ADS 468x60

04 October 2018

குறைந்து வரும் நாணய மதிப்பும் குழம்பிக்கிடக்கும் குடிமக்களும்- ஒரு சமகால ஆய்வு


Image result for money depreciation sri lankan peopleஇலங்கை நாணயமதிப்பு தேய்வு பற்றி அண்மையில் எழுந்துள்ள சந்தேகங்கள் பற்றி பல அரசியல் பொருளாதார நோக்கர்கள் பலரும் பல கருத்துக்களை ஆதரவாகவும் எதிராகவும் வைத்துவருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி பல சந்தர்பங்களில் குறைவடைந்து வந்துள்ளது. இது யூன் 11ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் 161.17 ஆக அதிகரித்து இன்று 170.56 ஆக வேகமாக அதன் பெறுமதி குறைவடைந்து வந்துள்ளதனை அவதானிக்கின்றோம். இவை பொதுமக்களிடையே மற்றும் பொருளாதார, அரசியல் ஆர்வலர்களிடையே ஏற்படுத்திய குழப்பங்கள் அவற்றுக்கான காரணங்கள் என்பன பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.



இவை ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படுவதுடன், சமுக வலைத்தளங்களிலும் தாறுமாறாக அரசை விமர்சிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இவை காரணமாக மக்களிடையே இந்நாட்டின் பொருளாதார நடவடிக்கை மீது வெறுப்புணர்வினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில் 1977ம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் திறந்துவிட்டதன் பின்னர், கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் போதே மிக குறைந்த அளவான ஆண்டிற்கு 2.8மூ தேய்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணத்தின் பெறுமதி தேய்வுக்கான காரணங்கள்

பொதுவான காரணங்களாக, அமெரிக்க பொருளாதார சுட்டெண்ணின் முன்னேற்றம் காரணமாக டொலரின் பெறுமதி வலுவடைந்துள்ளமை, அத்துடன் எதிர்கால வட்டி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு, இவற்றுக்கு அப்பால் அமெரிக்க மற்றும் சைனாவுக்கிடையிலான வர்த்தகப் பேர் காரணமான சர்வதேச முதலீட்டு நம்பிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளமை ஆகிய சர்வதேசப் பரப்பிலான காரணங்களைக் கூறலாம்.

இவற்றுக்கு அப்பால் பிணை முறி மோசடியும் ஒரு காரணம் என சிலர் வாதிடுகின்றனர். அதேபோல் தனியார், அரச மற்றும் அபிவிருத்தித் துறைகளில் பாண்டித்தியம் பெற்ற சிலர் முன்வைக்கும் காரணங்களாக,

1. அதிகம் மக்கள் பொதுக்கடன் சுமை அதிகரித்துள்ளமையே இந்த நாணயப் பெறுமதித் தேய்வுக்கு காரணம் எனச் சொல்லுகின்றனர். ஆனால் இவை மாறுபட்ட விளக்கமின்மையைக் காட்டுகின்றது. இந்த டொலரின் பெறுமதி அதிகரிப்பது எமது திருப்பச் செலுத்தும் கடனில் மாற்றம் கொண்டுவருவதில்லை. ஏனெனில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மூலம் தேவையான டொலரை வருவாயாகப் பெற்று அதனையே திருப்ப செலுத்தாலம். அதே போல் அதிகரிக்கும் பொருட்கள் சேவைகளின் ஏற்றுமதி மூலமாகவும் நாங்கள் எமக்கு தேவையான டொலரினை வருமானமாகப் பெற்று இவற்றில் இருந்து சுலபமாக மீளலாம். அதற்கு மேலாக வெளிநாட்டு நாணய மாற்று ஒதுக்கானது இருக்கின்ற பெறுமதியை மிஞ்சி வலூன் போன்று ஒன்றும் பெரிதடைவதில்லை.

2. இலங்கைக்கான சக்தி வள இறக்குமதிக்காக சர்வதேச மாற்றத்துக்கு அமைவாக விலைகளை மாற்றவேண்டியுள்ளமையும் இந்த ரூபாய்களின் மதிப்பிறக்கத்தினால் தான் ஆனது. இது மிகப்பெரிய எதிர்ப்பை விவசாயிகள் மற்றும் மீன்பிடியாளர்களிடம் இருந்து தோற்றுவித்துள்ளது. அவர்கள் பாரிய இழப்பினை காலநிலை மாற்றம், குறைந்த விளைச்சல், போன்றவற்றுடன் இந்த விலை அதிகரிப்பு இவ்விரண்டு துறையினையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

3. மற்றுமொரு விடயம் என்னவெனில், நாணயப் பெறுமதி இறக்கம் தான் பொருளாதாரத்தில் வீழ்ச்சியினை ஏற்படுத்துவதில்லை, மாறாக குறைந்த உற்பத்தித் திறன் காரணமாக இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைகின்ற வேளை அது நிகழ்கின்றது. உதாரணமாக வடமேல், வடமத்தி மற்றும் கிழக்கு வடக்கு ஆகிய இடங்களில் நெல் உற்பத்தி அரைவாசியாக இருந்தது, இது இம்மக்களை இந்தக்காலத்தில் உணவுப் பற்றாக்குறைக்குள் தள்ளியது, இதனால் வரிச்சலுகையுடன் இவர்களுக்கு உணவளிக்க 500,000 டொன் அரிசை அவசரமாக இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

4. ரூபாவின் பெறுமதியைக் கூட்டுவது ஒரு பொருளாதார வளர்ச்சிக்கான சுட்டி கிடையாது. இது குறைந்த விலையில் பல பொருட்களை இறக்குமதி செய்ய இயலுமாக இருக்கும். இது நாட்டை இன்னும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்காக ஊக்குவிக்காது மாறாக இறக்குமதியில் தங்கிவாழும் நிலையினைத் தோற்றுவிக்கும். இது நீண்டகாலத்தில் எதிர்மறையான விளைவினை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். இந்த நிலையில் உற்பத்தி செய்யும் பொருட்களை கூடிய விலைகொடுத்து இந்த போட்டி நிறைந்த உலகில் வாங்குவதற்கு தயக்கம் காண்பிப்பர் ஏனெனில் உலகில் டொலரினை குறைந்த விலைக்கு வாங்கக்கூடியதாக உள்ளது.

0 comments:

Post a Comment