ADS 468x60

04 June 2022

தருசு நிலங்களை விளைச்சல் நிலமாக்குவதே பஞ்சத்துக்கான பரிகாரம்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கு முன், நவம்பர் மாதத்தில் பெரும்பாலான மக்கள் உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள நேரிடும் என்று கணித்திருந்தார். இது முற்றிலும் உண்மையாகி வருவதாகத் தெரிகிறது. அடுத்த சிறுபோகப் பருவத்தில் செய்கை பண்ணப்படும் விவசாயம் 60 வீதம் தோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போதைய இரசாயன உரங்கள் மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக சிறுபோகப் பருவத்தில் நெல் உற்பத்தி 60 வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டு மக்கள் எளிமையான கிராமப்புற பிரதேசங்களில் வாழ்ந்தபோது, டீசலில் இயங்கும் டிராக்டர்களைப் பயன்படுத்தும் நெல் வயல்கள் இல்லை. அப்போது எரிபொருட்கள் பெரிதாக பாவனையில் இருந்திருக்கவில்லை. ரசாயன உரங்கள் இல்லை. களைக்கொல்லிகளும் இல்லை. மக்கள் தொகை அதிகமாக வளராததால் பெரிய அளவில் நெல் பயிரிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 

அப்போது மக்கள் பல்வேறு வேலைகளையும் செய்தனர். அருளம்பலத்தின் வயலில் உள்ள நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், அனைவருக்கும் நாற்று நடும் பணிக்காகவும் பேரின்பம் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். அதன்பின், பேரின்பத்தின் வயலில் உழுது கொண்டிருந்தபோது, அருளம்பலம் உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கு வேலைக்கு வந்தனர். இது மிகவும் எளிமையான தொழிலாளர் பரிமாற்ற திட்டமாகும். ஆனால் இன்று அவ்வளவு எளிமையான வாழ்க்கை முறை இல்லை. அந்த வாழ்க்கை முறை மறைந்து போனதற்கு யாரும் பொறுப்பல்ல. நாகரீகத்தின் வளர்ச்சி, இயந்திரங்களின் வளர்ச்சி மற்றும் பல காரணிகள் இந்த வளர்ச்சிக்கு செல்வாக்குச் செலுத்தின. இது தவிர்க்க முடியாத வளர்ச்சியாக இருந்தது.   

ஆரம்பத்தில், இந்த தொழில்துறை வளர்ச்சிக்கு இணையாக, சரிசமமாக மக்கள் தொகை அதிகரித்தது. அடுத்ததாக, வளர்ச்சிப் போக்கில், மக்கள் தொகை பெருகியது. அதற்கேற்ப தானியங்களை பயிரிடும் பொறுப்பும் அதிகரித்தது. அந்த நேரத்தில் அதற்கு ரசாயன உரங்கள் கிடைத்துவந்தது. இன்று அவை நிறுத்தப்பட்டதனால், விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு உள்ளாகிவருகின்றனா

நநம்மத்தியில் பேசப்படும் வறட்சிக்கும் பஞ்சத்திற்கும் வித்தியாசம் உள்ளது. வழமையான மழை வீழ்சி குறைந்தால்; அதன் காரணமாக உணவுப் பயிர்கள் அழிந்து போவதே வறட்சி. அப்போது மக்கள் அதிகம் சாப்பிட மாட்டார்கள். 

பஞ்சம் என்பது வேறு காரணங்களால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறை. சில சமயங்களில் பணமின்மை, உரமின்மை, தொழிலாளர் பற்றாக்குறை, விவசாயிகளிடையே தொற்றுநோய்கள் மற்றும் அவர்களின் இறப்பு ஆகியவை பஞ்சத்தை ஏற்படுத்துகின்றன. 

இந்த ஜூலை மாதத்தில் சிறுபோகப் பருவம் தோல்வியடைந்தது மழையின்மையால் அல்ல. உரம் இன்மை மற்றும்; எரிபொருட்கள் இழப்பு காரணமாக. அதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறை நிரந்தரப் பஞ்சம் எனச் சொல்லலாம். 

இந்த ஆண்டும் இங்குமாத்திரமல்ல உலகின் பிற பகுதிகளில் கூட உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த உணவு நெருக்கடியின் விளைவாக பல நாடுகள் நம் நாட்டுக்கு அரிசி அல்லது கோதுமை மாவை ஏற்றுமதி செய்வதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளன. மேலும், உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்கும் இடையேயான போர் நாம் வாழும் பிராந்தியத்தில் உணவுத் தானிய விநியோகத்தை குறைத்துள்ளது உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தி செய்யும் நாடு உக்ரைன். யுத்தம் காரணமாக அனைத்து ஏற்றுமதிகளையும் நிறுத்தியுள்ளனர். 

எனவே ஜூலை மாத இறுதியில் ஒரு நீடித்த பஞ்சம் மற்றும் தாங்க முடியாத சூழ்நிலை தொடங்கினால், இப்போது நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதுதான் விலை குறைந்த பூக்கடையைத் தேர்ந்தெடுத்து நம் இறுதிச் சடங்கிற்கு ஒரு மாலை கட்டுவது.

இதற்கிடையில், இந்த நெருக்கடிக்கு மற்றொரு வழி உள்ளது. அதாவது, குறுகிய காலத்தில் விளைவு தரும் பயிர்கள், உரமின்றி விளையும் தானிய வகைகள் ஆகியன குறைந்த பட்சம் இந்நாட்டில் உள்ள அனைத்து தரிசு நிலங்களிலாவது பயிரிடவேண்டும். அதுபோல உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளை பயிரிடுவதன் மூலம் பஞ்சத்தில் இருந்து விடுபடலாம். வீட்டுத்தோட்டம் தொடங்குவதில் மிகக் அதிக அக்கறை கொள்ளவேண்டும். ஆனால் குடியிருப்புகள் அல்லது நகர்ப்புறங்களில் உள்ள இரண்டு பேர்ச் வீட்டு உரிமையாளர்கள் இந்த மாற்று வழிகளை அணுக முடியாது. அதன்படி தரிசு நிலங்களில் குறுக்கிடாமல் விவசாயம் செய்ய அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு விவசாயப் போர் என்று பெயர். 

1970 -77 காலப்பகுதியில் இருந்த அரசு ஒரு விவசாயப் புரட்சியை ஆரம்பித்து, தேசிய உற்பத்திகளை ஊக்குவித்தது. அந்தக்காலத்தில் இங்கு உள்ளூர் உணவு வகைகளின் விளைச்சல் அரசால் நன்கு ஊக்குவிக்கப்பட்டது. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அன்னிய செலாவணி மீதான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன. அந்நியச் செலாவணி தேவைப்படுபவர் வெளிநாடு சென்று வேலை வாங்கி அந்நியச் செலாவணி சம்பாதிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இதற்கிடையில், அரிசி இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் ஹோட்டல்களில் அரிசி சமைக்க வாரத்தில் பல நாட்கள் தடை விதிக்கப்பட்டது. அப்போது இலங்கையில் தரமான கிராமிய பொருளாதாரம் இருந்தது. அப்போது ஒரு பவுன் சீனி 72 சதம்;. கூட்டுறவு சங்கம் கொடுக்கும் அரிசி 25 சதம். கடையில் விற்கப்படும் ஒரு கிலோ சம்பா அரிசி 80 சதம் இருந்து. இன்று 40 ரூபாய் வரை விற்கும் தீப்பெட்டி அன்று 5 சதம். மேலும் பேருந்தின் முதலாம் கட்டணம் 10 சதமாக இருந்தது. இன்று 140 ரூபாய்க்கு விற்கும் நுளம்புத்திரி சுருள் பெட்டிகள் அன்று இல்லை. காரணம் அப்போது அவ்வளவு நுளம்புகள் இருந்தது இல்லை. அதுமட்டுமின்றி இரவில் தூங்குவதற்கு மின்விசிறி பயன்படுத்தப்படவில்லை. புவி வெப்பமடைதல் அவ்வளவாக அதிகரிக்காததாலும், இலங்கையில் காலநிலை சீராக இருந்தமையும் இதற்குக் காரணம்.


0 comments:

Post a Comment