ADS 468x60

06 January 2019

கொம்புச் சந்தி ஆண்டவனே

கொம்புச் சந்தி ஆண்டவனே- 2
கொம்புச் சந்தி ஆண்டவனே நமோஸ்த்து
கொம்புச் சந்தி ஆண்டவனே-2
பிழைகள் பொறுத்தருள முதலில் நின்றுதிக்கும்
முழுமுதலான எங்கள் கணபதியே- 2
கொம்புச் சந்தி ஆண்டவனே- நமோஸ்த்து
கொம்புச் சந்தி ஆண்டவனே

நிலத்திலும் நீரிலும் போய் தொழில்பல செய்கின்றோம்
முழுவதும் நீதானே முயற்சியின் வடிவமாய்- 2
ஆண்டவா என வணங்கி அடிதனில் சரண் புகுந்தால்
ஆனவை அத்தனையும் அளித்திடும் பெருமான் நீ -2

கொம்புச் சந்தி ஆண்டவனே- நமோஸ்த்து
கொம்புச் சந்தி ஆண்டவனே
கொம்புச் சந்தி ஆண்டவனே

கொம்பு முறி ஆடி கோயிலும் கொண்டு
கோபுரமாய் நின்று கோடி வரம் அருளும் -2
தேனூர்ப் பதியில் ஆழும் தேவர்கும் தெய்வம் நீயே
தேரியாமல் செய்யும் குற்றம் தீமைகள் நீக்கும் எங்கள்- 2

கொம்புச் சந்தி ஆண்டவனே
பிழைகள் பொறுத்தருள முதலில் நின்றுதிக்கும்
முழுமுதலான எங்கள் கணபதியே
கொம்புச் சந்தி ஆண்டவனே நமோஸ்த்து
கொம்புச் சந்தி ஆண்டவனே
கொம்புச் சந்தி ஆண்டவனே

0 comments:

Post a Comment