ADS 468x60

04 May 2019

மேதினியை குளிர் ஆக்கிடுவாய்

வெந்து எரியுது எங்கள் குலம்- கண்ணில்
வேதனை கூடுது ஏது பலம்
முந்தி அறம் காத்த மூத்தவளே- வந்து
மேதினியில் சுகம் மேவுமம்மா!

செட்டி நகரில் உறைபவளே- எங்கள்
தேசத்தின் நாயகி கண்ணகையே
மட்டு நகரில் அறம் பெருக- என்றும்
மக்களுடன் வந்த மர்ந்தவளே!

கோபம் தணிந்திட வேகமுடன்- ஒன்றாய்
கூடும் மழலைக் குரவையிலே
தேகம் குளிர்ந்திட மேகமழைதனில்
செட்டியூர் தனினில் அமர்ந்தவளே!

ஏழு யிடிஒலி  வங்கத்திலே -ஒன்றாய்
வீழுமோசை காதில் கேட்கையிலே
ஆழும் மாயிரங்கண் மாதவளாய்- வந்து
செட்டியூர் தனினில் அமர்ந்தவளே!

ஆறுவூர் பூசையை ஓசையுடன்- நின்று
ஆதரவாய் செய்து திரந்திடவே
மாறுதல் தந்தெமைக் காத்தருள –நாளும்
ஆறுதல் ஈந்திடும் பத்தினியே!

மா பலா வாழைப் பழங்களுடன்- குளிர்
மாதுளை தாமரை வர்க்கங்களும்
மேவியே யாகத்தில் வைத்திடவே- வந்து
மேதினியை குளிர் ஆக்கிடுவாய்!

கோவலனைக் கொண்ட கோமகனை- மன்றில்
கேவலமாய் பொய் யுரைத்தவரை
காவல் தவறிய நாடதனை- கண்ணால்
பத்தி எரித்திட்ட பத்தினியே!

கற்புடையோர்க் கொரு கண்ணகையாய்- நேரில்
காண்போர் மனதினில் புன்னகையாய்
மட்டுநகர் மக்கள் போற்றித்தொழும்- எங்கள்
மாதா வாயிரங்கண் ஆனவளே!

0 comments:

Post a Comment