ADS 468x60

05 October 2018

மனதுள்ள ஆசான் வழிகாட்டும் ஈசன்


என்னை ஏற்றிய எல்லா குருமாருக்கும் ஆசிாியா் தின வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------
நல்ல வழியை காட்டி வளர்க்கும் தெய்வங்களே! -இந்த
நாட்டில் கல்விச் செல்வம் பெருக நாளும் உழைக்கும் தேவர்களே!
கடல் போன்ற அறிவை- சிறு
குறல் போல புகட்டி
மலை போன்ற திறனை - குறுஞ்
சிலை போல ஊட்டி
ஒளியூட்டும் குருமாரை தெழிவாகப் பணிந்தால்
உருவாகும் நல்ல எதிர்காலம் நமக்கு!

கவி ஆழும் புலவன்!- முழு
புவி ஆழும் அரசன்!
எல்லோரும் உயர-நமை
எடுத்தேத்தும் ஏணி
மழை போல கல்வி விலையின்றி பொழியும்
மனதுள்ள ஆசான் வழிகாட்டும் ஈசன்!
பால் என்று வேறாய்- கடும்
கள் என்று வேறாய்
இனங் காட்டும் குருவே!- நாம்
தினம் போற்றும் கடவுள்!
அஞ்ஞான இருளை அடியோடு போக்கும்
ஆசிரியம் தானே அறஉலகைக் காக்கும்
நல்ல வழியை காட்டி வளர்க்கும் தெய்வங்களே! -இந்த
நாட்டில் கல்விச் செல்வம் பெருக நாளும் உழைக்கும் தேவர்களளே!

0 comments:

Post a Comment