ADS 468x60

26 June 2022

நாம் கண்டுகொள்ளாத பாடசாலைக் குழந்தைகளின் பிரச்சினைகள்

ஒரு நாட்டிலுள்ள மக்கள் எல்லா வகையிலும் வறுமையால் பாதிக்கப்படும்போது, உணவு மற்றும் ஏனைய பொருட்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களைச் சமாளிப்பதற்கான வழிகளையும் கண்டுபிடிப்பதில் பலர் தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள். இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்வதால், பலரால் மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட யாராலும் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளமை நாம் அறிந்தது. இந்த நிலையில் இன்று பாடசாலைகளுக்கு செல்லும் மாணவச் செல்வங்களுக்கான  பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவற்றையும் பெறுவதில் மிக கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இன்னும் இது பலரால் பேசப்படவில்லை.

பேப்பரின் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து பயிற்சி புத்தகங்கள், வினாத்தாள்கள், பாடப்புத்தபகங்கள் மற்றும் பாடசாலை பைகள், காலணிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் சாதாரண பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குழந்தைகளின் கல்வியை தொடர்வதில் விழுந்த பேரிடியாகும் இல்லையா. பொருளாதார நெருக்கடி காலரணமாக எல்லாவகையிலும் அவதிப்படும் பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்வது பல நேரங்களில் கடினமாக உள்ளது. இதனால் தேர்வுகளுக்குத் தயாராகும் செயல்முறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறான பின்னணியில், பல பயிற்சி புத்தக விற்பனையாளர்களுக்கு, ஓடர் செய்த புத்தகங்கள் இதுவரை கிடைக்காமல் உள்ளது. இவைதவிர பாடசாலை பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றின் விலையும் விரைவாக உயர்ந்துள்ளது, இருப்பினும் வாங்குவதற்கு கிடைக்கும் சில பாடசாலை உபகரணங்கள் கூட தரமில்லாமல் உள்ளன. 

அதனால், எதிர்காலத்தில் பல பாடங்களின் குறிப்புகளையும் பயிற்சிகளையும் ஒரே புத்தகத்தில் எழுதும் சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். இன்னும் சில பாடசாலைகளில் குழந்தைகள் இதே நிலையை எதிர்கொள்வதாகக் கேள்வி. இவ்வாறான ஒரு நிலையில் சரியான பாடசாலை சீரடையினையோ, காலணிகளையோ அணிந்துகொண்டு வர வற்புறுத்தாமல் அவர்கள் கிடைக்கின்ற வேறு காலணி அணிந்து பள்ளி சீருடை அணியாமல் பாடசாலைக்கு வர அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் பாடசாலை மாணவர்களுக்கு இந்தகடகாலத்தில் இழைக்கப்படும் கடுமையான அநீதியாகப் பார்க்கப்படும். ஆகவே நமது காலத்தில் வரலாற்றில் நாடு சந்திக்காத மிகப்பெரிய நெருக்கடி இதுவாகும். அதைச் சமாளிக்க தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். இன்று இருக்கும் வங்குரோத்து நிலையில்; குழந்தைகளின் கல்விக்கு ஆடை, பாடசாலைப் பை, காலணிகள் மற்றும் இதர அப்பியாசக் கொப்பிகள் தடையாக இருக்கக் கூடாது.

பேப்பர் சார் உள்ளீடுகளின் விலை உயர்வு மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து பேப்பர் அடிப்படையிலான செயல்பாடுகள் மற்றும் தொழில்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. புதிய புத்தகங்கள் அச்சிடுவதையும் பதிப்பாளர்கள் நிறுத்திவிட்டனர். தற்போது சுமார் 800 ரூபாய்க்கு விற்கப்படும் புத்தகத்தின் விலை 2000 ரூபாயாக உயரும் என புத்தக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் புத்தக அச்சிடும் மற்றும் பதிப்பகத் துறை பெரும் ஆபத்தில் உள்ளது. மார்ச் மாதத்திலிருந்து ஒரு புதிய புத்தகம் கூட வெளிவரவில்லை எனத் தெரிகிறது. இது ஒரு சோகமான செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த பேப்பர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றனவற்றினால் பல துறைகள் பாதிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுகத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த காகித விலையாலும் தட்டுப்பாட்டாலும் இன்று அவர்களது வேலைகள் கூட கேள்விக்குறியாகி உள்ளன.

இன்று நாடு எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வுகள் இல்லை. மாறாக, மாற்று வழிகளை பரிசோதிப்பதுதான் ஒரே வழி. கோவிட் தொற்றுநோய்களின் போது சில நாடுகள் இதுபோன்ற பல சோதனைகளை மேற்கொண்டன. குறிப்பாக உணவு மற்றும் விவசாயத் துறையில் இதுபோன்ற பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடதாசிப் பிரச்சனைக்கு நமது நாடும் தற்காலிகத் தீர்வு காண வேண்டும். குறிப்பாக பேப்பர் கழிவுகளை மீழ் சுழற்சி செய்வதற்கான மாற்றுவழிகளையும் நாம் கவனத்தில் எடுப்பது சிறந்தது. பயன்படுத்துவதில்லை. பள்ளிக் குழந்தைகளைக் கூட இதுபோன்ற மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது நல்லதே தவிர தீமையல்ல.

பின்வரும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளலாம்

பாடசாலை அபிவிருத்திச் சபை மற்றும் பழைய மாணவாத்கள் ஒன்றிணைந்து இவற்றை பெறமுடியாத மாணவர்களை அடையாளங்காணுதல் வேண்டும்.

ஊரில் பாவித்து முடிந்த புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்காக பெற்றுக் களஞ்சியப்படுத்த வேண்டும்.

பேப்பர் கழிவுகளை கடதாசி ஆலைகளுக்கு மீழ் சுழற்சிக்காக சேமித்தல்.

போன்ற சிறிய விடயங்களை கவனத்தில் கொள்ளலாம்


0 comments:

Post a Comment