ADS 468x60

17 April 2022

இந்த நாட்டிற்கு என்ன ஆனாது?

'நாட்டிற்கு என்ன ஆனது'
என்ற கேள்வியே எங்கும் விடையின்றி எழுகிறது. போராட்டக் களத்தில் நின்ற போராளிகள், அரச ஊழியர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நாட்டில் அரசியல் என்பது மரியாதைக்குரிய பொது சேவையாக இருந்த காலம் ஒன்று இருந்தது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக தொலைதூர கிராமங்களில் இருந்து அரசு ஊழியர்கள் அன்று பேருந்தில் அல்லது ரயிலில் வந்தனர். அவர்கள் சொகுசு விடுதிகளில் தங்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லமான 'ஷ்ரவஸ்தி' இல்லத்தில் தங்கியுள்ளனர். ஆதன் பின் அவர்கள் வந்த வழியே மீண்டும் கிராமத்திற்குச் சென்றனர்.

அப்போது பொது நிருவாகம் ஒரு மாவட்டத்தை உள்ளடக்கியிருக்கவில்லை. அவருக்கு ஒரு தொகுதி இருந்தது. அதே தொகுதியில் அவர்கள் வளர்ந்ததால், பிரச்சாரம், பிரசாரம் என்று கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படவில்லை. அதுபோன்று தங்கள் சொந்த பிம்பத்தை வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. கிராமத்து மனிதன் அந்தந்தக் கிராமத்தில் எளிமையாக வாழ்ந்தான். இந்த எளிய கிராமத்து மனிதர் குற்றங்களைச் செய்யவும், திருடவும், கிராம மக்களை அவமானப்படுத்தவும் விரும்பவில்லை. பொதுச் சொத்து மக்களின் சொத்து என்று ஆழமாக நம்பப்பட்ட ஒரு கலாச்சாரம் வாழ்க்கை முறை மற்றும் நாகரீகத்திற்கு சொந்தமானது.

காலம் விரைவாகக் கடந்தது, அதனால் அக்காலத்தின் உயர்ந்த மதிப்புகள் பலவற்றை இன்று அழித்துவிட்டது. அதுபோல் திறந்த பொருளாதார முறை வந்தது, புதிய அரசியலமைப்பு வந்தது, தேர்தல் முறை மாறியது இதனால் வரம்பற்ற ஆசைகளின் இடைவிடாத நாட்டத்தில் அவமானம் பற்றிய பயம் பெரும்பாலான அரசியல்வாதிகளிடையே தொலைந்துபோனது. நுகர்வோர் 'பொருளாதார அமைப்பின்' கைதியாக இருப்பதன் தர்க்கரீதியான முடிவு, சமூகத்தை 'நாய்களைக் Nபுhல் கொல்வதற்கான அல்லது பணம் சம்பாதிப்பதற்கான' இடமாக மாறறியுள்ளது. இங்கு மனித விழுமியங்களுக்கு இடமில்லை. இதனால் ஒட்டுமொத்த சமுதாயமே அதிர்ந்துகொண்டிருக்கின்றது. இதனால் எந்த துறையும் தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது.

'நாட்டிற்கு என்ன ஆனது' என்ற கேள்விக்கான பதிலைத் தேடுவது அங்கிருந்து தொடங்க வேண்டும். நாடு அரசியல்வாதிகளால் ஆளப்படுகிறது. தேர்தல் முறையும் ஒரு பாத்திரத்தை வகித்தது. தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அனாவசியமாகச் செலவழித்த பணத்தைக் திரும்பி எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இப்படித்தான் சமுகத்தில் அடாவடிகள் பல பல செய்து, நாசகாரிய வேலைகள் பல செய்து பலர் அரசியல்வாதியானார்கள்.

ஆகவே ஒருவருக்கு இருக்கும் அதிக அதிகாரமே ஊழலுக்குக் காரணம் என்று அரசியல் விஞ்ஞானம் போதிக்கிறது. இது மறைக்க முடியாத நித்திய உண்மை. நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் அரசியல்வாதிகளிடம் மூட்டை மூட்டையாக உள்ளது. அந்தத்திட்டத்தில்; லஞ்சம், ஊழல், ஏமாற்று, திருடுவது,  என்பனவற்றினால் அவரவர் பை நிரப்பப்படுகிறது அதிகமானவர்களுக்கு. அதனாலேயே போட்ட அதிக கார்பெட் பாதைகள் ஒரே மழையில் உடைந்து போவதனை காணுகின்றோம். இந்தச் சூழலிலேயே மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதோடு நிற்கவில்லை. உயர்மட்ட அரசு ஊழியர் முதல் கீழ்நிலை ஊழியர் வரை இந்த நச்சு வட்டத்தில் சிக்கியுள்ளனர். அப்படித்தான் குழந்தையின் தாயை லாட்ஜில் அழைத்துச் சென்று குழந்தையை பள்ளியில் சேர்க்கும் அதிபர்கள் பற்றிய கேவலமான செய்திகள் வெளிவருகின்றன. அரச அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும்போது கையுறை கொடுத்தால் மிக எளிதாக வேலைகளை செய்துவிடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. சில சமயங்களில் பல வருடங்களாக செய்யாத பணியை இரண்டு மணி நேரத்தில் லஞ்சத்தினால் செய்துவிடலாம் என்பது அறிந்தவர்களுக்கு தெரியும் இந்த நாட்டில்.

சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் போது, ஆய்வுகள் பெரும்பாலும் கட்டிடம் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதை வெளிப்படுத்துகிறது. இது போன்ற அனுமதியின்றி கட்டுமானம் எப்படி நடக்கும்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன செய்தார்கள்? இப்படித்தான் சமூகம் முழுவதும் திருட்டு காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதனால்தான் 'திருடர்களுக்கு தண்டனை வழங்குங்கள்' என்பது போராட்டக் களத்தில் இருந்து ஒவ்வொரு மேடையிலும் எழும் முழக்கமாக உள்ளது. வெறும் கூச்சல்களால் திருடர்கள் தண்டிக்கப்படுவதில்லை அதுபோல் திருட்டு நின்றுவிடுவதுமில்லை. அப்படியானால், பொதுப் பணம் திருடப்பட முடியாத வகையில், நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியல் சாசனத்தில் விதிகளைச் சேர்க்க வேண்டும். மேலும் திருடர்களை தண்டிக்க முறையான பொறிமுறையை அமைக்க வேண்டும். திருடர்களை சட்டத்தால் பிடிக்க முடியாது அதனால் திருட்டை நிறுத்தவும் முடியாது. காலி முகத்திடலுக்கு படையெடுக்கும் இளைஞர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழும் போராட்டங்களின் அடிப்படையிலும் திருடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்பதனையே சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கவேண்டிய நேரமிது.


0 comments:

Post a Comment