ADS 468x60

27 November 2021

நாம் சுயமாகத் தொழில் தொடங்க ஏன் பயப்படுகின்றோம்.

நம் எல்லாவித முன்னேற்றமும் நாம் பயமின்றி எடுத்துவைக்கும் முதல் படியினிலேயே தங்கி இருக்கின்றது. பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும் இல்லையா.

நாம் ஒரு தொழிலை தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணம், வெற்றி பெறுவோமா, ஒரு வேலை தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம், தொழில் மீது நமக்கு இருக்கும் சந்தேகம், சார்ந்து உள்ளவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணம், தொழிலின் மீது நம்பிக்கை அற்ற நிலை இந்த மனநிலையுடன் இருக்கும் போது நிச்சயம் தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படும். அது நம்மத்தியில் பலரிடம் இருக்கின்றது.

ஆகவே நீங்கள் தொழில் தொடங்க எடுத்து வைக்கும் முதல் அடிதான், பயத்தை கடப்பதற்கான (overcome) முதல் படியாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆரம்பத்தில், நீங்கள் தொழில் தொடங்குவதால் எதையெல்லாம் இழக்க வேண்டிவரும் என்பதையும் (What do You have to lose, when You start business) தொழில் தொடங்குவதால் என்னவெல்லாம் கிடைக்கும் (what gaining do You get)  என்பதையும் யோசித்து பட்டியலிடுவது முக்கியமாகும்.

நாம் எப்பொழுதும் உறுதியாக, தெளிவாக, நம்பிக்கையுடன் தொழில் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கும்போது பயம் ஏற்படுவதில்லை மாறாக அதிக தைரியம் இருக்கும், ஒரு மேம்போக்கான, தெளிவில்லாமல் தொழில் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கும்போது தான் பயம் ஏற்படுகிறது.

ஆகவே நாம் தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் தொழிலில் வருமானம் (income) எங்கிருந்து வரபோகிறது, அதை எப்படி ஈட்டப் போகிறோம் என்று தெரியாமல் இருக்கும்போதும், வருமானம் ஈட்டுதல் பற்றி தெளிவில்லாமல் இருக்கும் போதும் பயம் ஏற்படும்.

இந்த நிலையில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்து எப்படி சேவை  வழங்குவது என்று தெரிந்த அளவிற்கு, எப்படி வருமானம் ஈட்டப்போகிறோம் என்று ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது.

எனவேதான் தொழிலில் வருமானம் ஈட்டும் வழி தெரிந்தால் நிச்சயம் பயம் வருவதற்கு வாய்ப்பு குறைவு. தொழில் தொடங்குவதற்கு முன் நீண்ட காலத்திற்கு வருமானம் ஈட்டகூடிய வழிகளை (inஉழஅந பநநெசயவழைn யஉவiஎவைநைள) கண்டுபிடிக்க வேண்டும். வருமானம் கிடைக்கும் வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கை பிறக்கும்.

 

0 comments:

Post a Comment