ADS 468x60

28 April 2022

இடைக்கால அரசு நெருக்கடிக்கு தீர்வாகுமா! அரசியல் ஆய்வு

இலங்கை இன்று பரபரப்பான அரசியல் குழப்பத்தின் குட்டையாக மாறியுள்ளது. ஒருபுறம், மக்களைப் பாதிக்கும் பொருளாதார நெருக்கடி. மறுபுறுத்தில் அதற்கு இணையான அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இவற்றைத் தீர்ப்பதற்கான நடைமுறைக்கு சாத்தியமான வழி என்ன என்பதே அனைவரின் மனதிலும் எழுந்துள்ள கேள்வி. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதே பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று பல தரப்பினரும் கூறுகின்றனர். இந்தக் கருத்தை புத்திஜீவிகள், தொழில்சார் குழுக்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், சமயத்தலைவர்கள் மற்றும் இளைஞர் சமூகம் ஆகியன வற்புறுத்தி வருமை.

நமது நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியல் சாசனத்தை ஆய்வு செய்தால், அரசியலமைப்பின் 42வது சரத்து, ஜனாதிபதியின் கருத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதன்படி புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதமர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு. பின்னர் ஒரு அரசாங்கம் அமைக்கப்படுகிறது. இது புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுவான நடைமுறையாகும்.

எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் பதவியில் இருக்கும் போது அவர் மீது அதீத நம்பிக்கை இல்லை என்பதை நிரூபித்து புதிய பிரதமரை நியமிக்க இம்முறை உத்தேசிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல் வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. இடைக்கால அரசாங்கத்தின் முன்னுதாரணத்துடன் ஓர் அரசாங்கம் அமைக்கப்படும் போது, அதற்கு பாராளுமன்றத்தில் நேரடிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்கள் வெளி ஆதரவுடன் அரசாங்கத்தை நடத்த முடியும்.

அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் கட்சிகளின் ஆதரவை இழக்கும் போது இடைக்கால அரசாங்கம் எந்த நேரத்திலும் கவிழ்ந்துவிடும். நமது அரசியல் பாரம்பரியத்தை பின்பற்றும் அண்டை நாடான இந்தியாவின் அரசியல் வரலாற்றை ஆராயும் போது இதற்கு பல நல்ல உதாரணங்கள் கிடைக்கும். பாராளுமன்றத்தில்; ஐந்நூற்று நாற்பத்து மூன்று பராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் 25 எம்.பி.க்களுக்கு குறைவான ஆதரவுடன் இடைக்கால அரசாங்கங்களில் மூன்று பேர் பிரதமர் பதவிகளை வகித்துள்ளனர். அதன்படி, இந்தியாவின் எட்டாவது பிரதமரான ஸ்ரீ சந்திரசேகர், 1990 முதல் 1991 வரை சுமார் ஒரு வருடம் பிரதமராகப் பணியாற்றினார். நாட்டின் 11வது பிரதமர் தேவ கவுடா 1996 முதல் 1997 வரை 10 மாதங்கள் இருந்தார். இந்தியாவின் 12வது பிரதமராக இருந்த இந்திரகுமார் குஜ்ரால் 1997 முதல் 1998 வரை சுமார் ஒரு வருடம் அரசாங்கத்தை வழிநடத்தினார். இவை மூன்றுமே சிறுபான்மை இடைக்கால அரசாங்கங்களால் நடத்தப்பட்டன. இந்த அமைப்பின் தனித்தன்மை என்னவென்றால், ஒரு சக்திவாய்ந்த அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது, போதுமான அதிகாரம் கொண்ட அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால அரசாங்கத்தை அது பராமரிக்கிறது. இதுபோன்ற பல இடைக்கால அரசாங்கங்கள் நீண்ட காலம் நீடிக்கவில்லை என்பதை இந்திய உதாரணங்கள் காட்டுகின்றன.

இம்முறையும் இலங்கையில் இவ்வாறானதொரு அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சி முன்மொழிகிறது. புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் தற்போதைய பிரதமர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் பின்னணியில், உத்தேச இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அடுத்த வாரம் தீர்க்கமான ஒன்று நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள், தற்போது மக்களை வாட்டி வதைத்து வரும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், குறிப்பிட்ட காலத்திற்குள் நிவாரணம் வழங்கவும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர். நாம் அறிந்த வரையில் நாட்டில் தற்போது பல எரியும் பிரச்சினைகள் உள்ளன. மின்வெட்டு, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மருந்துப் பற்றாக்குறை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பல குழப்பமான நெருக்கடிகளுக்கு சமூகம் உடனடித் தீர்வுகளை நாடுகிறது. குறிப்பாக மக்கள் வாங்க முடியாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றம் ஒரு பாஸனாகிவிட்டது. அதே சமயம் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்கப் போராட்டங்கள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த தொழிற்சங்கப் போராட்டங்கள் அனைத்தும் அரசியலில் தூய்மையான மாற்றத்திற்காக நடத்தப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.

எனவே, இடைக்கால அரசே இந்த நெருக்குதலுக்கு சிறந்த சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது. அதன் அமைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமைக்கப்படும் அரசாங்கம் குறுகிய காலத்தில் தீர்க்க ஒரு சிக்கலான தீர்வினைக் கொண்டிருக்கும். அதற்கு முறையான உத்திகள் மற்றும் திட்டமிடப்பட்ட திட்டம் தேவை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படாவிடின் அது மற்றுமொரு சிக்கலான அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.


0 comments:

Post a Comment