ADS 468x60

03 April 2022

இன்று யார் மக்களை வழிநடாத்துகின்றனர்.

இன்று மக்கள் நாட்டை கையில் எடுத்துள்ளனர். அவர்கள்தான் அரசை அமைக்கும் சக்தியினை எமது நாட்டில் வைத்திருக்கின்றனர். அவர்கள் சொல்லுவதனை கேட்க வேண்டிய நிலை என்றும் இல்லாததுபோல் இன்று தோன்றியுள்ளது. ஆனால் நாட்டின் ஆட்சி மக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதாய் எந்தச் சந்தர்ப்பத்திலும் இருக்கக்கூடாது மாறாக அது அவர்களுக்கு நல்ல வாழ்க்கை முறையினை ஏற்படுத்துவதாய் இருக்கவேண்டும். இந்த நிலையில் எழுச்சியடைந்துள்ள மக்களை நல்ல அரசியல் தலைவர்கள் முன்னடத்த முன்வரவேண்டும்.

ஒரு ஜனநாய நாட்டில், அங்குள்ள மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அந்த நாட்டிற்கு பயனற்ற அரசாங்கங்களை வீழ்த்துவதற்கு உரிமை உண்டு, ஆனால் மக்கள் எதிர்பின்போதான பேரழிவைத் தவிர்க்க வேண்டுமானால் அதனை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும். ஒரு ஒடுக்கப்பட்ட திறனற்ற தொழிலாளர்கள் எவ்வாறு அவர்கள் கீழே இழுக்கும் சுவர்களுக்கு அடியில் புதைக்கப்படுகிறார்களோ, அதுபோலவே ஒரு அரசாங்கத்தின் சரிவு அபாயகரமான முறையில் இருக்குமானால் அது பேரழிவை ஏற்படுத்தும்.

இன்று மக்களின் ஆர்பரிப்பு, ஆதங்கம் நம்மால் நன்கு புரிந்துகொள்ளக்கூடியது, மேலும் அவர்களின் கோபம் இன்று இந்தமக்கள் தொகையினைவிட அதிகமாகிவிட்டது என்பது இப்போது அனைவரும் அறிந்ததே. அவர்களுக்கு வழிகாட்டுவதும், ஜனநாயக ரீதியில் விரும்பிய அரசியல் மாற்றங்களைக் கொண்டு வருவதும் அவர்களின் சக்தியைப் பயன்படுத்துவதும் சிறப்பான எதிர்க்கட்சிகளின் கடமையாகும்..

ஆகவே இவ்வாறான ஒரு சந்தர்பத்தில் கண்மூடித்தனமான கோபத்தால் இயக்கப்படும் மக்களுக்கு எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். ஏனெனில் மக்கள் இன்று மிகவும் கோபமடைந்துள்ளனர், மேலும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கும், அல்லது வெளியேறுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், அதன் மூலம் நாடு அராஜகத்திற்குச் செல்லாமல் தடுப்பதற்கும் ஜனநாயக ரீதியாக அவர்களின் வழிப்படுத்தவேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. ஆனால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், செல்வாக்கற்ற, திறமையற்ற ஆட்சிக்கு சாத்தியமான மாற்றீட்டை வழங்குவதற்கும் எதிர்க்கட்சிகளின் தோல்வியடைந்த் தலைவர்களின் நடவடிக்கை போதுமானதல்ல.


0 comments:

Post a Comment