ADS 468x60

11 May 2019

மருந்தும் விருந்தும் மட்டக்களப்பிலல்லோ இருக்குதப்பா!

வசந்த காலம் வந்தால் ஐம்புலனுக்கும் விருந்துதான் கேளுங்கோ!. பூத்துக்குலுங்கும் மரங்கள் கண்களுக்கு விருந்து, அதில் புதிதாய் வரும் மணம் மூக்கினிற்கு விருந்து, காத்துக்கிடக்கும் தேனீக்கள் கள்ளையுண்ணும் சப்தம் காதினிற்கு விருந்து, கனிந்து கிடக்கும் பழங்கள் எங்கள் நாவினிற்கு விருந்து, காவடியும் காவியமும் கற்பூரச்சட்டிகளும், சேவடியைப் பணியும் திருப்தியும் மெய்யினிற்கு விருந்து அதுவே சொர்க்கத்தின் மருந்து.

மருந்தும் விருந்தும் மட்டக்களப்பிலல்லோ இருக்குதப்பா! இருந்தாப்புல எங்காவது போவதுதான் எனக்கு வழக்கம். வைக் ஏறி மாநகரம் மட்டும் சென்றேன், வரும் வழியில் தெருக்களின் ஓரம் பழக்கடைகள் பலப்பல கண்டேன். 

இது வெள்ளரி முந்திரிகைச் சீசன் பாருங்கோ! பைக்கட்டில் அடைத்தவையுமில்லை, பாதுகாக்க பலகெமிக்கல் அடித்தவையும் இல்லை. பறித்து உடன் பருக இளநீர் நொங்கு, படுத்தும் வெக்கைக்கு குளிராய் வெள்ளரிப்பழம், கொடுப்புக்குள் வைத்துப் புளிய முந்திரிகை கொடுத்து வைத்தவங்கப்பா நாங்க! எடுப்புத்தான் எங்களுக்கு பாருங்க!

கிரான் குளம், புதுக்குடியிருப்பு புகுதிகளில்தான் இந்த வெள்ளரி (CUCUMBER) அதிகம் செய்கை பண்ணப்படுகின்றது. இவர்கள் இவற்றை அழகாய் தென்னை ஓலைகளில் பொதி செய்து விற்ப்பனை செய்து வருகின்றனர். 

வெள்ளரிக்குள் இத்தனை விடயம் இருக்கிறதா என ஒரு தளத்துக்கு சென்று தரிசித்தபோது அறிந்துகொண்டேன் பாருங்கோ!

வெள்ளரி படரும் கொடி வகையைச் செர்ந்த ஒரு காய் கறி வகை நல்ல மூலிகையும் கூட. இதன் முக்கிய மூன்று வகைகள்  SLICING, PICKLING & BURPLESS ஆகும்.காய் கறி போல்  சாப்பிடப் பயன் படுத்துவார்கள். பிஞ்சாக இருக்கும் போது அப்படியே யாவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். 

நட்ட 30 வது நாளில் பூக்க ஆரப்பிக்கும்.50 நாளிலிருந்து பறிக்க ஆரம்பிக்கலாம். வெள்ளரியின் தாயகம் இந்தியா தான்.3000 வருடங்களுக்கு முற்பட்டது.  இந்த மாதத்தில் வெள்ளரி அதிகம் விளைவிக்கப்படுகிறது. மார்க்கட்டில் எல்லா இடங்களிலும் பழமுதிர் நிலையங்களிலும் கிடைக்கின்றது..

மருத்துவப் பயன்கள் –; வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும். செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது  விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. 

இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு. வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. 

மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.கபம்இ இருமல் நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல. 100 கிராம் வெள்ளரியில் 18 கிராம் கலோரிதான் இருக்கிறது. குறைந்த கலோரி உள்ள காய்கறியாகும். இது சிறுநீர் பிரிவைத் தூண்டக் கூடியது. இரைப் பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.
##என்ன வெள்ளரிப்பழம் சாப்பிட வாறீங்களோ!

0 comments:

Post a Comment