ADS 468x60

23 November 2021

கொவிட்டின் பின்னரான பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறை

கொவிட்டுக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படுபவைகளும் உள்ளவை மிக அதிகமானவைகளாகும். 

இலங்கையில் இரண்டு வருடங்களில் கொவிட்-19 தொற்றுநோய் பரவி வரும் நிலையில், அதனால் இன்று பெரும்பாலான மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர், ஆனால் இந்த தொற்றாபத்து எளிதில் நலிவுறும் மக்கள் பிரிவினருக்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாகப் சொல்வதானால் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மிக முக்கியமான ஒன்றாகும். 

அதனை ஒரு 'நிழல் தொற்றுநோய்' என்று விவரிக்கின்றார்கள். ஒரு இணையத்தள அறிக்கையின்படி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவுவதற்கு பாரம்பரியமான 24 மணி நேர ஹெல்ப்லைன்களின் சேவை தவிர மிகக்குறைவான நடவடிக்கைகளே எடுத்து இந்த நெருக்கடியைச் சமாளித்து வருகின்றமையினை சுட்டிக்காட்டுகின்றது. இந்த நெருக்கடியானது சமீப காலமாக கவலைக்குரிய ஒரு முக்கிய தலைப்பாக இருந்தாலும், அதைச் சமாளிப்பதற்கும் பெண்களுக்கு உதவுவதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் இன்னும் பாரிய இடைவெளி இருப்பதாகத் தெரிகிறது. 

இலங்கையில் கொவிட்டுக்கு முனனர், 5 பெண்களில் ஒருவர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைக்கு அவர்களின் நெருங்கியவர்களாளே உள்ளாகிவருகின்றனர். அது இன்னும் இந்த அடைபட்ட தொற்றுச் சூழலில் பன்மடங்கு அதிகரித்து வருகின்றது என யுஎன் வுமன் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

கொழும்பு டெலிகிராப் இணையதள அறிக்கையில், கொவிட்-19 ஒரு தொற்றுநோயை மட்டும் கட்டவிழ்த்துவிடவில்லை அது பல வடிவங்களில் பாதிப்பினை எம்மத்தியில் உண்டுபண்ணியுள்ளது எனக் கூறுகிறது. இவற்றில், முதலாவது கொவிட் தொற்று நோய்,  இரண்டாவது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பெரியளவான வன்முறை, அதுபோல் இந்தக்காலத்தில் பலர் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளமை என பலவிடயங்களைச் சுட்டிக்காட்டலாம். 

2019 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பின்படி, 51.6 வீதமான இலங்கைப் பெண்களில், குறைந்தது 20.4 வீதமானோர் குடும்ப வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லொக்டவுன், பெண்கள் வன்முறையாளர்களுடன்; வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது, வேலை இழப்பால் ஏற்படும் மன அழுத்தம், மதுவுக்கு அடிமையாதல் மற்றும் பண வருமானச் சிக்கல்களால் மன அழுத்தம். இந்த நிலையில் இவ்வாறான கண்களுக்கு தெரியாத பிரச்சினைகளில் இருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்டெடுக்கும் செயற்பாடுகளை கணக்கெடுக்காமல் வேறு நிவாரண விடயங்களில் அமைப்புக்களின் நாட்டம் உள்ளதனால் இந்த கடுமையான நிலமையினை எதிர்கொண்டு அவர்கள் எங்கும் செல்ல முடியாத ஒரு நிலையில்; அது; தீவிரமடைந்துள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பாலின அடிப்படையிலான வன்முறையை உள்ளடக்கியது. இத்தகைய வன்முறைகளில் மிகவும் பொதுவான வகை குடும்ப வன்முறை. இத்தகைய வன்முறைக்கான அடிப்படைக் காரணங்கள், உறவுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை, பெண்களுக்கு குறைந்த சுதந்திரத்தை வழங்கும் ஆணாதிக்கத்தின் மீதான கடுமையான சமூக விதிமுறைகள், அதிக அளவிலான வறுமை, அடிமையாதல் போன்ற தனிப்பட்ட காரணிகள் போன்ற பல்வேறு காரணிகளால் இவை உருவாகின்றன. இந்தப் பின்னணியில் பல குழந்தைகள் இவர்களின் வண்மத்தில் பாதிக்கப்பட்டு மனநலம் குன்றி வருவதும் அவர்களின் எதிhடகாலத்தினை இல்லாமல் செய்துவிடுகின்றது. 

நவம்பர் 25 அன்று, ஐ.நா பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை நினைவு படுத்துகின்றது. இந்த நிழல் தொற்று நோய் ஊடாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளும், குறிப்பாக குடும்ப வன்முறைகளும் தீவிரமடைந்துள்ளதை தரவு சேமிப்பவர்களிடமிருந்து வரும் தரவுகளும் அறிக்கைகளும் காட்டுகின்றன. இது கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் வளர்ந்து வரும் நிழல் தொற்றுநோய், இதைத் தடுக்க எங்களுக்கு நாடளாவிய ஒருமித்த கூட்டு முயற்சி தேவை. கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டவர்கள் கூட வழங்கப்படும் சுகாதாரச் சேவைகளைத் தொடர்ந்து சிரமப்படுத்துவதால், இவர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் வழங்குவதனை ஊக்கப்படுத்த பல துரித செயற்திட்டங்களைக் கொண்டுவரவேண்டும். 

ஐநாவின் கூற்றுப்படி, அது பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பொதுச்செயலாளரின் பிரச்சாரம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க மற்றும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட பல ஆண்டு செயற்திட்ட முயற்சி, அதற்கான நிதி இடைவெளிகளைக் குறைக்க உலகளாவிய நடவடிக்கைக்கான அழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.  

பெண்களுக்கு எதிரான வன்முறையை நாம் ஏன் ஒழிக்க வேண்டும்? பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை இன்று எமது நாட்டில் மாத்திரமல்ல உலகில் மிகவும் பரவலான, தொடர்ச்சியான மற்றும் பேரிழப்புக்ககளை எமது சமுகத்துக்குத் தரும் மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும், மேலும் இவற்றால் பாதிக்கப்படுபவர்கள் நியாயமான தண்டனையின்மை, அச்சம், மௌனம், களங்கம் மற்றும் அவமானம் ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலும் அவர்களால் எங்கும் இவைபற்றி முறையிடப்படுவதில்லை. இவ்வாறான ஒரு நிலமையே அவர்களிடம் உடல், பாலியல் மற்றும் உளவியல் வடிவங்களில் பிரச்சினைகளாக வெளிப்படுத்துகிறது.

இவர்கள் எதிர்நோக்கும் நெருங்கிய உறவுக்காரர்களின்; வன்முறைகளாக (அடித்தல், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், திருமண கற்பழிப்பு, பெண் கொலை), பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களாக (கற்பழிப்பு, கட்டாய பாலியல் செயல்கள், தேவையற்ற பாலியல் சீணடல்கள்;, குழந்தை பாலியல் துஸ்பிரயோகம், கட்டாயத் திருமணம், தெருவோர துன்புறுத்தல், பின்தொடர்தல், இணையத் துன்புறுத்தல்), மனித கடத்தல் (அடிமைத்தனம், பாலியல் சுரண்டல்), பெண் பிறப்புறுப்பு சிதைவு மற்றும் குழந்தை திருமணம் ஆகியவை போல் பல இன்னல்கள் பெண்களும் சிறுமியர்களும் தமது விருப்புக்கு மாறாக எதிர்கொண்டுவரும் சொல்லொணாத்துயரங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதிலும் பொது முடக்கத்தில் பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சுழலை உண்டாக்கியுள்ளது. அலுவலகப்பணி மற்றும் வீட்டுப் பணிகள் என இரண்டும் சேர்ந்து வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் தங்களின் குழந்தைகள் கல்வி கற்க ஆன்லைன் வகுப்புகளையும் கண்காணிக்க வேண்டிய உள்ளது. வீட்டிலிருக்கும் ஆண்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே இவ்வாறான நினைவுகூரல்கள் நமது சமுகத்தினை மீட்டெடுப்பதற்கான சமிக்சைகளாகப் பார்க்கப்படுவதுடன், இவர்களின் நலனுக்காக இருக்கின்ற அரச அரச சாபற்ற நிறுவனங்கள் மிக கூர்மையாகச் செயற்படுவதன் மூலமே வன்முறை அற்ற சுதந்திர சமுகத்தையும் அதன் மூலமான நல்ல வளர்சியினையும் அடைய முடியும் என்பதே எனது விருப்பம். 

இன்று வன்முறையை முறையிட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும், இதன் மூலம் பெண்கள் தங்களை விட்டுக்கொடுக்காமல் வன்முறையைப் இலகுவாக முறையிட முடியும். மேலும்இ பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றவேண்டும், அதுபோல் சமூக ஊடகத் தளங்கள், ஹாஸ்டேக்குகள் மற்றும் தலைப்புகளைப் பயன்படுததி நாம் விழிப்படைய வைக்கலாம். இது பொதுமக்களை ஈர்ப்பதுடன் அவர்களின்; ஆதரவையும் பெறுகிறது. இந்த கடுமையான உண்மைக்கு எதிராக குரல் எழுப்புங்கள்.

S.Thanigaseelan (S.T.Seelan)


0 comments:

Post a Comment