ADS 468x60

11 June 2022

இன்று ஊட்டச்சத்து பிரச்சினை தீவிரமாக கருத்தில்கொள்ளவேண்டியது

நாளைய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க எமது பிள்ளைகள் தயாராக உள்ளனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நாட்டை விட்டு அனுப்ப முயற்சிக்கின்றனர்.

நம் நாட்டின் தவறான சில அரசியல்வாதிகளால் அவர்கள் அந்தப் பாதையில் தள்ளப்பட்டனர். இந்த ஆட்சியாளர்கள் பழைய தலைமுறையை மட்டுமல்ல, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளையும் பாதாளத்தில் தள்ளி தகர்த்துள்ளனர்.

இவ்வாறான துரதிஸ்டவசமான விடயங்கள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இந்த நாட்டில் வாழும் மற்றுமொரு தலைமுறை சிறுவர்கள் எதிர்பாராத பரிதாபமான கதியை எதிர்நோக்கியுள்ளனர். இப்போது அந்த உண்மையைப் புரிந்துகொண்டு வெளிப்படையாகப் பேச வேண்டும். மேலும், சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

'இப்போது, பல சிறு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்களாக மாறியுள்ளனர்.' இப்போது நாம் அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு சரிவிகிதத்தில் ஊட்டமுள்ள உணவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், ஊட்டச்சத்து குறைபாடு மோசமடையக்கூடும். 

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்திருப்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.

டொலர் பற்றாக்குறை தொடங்கப்பட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட கணிசமான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சில மாதங்களுக்குப் பிறகு நம் நாட்டில் உணவு நெருக்கடி தொடங்க அரம்பித்தது. அதற்கு முன் பால்மா தட்டுப்பாடு இருக்கவில்லை, அதுபோல் மற்ற பொருட்களுக்கு தட்டுப்பாடோ விலை உயர்வோ இருந்திருக்கவில்லை.

ஆனால், மார்ச் மாதம் ஆரம்பித்ததன் பின்னர் எரிபொருள்;, எரிவாயு மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது ரொட்டி, பருப்பு மட்டுமல்ல, ஒரு கிலோ அரிசியும் கூட எளிதில் கிடைக்காத மோசமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம்.

வயது முதிந்தவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர், இதற்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். இந்தக் குழந்தைகளுக்கு முன்பு போல சத்தான உணவு கிடைப்பதில்லை. பெற்றோருக்கு இன்னுமொரு வாரிசுரிமைக்கான பொருளாதார பலம் இல்லை. ஆனால், சந்தையில் பொருட்களின் தட்டுப்பாடு கடுமையாகப் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

'நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு உலகின் சிறந்த உணவுகளான சீஸ், வெண்ணெய், தொத்திறைச்சி மற்றும் இறைச்சியைக் கொடுத்தோம். ஆனால் இப்போது அந்த உணவு வகைகளைத் தந்துதவ முடியாதுள்ளது. 

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எப்படி சத்தான உணவை வழங்குவது என்று சில பெற்றோர்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். அதற்கு நான் சொல்லுவது என்னவெனில், 'எங்கள் கிராமத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் எவ்வளவு சத்து நிறைந்தவை தெரியுமா? இங்கே சில உதாரணங்களைப் பகிர விரும்புகின்றேன்.

நாம் இலகுவாகக் கண்டுபிடித்து பெற்றுக்கொள்ளக்கூடிய பல மரக்கறிகள் மற்றும் பழங்கள் பற்றிக் அவதானிக்க வேண்டும். பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாக்காய், சுரக்காய், தேங்காய், அத்துடன் மலிவான பூசணி, உருளைக்கிழங்கு, முருங்கை, கிழங்குவகை, மற்றும் கீரை வகைகள் அத்துடன் சிவப்பு கௌபீஸ், வெள்ளை கௌபீஸ் மற்றும் கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி மற்றும் மூலிகைகள ஆகியவற்றினைக் குறிப்பிடலாம். 

வயதுக்கு ஏற்ற எடை, வயதுக்கு ஏற்ற உயரம் மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடை ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாட்டை நாங்கள் பார்க்கிறோம்.

சமீப காலங்களில், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, குழந்தைகளைப் பரிசோதிக்கும் விதத்தில் இதுபோன்ற மாற்றத்தைக் வைத்தியர்கள் அறிக்கையிட்டு வருகின்றனர். குழந்தைகள் முன்பை விட அதிக நெருக்கடியை எதிர்கொள்வதை அவர்கள் கூறிவருகின்றனர். இதை அதிகரிக்க அனுமதிப்பது நல்லதல்ல. அதனால்தான் இதில் அதிக கவனம் செலுத்த முற்படவேண்டும்;, குறிப்பாக பெற்றோருக்கு இவை சார் கல்வி கற்பிக்க வேண்டும். ஏனெனில் 'குழந்தைகளின் ஊட்டச்சத்தை கவனித்துக்கொள்வதில் பெற்றோருக்கு இங்கு பெரும் பொறுப்பு உள்ளது.'

குழந்தை பருவத்தில் ஒரு குழந்தைக்கு முட்டையின் மஞ்சள் கரு மற்றும்; இறால் ஆகியவற்றைக் கொடுப்பது நல்லது. 

இப்போது முது பாவிக்கும் மற்றும் புகைக்கும் அப்பாக்கள் இவற்றை விட்டு விலகி, அந்தப் பணத்தில்; முட்டை வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும். கிராமத்தை சுற்றி நடந்து, அங்குள்ள சில முருங்கை இலைகளை உணவில் சேர்க்கவும். இதில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. மஞ்சள் காய்கறிகள், குறிப்பாக இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணிக்காய்; ஆகியவை அந்த விளைவைக் கொண்டுள்ளன.

நீண்ட காலமாக எமது பெற்றோர்களும் பிள்ளைகளும் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நெருக்கடி எப்போது எப்படி தீர்க்கப்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் குழந்தைகளின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் உணவு முறை குறித்து விரைவாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அல்லது அது எதிர்பாராத விளைவுகளுக்குக் கூட வழிவகுக்கும். எனவே, தற்போது நிலவும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில், கிடைப்பதை முழுமையாகப் பயன்படுத்தி, குழந்தைகளின் ஊட்டச்சத்தில் அதிக ஆர்வம் காட்டுவதுதான் நமக்கு தேவை. அந்த ஆர்வமும் பொறுப்பும் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


0 comments:

Post a Comment