ADS 468x60

24 October 2018

கேவலமா அரசே ஓடுதாமாம்!

செல்ல அத்தான் சேதி தெரிஞ்ச அத்தான் ஒரு சாங்கமாத்தான் அரச பேசிராங்க இங்க சாமான் வில கூடி ஏசிராங்க சின்னப் பொண்ணு விசயம் தெரிஞ்ச பொண்ணு கேள்விப்பட்டன் ஒண்ணொண்ணா கூடுதாமாம்- அட கேவலமா அரசே ஓடுதாமாம்..

பிஞ்சு அத்தான் என்ற குஞ்சு அத்தான் 
கோதுமைக்கும் சீனிக்கும் கூடிப்போச்சாம்- இந்த 
கோதாரிய கொண்டுபோய் எங்க சொல்ல 

ஏய் வண்ணக் கிளி வடிவா செவந்த கிளி 
நம்மள சிலுவையில தூக்கி அறையுறாங்க- அட 
தேவைப்பட்டா தோன்றி மறையுறாங்க 

கேளு புள்ள கொஞ்சம் கேளு புள்ள 
துண்டு விழும் தொகையே கூடிப்போச்சாம்- அதுக்கு 
சூத்திரத்த அரசு நாடிப்போச்சாம்!!

என்ன மச்சான் எரிபொருள் வில செம்மையா போகுது அதுக்கு
மாட்டு வண்டி ஒண்டு வேண்ட வேணும்-மறுகா
மாற்று வழி கண்டு தாண்ட வேணும்

அதுவும் சரிதான் புள்ள
கேளு புள்ள இதை கேளு புள்ள
போடி மார நம்மடவன் அழிச்சிப் போட்டான்- இப்ப
மாடு வேண்ட யாரிடம் போக புள்ள

இனி ஒண்டும் சரிவராது இங்க 
கேளு அத்தான் என்ற செல்ல அத்தான்
வெளி நாட்டுக்கு போயி வேல பாரு-அங்க
வெள்ளக் காரன் காசெல்லாம் அனுப்பலாமே

அடி என்ன புள்ள நீ பேசிறது
படிக்காம அங்கபோய் என்ன பண்ண- அந்த
பாலை வன கொடுமை வேணாம் புள்ள

எல்லோரும் சொந்த தொழில் பண்ணுறாங்க
கேளு மச்சான் புதசா செய்யலாமே
ஓட்டோ வேண்டி ஓட்டினா என்ன மச்சான்-அதுதான்
ஒத்து வரும் ஒழுங்கா யோசி மச்சான்

அட முட்டாளே சின்ன நாட்டில ஒரு மில்லியன் 
ஆட்டே மலிஞ்சி போய் கிடக்கு
கறுத்த புள்ள மூள சிறுத்த புள்ள
நுண் கடனும் நமக்கு நாசம் புள்ள- அங்கால
லீசிங் கட்ட ஆட்டோ வேலை செய்யுமா

0 comments:

Post a Comment