ADS 468x60

05 January 2019

சந்நிதியான் வாசலிலே!


Image may contain: one or more people, crowd and outdoor
ஓன்றாகக் கூடனும்  ஓன்றாகப் பாடனும்
சந்நிதியான் வாசலிலே!
கொம்புச் சந்நிதியான்
கொம்புச் சந்நிதியான் வாசலிலே

மன்றாடும் உன் நெஞ்சில் நின்றாடும் என் அப்பன்
கொண்டாட வாருங்களேன்- வந்து
கோலாட்டம் போடுங்களேன்.


அண்ணாந்து பாக்கனும் அன்பாகக் கேட்கணும்
சந்நிதியான் கோபுரத்தில்
கொம்புச் சந்நிதியான்
கொம்புச் சந்நிதியான் கோபுரத்தில்

மேளம் ஒலித்து வர தாளம் குதித்து எழ
வேள முகன் வருவான்- வந்து
வேதனை போக்கிடுவான்

கண்ணாரப் பாருங்கோ கண்ணாரப் பாருங்கோ
மண்ணாகும் பாவங்களே!
ஐயா மண்ணாகும்,
ஐயா மண்ணாகும் பாவங்களே

பூக்கள் மணக்குது பாக்கள் ஒலிக்கிது
உள்வீதி சுற்றி வர- ஐயன்
உள்வீதி சுற்றி வர

கச்சியே கம்பனே கருயபனைக் கொம்பனே
காத்தாள வாருமையா
எம்மை காத்தாள
எம்மை காத்தாள வாருமையா

உதயத்து ஒளிபோல உள்ளத்தில் மகிழ்வாக
திருவிழா வந்ததையா- அப்பன்
பெருவிழா வந்ததையா

0 comments:

Post a Comment