19 July 2013
மட்டக்களப்பின் ஆவணங்களை பாதுகாக்கும் முனைப்பு ஆரம்பம்.
14 July 2013
சிந்துவெளி நாகரிகத்தை விஞ்சிவிட்ட கிழக்கு மக்களின் நாகரிகம்
நாகரிகங்கள் மக்களது வாழ்விடங்கள் சார்ந்து அந்த அந்த இடத்துக்கு ஏற்ப்ப தோற்றம் பெற்ற ஒரு விடயமாகும். மக்களது சமுக வளர்ச்சி அந்த நாகரிக பரிநாமத்தில் பூத்துக் குலுங்கும் ஒன்றாகும். உலகில் தலை சிறந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நாகரிகங்களுள் சிந்து நாகரிகம் போற்றுதற்க்கு உரியதாகும். இவர்கள் இயற்க்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தனர், இயற்க்கையை நேசித்தனர், இயற்க்கைக்கு பயந்து இயற்கையை வணங்கினர். சிந்து நதி வறட்சி நிலப்பகுதியைச் சேர்ந்த ஒரு காட்டாறு. வெள்ளம் பெருகி வரும் போது படுகைளில் வண்டல் படியும். செடி, கொடி, புதர்களை வெட்டிப் போட்டுத் தீ மூட்டுவார்கள். பின்பு ஆடு மாடு, ஒட்டகங்களை படுக்கப் போடுவார்கள். அவை படுத்து எமுந்த பகுதிகளில் விதைகளைத் தூவி விளைந்த வற்றைச் சேமித்துக் கொள்வார்கள். உலகில் சிந்து நதி தீரத்தில் மட்டுமல்ல பாரசீகப் பகுதிகளில், இன்றய ஈரான், ஈராக் நீல நதிக்கரை(எகிப்து) இல் கூட இப்படித்தான் நாகரிகம் வளர்ச்சி கண்டது. 07 July 2013
கண்ணே கண்ணே மட்டு மண்ணே !!
கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன
தேனே தேனே எங்கும் விளையும் காடு
தென்றல் உலவும் வீடு
மீன்கள் பாட்டிசைக்க மான்கள் அசைந்தோடும்
மேனி அழகு நாடு- வாவி பழகும் பாரு
மெது மெதுவாக சூரியனும்
மேகத்தினூடே விரிகிறதே
எதுவந்த போதும் எமக்கெனவே
எதிர்காலம் கண்ணில் தெரிகிறதே
சாந்திகெட சத்தமிடும்
சமுகத்தை மேடையில் தூக்கிடுவோம்
ஏந்திநிற்கும் கரங்களெல்லாம்
ஏர்பிடிக்கும் கரம் ஆக்கிடுவோம்
திருநாள் வருநாள் தெரிகிறதே
கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன
தேனே தேனே எங்கும் விளையும் காடு
தென்றல் உலவும் வீடு
மீன்கள் பாட்டிசைக்க மான்கள் அசைந்தோடும்
மேனி அழகு நாடு- வாவி பழகும் பாரு
மெது மெதுவாக சூரியனும்
மேகத்தினூடே விரிகிறதே
எதுவந்த போதும் எமக்கெனவே
எதிர்காலம் கண்ணில் தெரிகிறதே
சாந்திகெட சத்தமிடும்
சமுகத்தை மேடையில் தூக்கிடுவோம்
ஏந்திநிற்கும் கரங்களெல்லாம்
ஏர்பிடிக்கும் கரம் ஆக்கிடுவோம்
திருநாள் வருநாள் தெரிகிறதே
கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன
06 July 2013
புற்றுநோயை இல்லாதொழிப்போமா- கரம் கொடுக்கும் கரங்கள்
மட்டக்களப்பில் முன்னிலை வகிக்கும் அடையாளங் காணப்பட்ட பாரிய இடர்களில் அதிகரித்து வரும் புற்றுநோயாளர்கள் ஒரு அச்சத்துக்குரிய சவாலாகும். ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட புற்றுநோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடையாம் காணப்பட்டுள்ளனர், அதில் அவர்களின் புற்று நோயை அடையாளங் காண்பதற்கு முடியாமல் வருடாவருடம் அதிகளவான நோயாளர்கள் கல்முனைக்குடி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மகரகமை புற்றுநோய் சிகிச்சை நிலையம், கண்டி போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் காலி போதனா வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு அவர்கள் புற்றுநோயினை கண்டறிவதற்க்காகவும், மேலதிக சிகிச்சைக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டு வந்தனர்.
23 June 2013
மட்டக்களப்பில் அப்பக்கடை அவலம்..
நான் இந்த அம்மாக்களிடம் தான் ஆசயாய் அப்பம் சாப்பிடுவேன்.. சுவையாய், மிருதுவாய் இனிமையாய் இருக்கும். ஆனால் அந்த சுவையான அப்பத்துக்கு பின்னால் பெரிய வேதனை, கஸ்ட்டம், சிரமம், பிரச்சினைகள் மறைந்து இருக்கிறது. மட்டக்களப்பில் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது, கிட்டத்தட்ட 40,000 விதவை தமிழ் பெண்கள் இருப்பதாக. இவர்கள் தங்கள் வயிற்றுப்பிளைப்புக்காக எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன்.
மட்டக்களப்பு மிகை உணவு விளையும் பூமியாகும், ஒரு முயற்சியாளன் தன்னிடத்தில் அதிகம் காணப்படும் வளங்களை வைத்தே ஒரு தொழிலை தொடங்குகிறான் என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
16 June 2013
பொரியல் துண்டு
ஓ பின்னே போய் பார்க்கிறேன்
முன்னே கொண்டு வந்தாய்
இராப் பொழுதுகள் தெரியாத
உழைப்பில் பிழைக்க வைத்தவர்
எமது இன்பத்துக்காய்
நிலாக்களை விளக்காக்கி
நிலங்களை போர்த்தி
வெயிலில் குளித்து
அவையத்துள் முந்தி இருக்கச் செய்தவர்
இதயத்துள் முந்தி நிற்கிறார்
கொழும்புக் கடையில்
மதியச் சோறு கொண்டு தந்தான்
கோறாச் சோற்றை குழைத்தபடி
ஏற இறங்கப்பார்த்தேன் ஒரு
பாறை மீன் துண்டு....
பயித்தியம் மிச்சத்தைக் கொட்டவாபோறா??
தம்பிக்கு வை எனக்கு வேணாம்!
அப்பாவின் அதட்டல்
அந்த ஒற்றை மீன்துண்டு
கொண்டுவந்து
நினைவுறுத்திய போது
என் கண்கள் பனித்த
கண்ணீர்துளிகளை எல்லா
அப்பாக்களுக்கும்
காணிக்கையாக்குகிறேன்
30 March 2013
மட்டக்களப்பு கிராமங்கள் மாற்றம் காணுகின்றன-குடியிருப்பு ஓர் எடுத்துக்காட்டு
"ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டு நின்றது. ஆல மரத்தின் இலைகள் அசைந்து பச்சைக் கொடி பிடிக்க, மாடுகளும், ஆடுகளும் பறவைகளும் குதுகலிக்க, ஒரு கிராமத்து வாசனையை நுகர்ந்த வண்ணம் உள்ளே நகர்ந்தோம்"
பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
02 March 2013
கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் கரைசேர்வது எப்போ! கவலையுறும் கிராம மக்கள்
காலங்காலமாக விவசாயத்தினையே நம்பி வாழுகின்ற மக்கள் நம்மவர்கள். ஆனால் காலநிலை மாறிவிட்டது, காலங்களும் மாறிவிட்டது இதனால் கை நழுவிப்போனது அவர்களின் தொழில் நிலமை, அவர்களது நம்பிக்கையினைப் போல். மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடா வருடம் ஏற்ப்பட்டு வரும் வெள்ள அனர்த்தம் மாற்றீடில்லாத பாரம்பரிய விவசாயத்தினை கழுவிச் சென்று அந்த விவசாயிகளை எல்லாம் நடு வீதியில் தள்ளி விடுவதனை சமகால அறிக்கைகளில் இருந்து காணலாம்.
கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் மனித வலுவில் (கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம்) ஏற்ப்படுத்தும் பயனுள்ள மாற்றம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது.





