நெருப்பிட்டு ஒன்றொன்றாக வீழ்த்துகின்றனர் இவை எமது அடிவயிற்றில் வைக்கும் நெருப்பு மறக்காதீர்கள். நீங்கள் வேதங்கள் சொல்லும் தர்மத்தை அவமதித்தவர்கள்.
தம்பி மாரே தங்கை மாரே, உங்களுடன் வினயமாக ஒன்றைக் கேட்க்க விரும்புகின்றேன். இவற்றை மீளுருவாக்க பல மரங்களை நாம் நடவேண்டும். நான் தயாராக இருக்கின்றேன் உண்மையான நல்ல மனம் உடையவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நான் அவற்றுக்கு இடையே பல மரங்களை நட மரக்கன்றுகளை பார்த்து வைத்துள்ளேன். ஆனால் எனக்கு உங்கள் பூரண ஆதரவு தேவை! அவை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நீங்களும் அந்த இடங்களுக்கு சென்று பாருங்கள் அப்போது அந்த வலி விளங்கும்.
கவிஞர் வைரமுத்து கூறுவார். 'பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்! நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்! எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்! மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்! எரிந்தோம் எரிந்தோம் இடுகாட்டில் எரிந்தோம் எரியும் விறகுகள் மரத்தின் உபயம்! மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!''
தொட்டில் முதல் இடுகாடு வரை மரங்கள் மனித வாழ்வின் மேம்பாட்டுக்குப் பயன்படுகின்றன என்பதைத்தான் இக்கவிதைச் சுட்டிக் காட்டுகின்றது. மரங்கள், மனித குலத்தின் வரங்கள் என்பதே மகத்தான உண்மையாகும். ஓசோன் ஓட்டை ஆபத்திலிருந்து பூமிப்பந்து காப்பாற்றப்படவும், புவி வெப்பத்தைக் குறைக்கவும் மரங்களை நடுவதின் மூலம் சாத்தியம் ஆகின்றது. மரங்கள் தான் மழை பெய்வதற்கான நீர் ஆதாரங்கள். ஏரி, குளம், கண்மாய் முதலிய நீர் ஆதாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
0 comments:
Post a Comment