ADS 468x60

01 January 2022

அரசு 2022 இல் என்ன செய்ய வேண்டும்?

நாம் பல வரலாறுனகளைப் பார்த்திருக்கின்றோம், கடந்து வந்திருக்கின்றோம். அவற்றில் வெற்றிகளும் தோல்விகளும் அந்தந்த தலைமையின் நம்பிக்கையிலேயே தங்கியிருந்துள்ளது என்பது நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் இல்லையா. 

மிகவும் அவநம்பிக்கையான நேரங்களில் கூட, ஒரு நல்ல நாளுக்கான நம்பிக்கை எப்போதும் இருக்கும். 2022 விடியும் போது, இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பது இரகசியமல்ல. இருப்பினும், மீண்டு வருவதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது, மேலும் இந்த தாமதமான நேரத்திலும் சரியான முடிவுகள் எடுக்கப்பட்டால் பேரழிவு தரும் பொருளாதாரச் சரிவைத் நாம் தவிர்க்கலாம். இப்போதைய தேவை மீழெழுச்சி கொண்ட ஒரு தலைமைத்துவம், அந்தத் தலைமையின் மூலம் இந்தப் படுகுழியில் இருந்து வெளிவர விரும்பும் இலங்கையின் அனைத்து மக்களினதும் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியுமாகும்.

தற்போதைய நடைபெற்றுவரும் விவகாரங்களைப் பற்றி நிறைய குற்றங்கள் குறைகள் பழிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் பழி சொல்லி விளையாடும் நேரம் இதுவல்ல. உலகளாவிய தொற்றுநோயின் விளைவுகள் எதுவாக இருந்தாலும், வேறுநாடுகளைவிடவும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி முற்றிலும் சுயமாக ஏற்படுத்தப்பட்டதாகும். அதனால் சுயபரிசோதனை, மறுபரிசீலனை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை முக்கியமானவை என்றாலும், இன்று இந்த நாட்டின் தலைமை இந்த உடனடி நெருக்கடிக்கு தீர்வுகாண்பதே முதலாவது பணியாகும்.

மிகவும் விளங்கக்கூடிய வகையில்; சொல்வதானால் இன்று இலங்கை அதன் சாதாரண நிலையினைவிட்டு வெகுதுராம் நென்றுவிட்டது. பல தசாப்தங்களாக எமது நாட்டில் அரசியல் ஆதாயம், புகழ் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக அதிகம் அரசு துறையை விரிவுபடுத்தியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சிவில் அல்லது பொது நிர்வாகம், அத்தியாவசிய சேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக பாதுகாப்பு தேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டிய அரச துறைச் செலவுகள் இப்போது அவற்றைத்தாண்டி வாழ்க்கை மற்றும் பொருளாதாரத் துறைகளின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியுள்ளன. நாட்டில் உள்ள அரச துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சரியான எண்ணிக்கையைக் கூட சரியாகக் கணக்கிட முடியாத அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு பழய கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட 400 அரசுக்குச் சொந்தமான தொழில்நிறுவனங்கள் மற்றும் அரசைச் சார்ந்த நிறுவனங்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நட்டத்தில் இயங்கி வருகின்றதுடன் தனியார் துறை முயற்சிகளுக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புக்களுக்கும் தடையாக இருந்து வருகின்றன.

அதனால், இப்போது இலங்கை ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதால், அரசையும் அதன் பல நிறுவனங்களையும் பராமரிப்பதற்கான இந்த தாங்க முடியாத செலவுகளுக்கு அவசர சீர்திருத்தம் ஒன்று தேவை என்பது உணரப்பட்டுள்ளது. இப்போதைய பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வு என்றால் நாட்டின் அனாவசியமான செலவுகளைக் குறைப்பதும், அதற்கான நடவடிக்கைகளை விரைவாகச் செய்வதும்தான் என்பது அனைவருக்கும் புரிய வேண்டும். இலங்கையில் மொத்த ஊழியப்படையில் அல்லது தொகையில்; பொதுச்சேவை அல்லது அரச ஊழியர்கள் ஆசியாவிலேயே மிக உயர்ந்த விகிதத்தில் இருப்பது புள்ளிவிபரம் சொல்லுகின்றது. எனவே அத்தியாவசிய சேவைகளில் உள்ளவர்களைத்தவிர இதை மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. 

எனவே தனியார் துறையில் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வெளிப்படையான கொள்கை முடிவுகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டிய தருணமிது. அதற்கான திறன்விருத்தி உற்பத்தியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், ஏனைய மூன்றாம் நிலைக் கல்வி வழங்குனர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையினை தொழில் நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் அல்லது ஒருங்கிணைப்பில் மாற்றத்தினை கொண்டுவரவேண்டும்.

எனNவு அரசதுறை சீர்திருத்தங்களுக்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை. இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், போன்ற தோல்வியடைந்து வரும் மாபெரும் நிறுவனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும். தனியார் துறையால் சிறப்பாகக் கையாளப்படக்கூடிய எண்ணற்ற அரச நிறுவனங்கள், திணைக்களங்கள்; மற்றும் பல வர்த்தகத்தில்; ஈடுபடும் அதிகாரிகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும். இவை நீண்ட காலமாக தனியார் தொழில்முனைவு, புதுமை, போட்டித்தன்மை ஆகியவற்றை முடக்கி, அரச பொது நிதியில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், இலங்கை அரசு வினைத்திறனான நடவடிக்கைக்கு செல்லும் போது அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க முடியும். ஆதற்காக அபத்தமான முறையில் அதிக எண்ணிக்கையிலான அமைச்சகங்கள் குறைக்கப்படலாம், தேவையற்ற அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் மற்றும் இந்த தேவையற்ற அதிகாரத்துவத்தை பராமரிப்பதற்கான செலவுகள் குறைக்கப்படலாம். இதற்காக அரசாங்கத் தலைவர்கள் தங்கள் வீட்டைச் சீரமைத்து, செலவுகளைக் குறைத்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதுபோல் தனியார் விமானங்களில் வெளிநாட்டுப் பயணங்களில் எகானமி வகுப்பில் அமைச்சர்கள் பயணிப்பதையெல்லாம் அவர்கள் புதிய ஆண்டில் பொது மக்களை நினைவில் கொண்டு தியாகம் செய்ய முன்வரலாம்.

தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது, 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார் மேலும் குறைந்தது மூன்று வருடங்களுக்கு குறிப்பிடத்தக்க தேசிய அளவிலான தேர்தல் எதுவும் நடைபெறவேண்டிய தேவை இல்லை. எனவே இலங்கையின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு முக்கியமான கடினமான முடிவுகளை எடுப்பதற்கு தேவையான எல்லா நேரமும் இடமும் இந்த அரசாங்கத்திடம் இப்போது தாராளமாக உள்ளது. குறுகிய காலத்தில் அரசியல் செலவுகள் எதுவாக இருந்தாலும், இந்த விவேகமான நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு சாதகமான முடிவுகளின் மூலம் வெற்றிப்பாதைக்குச் செல்லும். இந்த முடிவுகளை எடுக்க தைரியமும் தொலைநோக்கு பார்வையும் மட்டுமே தேவை. புதிய ஆண்டில் இலங்கையின் தலைவர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றை கூற முனைகின்றேன்.


0 comments:

Post a Comment