
உண்மையில் நாட்டின் மக்கள், தங்கள் தங்கள் வருமான உறுதிப்பாட்டினை கொண்டுள்ள தருணத்தினில், ஓர் அனர்த்தம் ஏற்படுமானால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பலத்தினைக் அவர்கள் கொண்டிருப்பதுடன் ஏனையவர்க்கும் அவற்றைக் கொண்டு நேரத்துக்கு உதவும் ஒரு திறனைக் கொண்டிருப்பர். இந்த திறன் நாட்டின் அபிவிருத்திக்கான உந்து சக்தியாகவும் அதேபோல் வறுமைக்கு எதிராக போராடும் திறனாகவும் பார்க்கப்படுகின்றது.
இன்றய நிலையில் ஏனைய நாடுகள்கூட இலங்கையின் வருமான மட்டம் மற்றும் அதன் அபிவிருத்திப் போக்கு கண்டு பொறாமை கொள்ளத்துவங்கியுள்ளது. இன்று இலங்கை அதன் வறுமை மட்டத்தினை ஒரு விகிதத்தினால் குறைத்து, அதன் மொத்த வறுமையின் அளவு 4.1 விகிதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மிகமோசமான வறுமை பற்றிய கவலை இலங்கையைப்பொறுத்த மட்டில் இல்லை என்று கூறலாம் ஆனால் அதைவிட எமது நாடு பல இடர்களில் அகப்படக்கூடிய நலிவுறுநிலையில் உள்ளமை சுட்டிக்காட்டக்கூடியதே. இந்த நலிவுறுநிலையின் தன்மை பொறுத்து எமது முன்னேற்றம் வெகுவாகக் கைவிடப்படும் நிலை இருந்து வருகின்றது.
இலங்கை வருடாவருடம் பல அனர்த்தங்களைக் கடந்து பயணம் செய்யவேண்டியுள்ளது. குறிப்பாக அண்மைய ஆண்டான 2016 மற்றும் 2017 காலப்பகுதிகளில் மிகக்கொடூரமான வெள்ளம் மற்றும் வரட்சி ஆகியவற்றை சந்தித்து வந்துள்ளது. அண்மைய கொழும்பில் வெளியான உலக வங்கியின் அறிக்கைப்படி, காலநிலை மாற்றத்தின் விளைவான அதிகரித்த வெப்பம், பருவகால மாற்றம் காரணமான அதிக மழை இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விகிதமான செலவினை கொண்டுவரும் என கூறப்பட்டுள்ளதுடன் 2050 காலப்பகுதியளவில் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு மோசமான ஆழுத்தத்தினை உண்டு பண்ணும் சாத்தியம் உள்ளதெனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவை அதிகமாக அனர்தங்களில் நேராகவும் மறைமுகமாகவும் பாதிப்புக்குள்ளாகும் மக்களையே இலகுவில் நிலைகுலையச் செய்யும் என்பது உண்மை.
இந்த அறிக்கையின்படி, இந்த இடர்கள் காரணமாக மக்களின் வருமானம் 20 விகிதத்தினால் குறையுமானால், 5.7 விகிதத்தினர் எமது நாட்டில் வறுமையில் சிக்குண்டுபோகும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே வறுமையினை இந்த இடத்தில் நிர்ணயிக்கும் காரணங்களாக, மக்களிடையே காணப்படும் உயிர், சொத்து இழப்புக்கள், தொழில் பாதிப்பு போன்றவை பிரதானமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ இலங்கையில் இடர்தணிப்பதற்கான பல விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இடர்களில் சிக்கிய இந்த மக்கள் அவற்றில் இருந்து மீழும்வரை, அவர்களுக்கான குறுகிய நீண்ட கால உதவிகள், அனர்த்த எதிர்வுகூறல்கள் ஆகியன அரச மற்றும் அபிவிருத்தியாளர்களின் கூட்டு முயற்சியுடனான வேலைத்திட்டங்கள் ஊடாக, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளங்கண்டு உதவப்பட்டு வருகின்ற போக்கு இப்போ அதிகரித்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.
இந்த இடத்தில்தான் இவற்றுக்கு 'இயைபாக்கமடைந்த சமுகப் பாதுகாப்பு' மூலமாக அதன் பங்களிப்பினைச் செய்யமுனையலாம். இந்த இயைபாக்கமடைந்த சமுகப் பாதுகாப்பானது வறியவர்களை மற்றும் நலிவுற்றவர்களைப் இடர்களில் இருந்து பாதுகாப்பதற்கான பல விடயங்களைக் கொண்டுள்ளது. இவை ஒரு சமுகத்தினை தனது சொந்தக்காலில் நிற்கும் தத்துணிவினை ஊட்டுகின்றது.
இயைபாக்கமடைந்த சமுகப் பாதுகாப்பானது ஒருவகையில் பணம் எனக்கொள்ளலாம் இது அம்மக்களுக்கான சமுக உதவியாக, சேவையாக கொள்ளப்படுகின்றது. உதாரணமாக பணப்பரிமாற்றம், சமுகக் காப்புறுதி அதற்கு உதாரணம் ஓய்வூதியம் மற்றும் வலது குறைந்தவர்க்கான நன்மைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த முறைமை ஒழுங்கான முறையில் நிறுவப்படுமானால் அனர்த்தங்களில் இருந்தான எதிர்பாராத பல இழப்புகளை நாங்கள் தவிர்த்துக்கொள்ளலாம்.
இந்த இடத்தில் அடுத்ததாக, அனர்த்தங்களின் போதான முறையான தகவல் பரிவர்தனம் உலகலாவிய ரீதியில் மிகப்பெரிய பங்களிப்பினை செய்து வருகின்றது. இந்த தகவலானது, அரசாங்கத்தினை முன்னுரிமை அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் தேவையை நிறைவேற்ற வழிப்படுத்துவதுடன் அவற்றை பொறுப்புடன் எடுத்துச்செல்ல ஒன்றுபடுத்துகின்றது. ஆனால் இது அரச மற்றும் அபிவிருத்தியாளர்களின் ஒருங்கிணைந்த செயற்திட்டத்தின் ஒரு நீண்டகால இலக்காகும்.
தற்போது பல வேலைத்திட்டங்கள் தங்கது இயலுமைக்கும், சுற்று நிருபத்துக்கும் அமைவாக கிட்டத்தட்ட 11 அமைச்சுக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும், பொருத்தமான ஒருங்கிணைப்பு கிடையாமை அவர்களது வினைத்திறனான செயற்பாட்டை பாதிக்கும். ஆகவே இந்த முறைமைகளை சரியான முறையில் கடைப்பிடிக்க தலைப்படுவோமானால் எமது மக்களின் நலிவுறும் தன்மையை கணிசமாக குறைப்பதால் ஒட்டுமொத்த வறியவர்களின் பிரச்சினைகளை முறியடித்து ஒரு நிலையான அரசியல் ஸ்த்திரத்தை முன்னோக்கிய பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்துவதன் மூலமாக நிறுவலாம் என்பதில்; எது வித ஐயமும் இல்லை.
0 comments:
Post a Comment