ADS 468x60

04 June 2022

நெருக்கடியைத் தீர்பது அனைவரதும் பங்களிப்பாகும்

 தோல்வியும், வீழ்ச்சியும் வெற்றியின் முன்னோடி என்று கூறப்படுகிறது. உறுதியும், அர்ப்பணிப்பும், வெற்றிகரமான திட்டமிடலும் இருந்தால், உலகில் உள்ள அனைத்தையும் வெல்ல முடியும் என்பது எனது கருத்து. இந்த சுலோகங்களை மந்திரமாக நாம் இன்று உச்சரிக்க வேண்டும் என்று உணர்கிறேன்;. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா ஒருமுறை அல்ல பலமுறை வீழ்ச்சியடைந்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான் இரண்டாம் உலகப் போரின் போது சரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த நாடுகள்தான் இன்று உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளாக உள்ளன. அந்த நாடுகளின் முன்மாதிரியை நாமும் பின்பற்ற வேண்டும்.

இந்த தருணத்தில் அர்ப்பணிப்பு இல்லாமல் எமது நாடு மீண்டும் எழுச்சி பெற முடியாது என்பதை; மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நம் வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான சரிவையும் தோல்வியையும் அனுபவித்திருக்கிறோம். ஆனால் மறுபுறத்தில் இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படவேண்டும். 

இலங்கைக் குடிமக்கள் அனைவரதும் கருத்தொற்றுமைக்கான பாதை அமைக்கப்பட வேண்டியது இன்று முககியமாகப் பார்க்கப்படுகின்றது. அத்துடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மன உறுதி நமக்கு வேண்டும். இல்லை - இல்லை - இல்லை என்பதனை விடுத்து; 'வேண்டும்' என்ற வார்த்தையை முன் வைக்க வேண்டும். எங்களிடம் எண்ணெய் வளம் இல்லை தான், ஆனால் விவசாயம் செய்ய ஒரு தங்க நிலம் இருக்கின்றது. நமது மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 90 வீதம் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் என்று கணிப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடிமகனும் தேவையான பயிரினங்களை நடுவதன் மூலம் இதற்கு தயாராக வேண்டும்.

உலகை வென்ற அரசாங்கங்கள்; முதலில் தங்களின் தவறான உத்திகளையும், தோல்வியடைந்த திட்டங்களையும் உணர்ந்து அவற்றை சரிசெய்தன. இரண்டாவதாக, நிலவும் யதார்த்தத்தை அச்சமின்றி எதிர்கொண்டு வெற்றிகரமான பணிகளில் ஈடுபட்டனர். 

நாம் விவசாயத் துறையில் பல தவறுகளைச் செய்து விட்டோம். மொத்தத்தில் தேசிய பொருளாதாரத்தில் நாம் செய்த தவறுகள் பல உள்ளன. அவர்களைத் திருத்துவதுதான் நடக்க வேண்டுமே தவிர, விமர்சனங்களைச் செய்து நேரத்தை வீணடிக்கக் கூடாது. 

இரசாயன உரங்கள் மீதான தடையால் விவசாயம் நலிவடைந்தது. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தத் தவறியது பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்துள்ளது. ஆனால் தற்போது அவை ஆரத்பிக்கப்பட்டுள்ளன. இப்போது செய்ய வேண்டியது அர்ப்பணிப்புடன் செயல்படுவதுதான். அதற்கு நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகமும் தயாராக வேண்டும்.

5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவதும், 1 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பை பராமரிப்பதும் எதிர்கால பொருளாதார இலக்குகளாகும் என பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கை வீழ்ந்துள்ள சூழ்நிலையில் இது கடினமான இலக்காகத் தோன்றினாலும் அதனை முறியடிக்க முடியும். முக்கிய பிரச்சனை அந்நிய செலாவணி வருவாய், மற்றும் அதற்கான வளங்கள் மற்றும் வாய்ப்புகள் பல உள்ளன. சுற்றுலாத் துறை, ஏற்றுமதித் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு போன்றவற்றில் வருமானம் ஈட்ட முடியும். ஜப்பான் மாத்திரம் இலங்கைக்கு கிட்டத்தட்ட 300,000 வேலை வாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த வாய்ப்பு.

பல ஐரோப்பிய நாடுகளில் கம்ப்யூட்டர் துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலை காலியிடங்கள் இருப்பதாக அறிக்கைகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கணினித் துறையில் தொழில்கள் நிறைவுற்றன, ஆனால் இப்போது அது மாறிவிட்டது. சில நிறுவனங்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே கம்ப்யூட்டர் தொழில் செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. கணினி அறிவியலில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்கள் நம் நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அழைத்துச் செல்வதற்கான வழிமுறைகளையும் அரசாங்கம் வகுக்க வேண்டும். நான் அடிக்கடி இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறுவதை இத்தருணத்தில் நினைவுகூர வேண்டும். இளைய தலைமுறையினர் கணினித் துறையிலும் ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று நான் புத்திகூற விரும்புகின்றேன்.

நாட்டில் நிலவும் நெருக்கடியை உற்று நோக்கினால் அதன் சிக்கலான தன்மை வெளிப்படும். இது பல அம்சங்களைக் கண்டது: அரசியல் கொதிநிலை, பொருளாதாரச் சரிவு மற்றும் மக்கள் எழுச்சி. அவை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றாலும், அதற்கான பரிகாரங்கள் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். 

இன்று அரசாங்கம் ஓரளவு உறுதியாக உள்ளது. வரிசைகள் குறையத் தொடங்கியுள்ளன. கோரப்பட்ட வெளிநாட்டு உதவியும் கடன்களும் படிப்படியாகக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளதாக அரசு கூறுகின்றது. ஒருவித விவசாயப் புரட்சிக்கு நாடு தயாராகி வருவதாகவும் தெரிகிறது. நமக்குத் தேவையான சில உரங்களைத் தர இந்தியா முடிவு செய்துள்ளது. இது அடுத்த வாரம் வரவுள்ளது. உரம் விநியோகிக்கும் முறையான முறை குறித்தும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இவை நேர்மறையான அறிகுறிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் மிக முக்கியமான காரணி நெருக்கடியைத் தீர்ப்பது அனைவரின் பங்களிப்பாகும். விவசாய அமைச்சு இவ்வாறான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கல்வி அமைச்சும் கூட பயிர்ச்செய்கையில் இணைந்துள்ளது. உணவு நெருக்கடியைச் சமாளிக்கச் செய்ய வேண்டிய ஒரே விஷயம், சாத்தியமான ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்வதுதான். அதற்குப் போதுமான நிலமும் தண்ணீரும் இருக்கிறது.


0 comments:

Post a Comment