நம் எல்லாவித முன்னேற்றமும் நாம் பயமின்றி எடுத்துவைக்கும் முதல் படியினிலேயே தங்கி இருக்கின்றது. பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும் இல்லையா.
நாம் ஒரு தொழிலை தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணம், வெற்றி பெறுவோமா, ஒரு வேலை தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம், தொழில் மீது நமக்கு இருக்கும் சந்தேகம், சார்ந்து உள்ளவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணம், தொழிலின் மீது நம்பிக்கை அற்ற நிலை இந்த மனநிலையுடன் இருக்கும் போது நிச்சயம் தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படும். அது நம்மத்தியில் பலரிடம் இருக்கின்றது.