ADS 468x60

03 January 2011

காதல் ஆறுமா

காயம் ஆறலாம் காதல் ஆறுமா
மாய உலகிது மாற்றம் நியதியோ!
இன்று என்னுடையது
நாளை வேறொருவனுக்கோ!
எது நடங்ததோ, நடக்கிறதோ!
நடக்கப்போகுதோ....
எல்லாம் ஏமாற்றமே!!!........
மாற்றம் ஏதடா?
வாழ்கை வீணடா!..
பொய்யே மேலடா!...

01 January 2011

இணையத்தில் சிறுவர்களை பாதுகாப்போம்.

அனைவர்க்கும் இனிக்கும் இனிய 2011 புத்தாண்டு வாழ்துக்களுடன் ஒருவிடயத்தினை பதிவிடலாம் என்று நினைக்கிறேன். புத்தாண்டுப் பொலிவுடன் நல்லதை செய்ய நினைப்போம் என்றால் நம்ம சின்னஞ்சிறுசிகள்தான் வருதுகள்..ஏனா அவங்கதான் நம்ம எதிர்கால சொத்து இல்லயா..அதால அவங்கள இந்த மோசமான இன்ரர்நெற் பாவனையில் இருந்து பாதுகாப்பது நமது கடமை அல்லவா!

இணையம் என்பது உலகலாவில் பரந்துபட்ட ஓர் வலையமைப்பு ஆகும். இணையத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் காணக்கிடைத்தாலும் அதற்கு நிகராக தீய விடயங்களும் காணப்படத்தான் செய்கின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக சிறுவர்கள் காணப்படுகின்றனர். இணையத்தின் உண்மைத்தன்மையை புரியக்கூடிய வயது அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் தற்போது சமூக வலையமைப்புக்கள் மற்றும் அரட்டை அறைகள் போன்றவற்றிலே அதிகமான தவறுகள் நடக்குமிடமாக காணப்படுகின்றது.

கட்டிளமைப்பருவத்தில் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என புரிந்து கொள்வது கடினமாகவிருக்கும், ஆனால் இதுவே அவர்களின் வாழ்க்கையை பாதாளத்துக்கு இட்டுச்சென்று விடும். பெற்றோர் இது தொடர்பாக கவனமெடுக்கவேண்டும்.சிறுவர்களை இணைய செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பதற்கு மேலத்தேய நாடுகளில் கடினமான சட்டங்கள் அமுலில் உள்ளது. எனினும் பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்பட்டுக கொண்டுதான் இருக்கின்றனர்.

சரி நாம் இனி இவற்றில் இருந்து எப்படி சிறுவர்களை பாதுகாக்கலாம் என பார்ப்போம்.வீடுகளில் சிறுவர்கள் இணையத்திளை பாவிக்கும் சந்தர்ப்பங்களில் பில்டர்களினை (Cyper patrol) உபயோகிக்கலாம். உதாரணமாக தேடுபொறிகள் அதிகமாக ஆபாசத் தளங்களையே முன்னிலைப்படுத்திக்’ காட்டும் ஏனெனில் அதுதான் அவர்களின் விளம்பர உத்தி.

நாம் இவ் பில்டர்களை பாவிக்கும் போது நாம் குறிப்பிட்ட சொற்களை இணையத்தில் காட்டாத பிரசுரிக்காத வண்ணம் நாம் செய்து கொள்ளலாம். மற்றும் சிறுவர்களின் நடவடிக்கைகளினை இணையத்தில் கண்காணிப்பதற்கு கீலெக்கர்களினை (Key logger) உபயோகிக்கலாம். இவை கணணியை இயக்கியதில் இருந்து அவர் கணணியில் என்ன செய்கிறார் என்கின்ற அனைத்து தரவுகளையும் அவருக்குத் தெரியமால் இவை சேமிக்கும். தேவையெனில் நிமிடத்துக்கொரு தரம் கணணியில் என்ன செய்கிறார் என்னபதனை Screen Shot மூலமாக பிடித்து சேமித்தும் வைக்கக் கூடியவை இந்த கீ nyhக்கர்கள்.

இவற்றினை உபயோகிப்தன் மூலம் சிறார்களுக்கு தெரியமாலே அவர்களினை நாம் பாதுகாக்கலாம். குறித்த மென் பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ளவற்றை பார்க்கவும்.
Actualspy Keylogger
Cyper patrol

16 December 2010

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இன்றய தேவை. (Eastern University, Batticaloa)

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகம் (Eastern University) இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்று. கிழக்கில், மட்டக்களப்பில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1981 ஆம் ஆண்டிலேயே இது காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ.தேவநாயகம் ஐயா அவர்களால் 'மட்டக்ககப்பு வளாகம்' என்ற பெயரில் நிறுவப்பட்டது.

01 December 2010

அப்துல் கலாம் கடந்த வெற்றிப்பாதை.....



நம்பிக்கைக்கே
இடமில்லாத நிலையிலும்
தொடர்ந்து
முயற்சி செய்கிறவர்கள்தாம்
முக்கியத்துவம்வாய்ந்த
செயல்களை உலகில்
செய்து முடிக்கிறார்கள்.


கலாம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியுமோ! அவரைப் பற்றி அறியும்போது எதையாவது செய்யலாம், நினைத்ததை அடையலாம், நம்பிக்கை மட்டும் கையாக வைத்துக் கொண்டால் என்பதை அறிந்தேன்.. 


மேலே ஆகாயத்தில் நகர்ந்துகொண்டிருந்த  அந்த விமானத்திலிருந்து கீழே பார்த்தார் விமானி. துணை விமானியிடம் ஒரு குளக் கரையைக் காட்டினார். ”நான் சிறுவனா யிருந்த போது அந்தக் குளக்கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருப் பேன். ஆகாயத்தில் விமானங்கள் பறந்தால் அண்ணாந்து பார்ப்பேன். என்றேனும் ஒரு நாள், விமானியாக வேண்டும் என்று கனவு காண்பேன்” என்றார்.
துள்ளிக் குதித்தார் துணை விமானி. ”நினைத்ததை முடித்து விட்டீர்கள். இப்போது சந்தோஷம்தானே” என்றார். ‘இல்லை’ என்றார் தலைமை விமானி. ”இப்போது விமானத்தில் இருந்து கீழே பார்க்கும்போதெல்லாம், அந்தக் குளக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாதா என்று யோசிக்கிறேன்”.
பலருக்கு முன்னாலும் மலைபோல் நிற்கிற பிரச்சினை இதுதான். குறிப்பிட்ட இடமொன்றை சிரமப்பட்டு எட்டுவது. இந்த இடம் எனக்குப் பொருந்தவில்லையென்று தலையை முட்டுவது.
சாதிக்க வேண்டும் என்று நினைத்து சாதாரண நிலையைத் தாண்ட முயல்வது வேறு. தாங்கள் எட்டியிருக்கும் உயரங்களை எண்ணியும் பாராமல் சலித்துக் கொள்வது வேறு.
ஓரிடத்தில் நிலைகொண்ட பிறகுதான் இன்னோர் இடம்நோக்கி நகர்வது சாத்தியம். நிலை கொள்ளாமல் தவிப்பவர்கள் நிச்சயமாய் பதட்டத்தில்தான் இருப்பார்கள்.

தங்களைத் தாங்களே ரசித்துக் கொண்டு அடுத்த தளம் நோக்கி நிதானமாக நகர்பவர்களே நிறைவான வெற்றியை அனுபவிக்கிறார்கள்.
இருந்த இடத்தில் கால்களை அழுந்தப் பதியுங்கள். அங்கிருந்து அடுத்த இலக்கை நினையுங்கள். உந்தி மேல் செல்ல சிறகு முளைப்பதை உணர்வீர்கள்.
இருக்கும் இடம் பிடிக்கவில்லை என்று பதட்டத்தில் கால்களை உதறிக் கொள்பவர்கள் சிறகு முளைக்கும் வரை பொறுக்காமல் பறக்க நினைத்து கால்களையும் உடைத்துக் கொள்கிறார்கள்.
தன்னிடம் இருக்கும் வல்லமையை உணர்ந்தவர்கள் எல்லோருமே எளிய முறையில் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் எல்லை யில்லாத முயற்சியுடன் தொடர்ந்திருக்கிறார்கள். சிரமமான பயிற்சிகளையும் நம்பிக்கையுடன் எதிர் கொண்டு அதன் மூலம் வளர்ந்திருக்கிறார்கள்.
பள்ளிச் சிறுவனாய் இருந்தபோது, மோசமான கையெழுத்தைக் கொண்டிருந்தார் அவர். தினமும் மூன்று மணி நேரங்கள் எழுதிப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார் ஆசிரியை. சிரமம்தான். விடாமல் முயன்றார். கையெழுத்து சீரானது. அந்தக் கைதான், 2020ல் இந்தியா வல்லரசு என்கிற கனவை ஒவ்வோர் இந்தியனின் இதயத்திலும் எழுதியுள்ளது.
தன் கையெழுத்தைப் பற்றி கவலைப்பட்டு முயன்றதால்தான் கலாம் இன்று இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றத் துணிந்திருக்கிறார். பள்ளிப்பருவத்தில் கணக்கு சரியாக வரவில்லை. அதற்காக அவர் விடவில்லை. ஆசிரியர்களின் துணையுடன் கணக்குக் கோட்டையையும் கைப்பற்றினார்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது சிறுவனாயிருந்த அப்துல்கலாம், வீடுகள்தோறும் நாளிதழ்கள் போடுகிற வேலையைச் செய்தார். நாளிதழ்களில் வின்ஸ்டன்ட் சர்ச்சிலின் புகைப் படத்தைப் பார்த்தவர், ”ஒருநாள் என் படமும் நாளிதழ்களில் வர வேண்டும்” என்று கண்ட கனவும் நிகழ்ந்தது.
விமானப் பொறியியல் படித்து முடித்த போது விமானப்படையில் சேர விண்ணப்பித்தார் அப்துல்கலாம். மொத்தம் 25 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். 24 பேர் தேர்வாயினர். நிராகரிக்கப்பட்டவர் அப்துல்கலாம் மட்டுமே.
மனம் சோர்ந்தவர் ரிஷிகேஷில் உள்ள சுவாமி சிவானந்தரைக் கண்டார். விமானப்படை தன்னை நிராகரித்ததால் வருத்தத்தில் இருப்பதை கலாம் சொன்னார். ”இதைக் கேள்வி கேட்காதே! வேறொன்றுக்காக நீ படைக்கப்பட்டுள்ளாய். அதை நோக்கிச் செல்” என்று ஆதரவாகக் கூறினார் சுவாமி சிவானந்தர்.
விமானப்படைக்குத் தகுதியில்லாதவர் என்று கருதப்பட்ட கலாம் குடியரசுத் தலைவர் ஆனபிறகு, இந்தியாவின் கப்பல்படை – விமானப் படை – தரைப்படை ஆகிய முப்படைகளுக்கும் தலைவராய் நின்று அணிவகுப்பு மரியாதையை ஏற்க வைத்தது காலம். செய்வதை சலிப்பின்றி செய்தால், சிகரங்களை ஆளலாம் என்பதற்குக் கண்கண்ட உதாரணமாய் கலாம் திகழ்கிறார்.
அவருடைய பிறந்தநாளை சர்வதேச மாணவர்கள் தினம் என்று கொண்டாடும் திட்டத்தை ஐ.நா.சபை அங்கீகரித்துள்ளது.அவர் நீடுழி வாழ்ந்து நல்ல உலகை உருவாக்க கால்கோலாக இருக்க வேண்டும் என வாழ்துகிறேன்..

Reference:
http://www.namadhunambikkai.com
Ovvoru Naalum Aanantham

28 November 2010

களுதையும் கண் கொடுக்கும்!


















களுத,
சனியன்,
உருப்படாதது,
தண்டச்சோறு
அப்பாக் காரன்..
குழந்தையைப் பார்த்து...

சில வருடங்களின் பின்,.........
குறுடு,
கட்டயில போறது...
இஞ்ச சோற வைத்துவிட்டு
எங்கே தேடுகிறாய் மனிசா?
அம்மாக்காறி...

ஐயா கண்களை
திறந்து பாருங்க........
நேர்ஸ் பொண்ணு...
ஓ ஆண்டவா!
நல்லாத் தெரியுது
தங்கம்....
சீதேவி....
யாரம்மா அந்த
புண்ணியவான்??
உங்க மகதான் என்றாள்

அன்றுதான் தெரிந்தது....
களுதையும்
கண் கொடுக்கும் என்று....
.........................................

27 November 2010

என்னைப் படிக்க விடுங்க..













நொரு.... நொறு........
சடார்..... புடார்......
சட்டிகள் உடையும்
சத்தம்!!

கா...கூகூகூகூ.....
கீகீ...கே..கே...
விச வார்த்தைகள்
சூழலை சுடுகிறது..

வரார்... வரார்....
சரார்.... புரார்.....
பானையில் ஒட்டிய சோறு
குடிச்ச வாய்கு.....

பட... பட...
பட... பட....
பயத்தில்! அணைகிறது விளக்கு!
அவளது கல்வியைப்போல்!!!...

பிள்ள... பிள்ள...
பிள்ள... பிள்ள....
அம்மா தட்டினாள்,
அப்பா வீசிய
சோற்றுப் பருக்கையுடன்....
அப்போதுதான் பார்த்தேன்,
அவளின் கன்னம் சிவந்திருந்தது!
எமது வறுமையைப்போல்!!!
.

அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.....

 இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
     ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்..

பழம் நிறைசோலைகள் உருவாக்குதல், இனிமையான குளிர்சி பொருந்திய  தண்நீர் தடாகங்களை ஆக்குதல், உண்டு உறங்குவதற்க்காக அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம் கட்டுதல்...இன்னும் என்ன என்ன நன்மைகளை செய்தாலும் இவற்றையெல்லாம் விஞ்சி யாரோ ஒரு ஏழை பிள்ளை கல்வி படிக்க உதவுவதே மகா புண்ணியம்.. என்று பாரதியார் பாடியிருக்கிறார்...

15 November 2010

அறிவோம் அறிவை


அறிவு (Knowledge) என்பது உணர்தலாலும், அனுபத்தாலும், கற்பதாலும் கிடைக்கப்பெறுவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றன. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூட சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது..

இயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முளைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலறுந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.
ஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காக பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.
ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்து தமது குழந்தை என்று கூறு வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்...
பட்டறிவு(experience)
அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்: 1.கூரிய நோக்கு(perception) 2.கல்வி கற்கும் முறை(learning process) 3.விவாதித்து முடிவுக்கு வருதல்(debates) 4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு 5.தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)
நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.
ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.