
இந்த நாடுகளிடையே இலங்கை 1961 இல் சைனாவினை விட அதிக தேயிலையினை உலகில் ஏற்றுமதி செய்தமை வரலாறு. ஆனால் இப்போது அது உலகின் நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் இத்துறை பல சவால்களையும் எதிர்நோக்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. அந்த வகையில் பாரிய சவாலாக இத்துறைக்கான நிலம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருகின்றமை, போட்டித்தன்மை அதிகரிப்பு, தரமான உற்பத்தித் அளவு ஆகியனவற்றுடன் தொடர்ச்சியாக அதிகரிக்கும் உற்பத்திச் செலவு ஆகியனவற்றினை குறிப்பிடலாம்.
இவற்றுக்கு அப்பால் மனித முதலீட்டின் தேவை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த பாரிய சவால்களை முறியடிக்க மனித முதலீட்டின் அதிகரிப்பு, உட்கட்டுமானத்தினை விருத்தி செய்தல், பேரண்டப் பொருளாதார கொள்கைகளைப் பேணல், அதேபோன்று பொருத்தமான ஏற்றுமதிக் கொள்கைகளுடன் ஒத்துப்போதல், போட்டித்தன்மையுடன் ஈடுபடல், உலக பெறுதி சேர் தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியனவற்றினைக் குறிப்பிடலாம்.
இவைகளையும் தாண்டி இந்த தொழில்துறையின் முதுகெலும்பாக, மூலவேராக இருக்கின்ற தொழிலாலர்களின் வேதனம், அவர்களது ஏனைய உதவிகள் நிர்ணயிக்கப்படாத பட்ஷத்தில் எதுவும் முன்னேற்றமடையப் போவதில்லை. அத்துடன் இன்றய இளம் சமுதாயம் இத்துறையில் இருந்து இந்த கஷ்ட்டங்களை அனுபவிக்க விரும்பாமல் அதில் இருந்து விலகிச் செல்லுகின்றமை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இம்மக்கள் பல துன்பங்கள் மத்தியில் குறைந்த வேதனத்தில் வேலை செய்து வருகின்றார்கள்.
அவர்கள் கேட்கும் வேதன அதிகரிப்பு நியாயமானதே. அதனால்தான் நாட்டின் நாலாபாகத்திலும் உள்ள மக்கள் இவர்களது கோரிக்கைக்கு குரல்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும்படியான கோரிக்கையை பல காலமாக இந்த மக்கள் விடுத்து வருகின்றனர். கம்பனியொன்று தொடர் நட்டமடைந்தால் அக்கம்பனி நாள-டைவில் மூடப்பட்டுவிடும். ஆனால் அவ்வாறு நடைப்பெற்றதாகத் தரியவில்லை. முதலாளிமார் தமது கம்பனிகள் நஸ்ட்டத்தில் இயங்குவதாக காலாகாலமாகச் சொல்லி வருகின்ற நிலையில்.
சூரியன் உதிக்குமுன்னே மூங்கில் கூடையதை முதுகில் சுமந்துகொண்டு முந்தானை மார்பொடு இறுக்கி அணைத்துக்கொண்டு உறையும் குளிரில் உணவைத்தேடி செல்லும் உறுதிகொண்ட உழைப்பாளிகளை உதாசீனம் செய்வதாகவே இவர்களுக்கு வழங்கும் ஊதியம் இருக்கின்றது. இந்த மக்களின் நிலை உணர்ந்து அவர்களுக்கான போராட்டத்தினை முன்னெடுக்கும் எமது நாட்டின் நாலாபுறத்திலும் உள்ளவர்களைப் பாராட்டுகின்றேன்.
இவற்றை உணர்ந்து பல சத்தியாக்கிரக போராட்டங்கள் உண்மையில் சமூக, அரசியல், பொருளாதார உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளை ஒருமித்த நாட்டிற்குள்ளே வாழுகின்ற எமது மக்கள் மீது காலாகாலமாக திணிக்கப்படுகின்றபோது வெடிக்கின்றது. அவை ஒடுக்கப்படுகின்றபோது அவை இளைஞர்கள் போராட்டமாக உருவெடுத்து பாரிய சவால்களையும் இழப்புக்களையும் ஏற்படுத்தி இருந்தமை வரலாறு. அந்த வரலாறு இன்னும் ஒரு முறை வரக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை.
குறைந்தபட்ச சலுகைகளைக்கூட கூடியபட்ச உழைப்பின் மூலம் இந்த நாட்டை தூக்கிப்பிடிக்கும் மக்களுக்கு மறுக்கப்படுவதனை எதிர்த்து நடாத்தப்படுவதனை நான் மார்தட்டி பாராட்டுவதோடு, இந்த பிரச்சினையை வைத்தே பிழைப்பு நடாத்தும் முதலைகளின் தோல் உரிக்கப்பட்டு இந்த மக்களுக்கு பொருத்தமான வேதனம் பெற்றுக்கொடுக்கப்படனும். எவன் ஒருவன் மன பலத்தை கொண்டிருக்கின்றானோ எவன் ஒருவன் தனது இலட்சியத்திற்கு இறுதி வரை போராடுகிறானோ அவன் வெற்றி பெறுவான், அதை இந்த மக்கள் எவளவு காலம் செய்வார்கள்? அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
மலைபோல் உயரும் விலை வாசி, நாட்டின் கடன் தொல்லை, பாரிய அனர்த்தங்கள், அரசியல் ஸ்திரமின்மை எல்லாமே, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் பாதிக்கப்பட்ட மக்களையே சோதித்துப் பார்க்கின்றது.
0 comments:
Post a Comment