இன்று, பணவீக்கத்தின் விளைவாக இலங்கை கடுமையான டொலர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்குக் காரணம், இலங்கை மத்திய வங்கியிடம் எதிர்கால வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைத்து, புதிய கடன்களைப் பெறுவது அல்லது டாலர்களை திரட்டுவது போன்ற திட்டம் இருந்திருக்கவில்லை. எனவே, மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநராக இருந்த பேராசிரியர் டபிள்யூ. டி. லட்சுமணனை வெளியேற்றிய அரசு நிவார்ட் கப்ராலை அங்கு கொண்டு வந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு பட்டய கணக்காளரோ அல்லது ஒரு பொருளாதார நிபுணரோ அல்ல.
அன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்காமல் பலவந்தமாக டொலரை 203 ரூபாவாக வைத்திருக்க வேண்டும் என கப்ரால் கருதினார். டொலர் கையிருப்பு தீர்ந்தமையால்; கடந்த சில மாதங்களில் நாட்டிற்கு குறைந்தது 500 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிவார்ட் கப்ரால் எப்போதும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கப் போவதில்லை என்று கூறி வந்தார்.;. ஆனால் இறுதியில் பொருளாதாரம் தலைகீழாக விழுந்ததைக் கண்ட கப்ரால், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகினார்.
இலங்கை 'கப்ரால் கொள்கையை' தொடர்ந்து பின்பற்றியிருந்தால், இந்நாட்டின் விளைவு, மத்திய வங்கியின் வெடிகுண்டு வெடிப்பை விட நூறாயிரக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்த வெடிப்பாக இருந்திருக்கும்.
இரசாயன உர விவகாரத்தில் உண்மையில் நடந்தது உரம் வாங்க டொலர்கள் இல்லாமையே. இரசாயன உரத்திற்குப் பதிலாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத் தொகுதியை திருப்பி அனுப்பியதற்காக சீன உர நிறுவனத்திற்கு சில மில்லியன் டொலர்களை இழப்பீடாகச் செலுத்த வேண்டியிருந்தது. அது மட்டுமின்றி இதனால் சீனாவும் நம்மிடம் இருந்து அந்னியப்பட்டது.
இந்த அந்நியப்படுத்தலுடன், மிக அத்தியாவசியமான எரிபொருள் தட்டுப்பாடு தொடங்கியது. எரிபொருள் பற்றாக்குறையின் அடுத்த விளைவாக மின்வெட்டுது. அது தவிர டொலர் தட்டுப்பாட்டால் இன்று வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் விற்கப்படும் இருமல் சிரப்கள் சந்தையில் இருந்து மறைந்துவிட்டன. அந்த சிரப்புக்கு மாற்றாக இருக்கும் மருந்துகளும் மறைந்துவிட்டன.
இந்தநிலை இப்படியே போனால் ஒரு நாள் சுகாதார அமைச்சு அதன் கொழும்பு 7 காணியிலிருந்து காணாமல் போகலாம். பிறகு அந்த காலி நிலத்தை தனியார் சொத்தாகக் கருதி ஏதாவது வெளி நாட்டுக்கு விற்கலாம்.
ஆகவே இந்த கடுமையான சூழலில் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பதவி விலக விரும்பினாலும், அவர்களைச் சுற்றியிருக்கும் தந்திரமானவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி இந்த அரசாங்கம் வீழ்ந்தால் பதவியில் இருக்கும் இந்த வங்குரோத்துக்கு காரணமான அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டி வரும். இப்படியான சிறைத்தண்டனையை தவிர்க்க ஜனாதிபதியையும் பிரதமரையும் பிணைக் கைதியாக வைத்திருக்க இவர்கள்; துடிக்கின்றனர். மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், திரும்பவும் மூன்றில் இரண்டு பங்கு அல்லது மூன்றில் மூன்று பங்கு ஆட்சி அதிகாரம் பெற்றாலும் பரவாயில்லை. ஆகவே இதன் மீதியை அடுத்த வாரம் மக்களின் வலுவான கோசங்கள் மூலம் அரசு தெரிந்து கொள்ள முடியும் என்பதே எமது கருதுகோள். மக்களால், மக்களுக்காக நிறைவேறும் நாள் மிகத் தொலைவில் இல்லை.
0 comments:
Post a Comment