இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.07 November 2015
இயற்கையை அரணாக்குவோம்!
இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.01 November 2015
மகன் தந்தைக்காற்றும் உதவி!
அவையத்துள் முந்தி நிற்கும் இமையம்
உபயங்கள் செய்து வாழும் கண்ணன்
சேய்மையில் இருந்தாலும்
தாய் மண்ணை மறக்கவில்லை..
உபயங்கள் செய்து வாழும் கண்ணன்
சேய்மையில் இருந்தாலும்
தாய் மண்ணை மறக்கவில்லை..
28 October 2015
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே -நமைக்
காட்டிக் கொடுப்போர் காலடி என்றும் நாடாதே- வெறும்
பேச்சைக் கேட்டு பொம்மைகள் போல ஆடாதே- பொழுது
புலரும் கிழக்கில் வெற்றியின் முழக்கம் வாடாதே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!
காட்டிக் கொடுப்போர் காலடி என்றும் நாடாதே- வெறும்
பேச்சைக் கேட்டு பொம்மைகள் போல ஆடாதே- பொழுது
புலரும் கிழக்கில் வெற்றியின் முழக்கம் வாடாதே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!
27 October 2015
நல்லாட்சியில் கிடைத்த மழையோ!
மடை உடைக்கும் வெள்ளம்
நிரம்பியது பள்ளம்
நாட்டிலேதோ பிழை
நாளெல்லாம் மழை
நிரம்பியது பள்ளம்
நாட்டிலேதோ பிழை
நாளெல்லாம் மழை
கூழுக்கும் இல்லை வழி
கூறுவது யாரைப் பழி
மறுகாமறுகா பெய்யிது காட்டில்
மக்களெல்லாம் முடங்கினர் வீட்டில்
கூறுவது யாரைப் பழி
மறுகாமறுகா பெய்யிது காட்டில்
மக்களெல்லாம் முடங்கினர் வீட்டில்
ஒரே இதுதான் வேலையாப் போச்சி
ஒழிப்பது எப்படி வறுமையை ஆச்சி
தோட்டமும் தொரவும் எங்களுக்கு ஆதாரம்
கிடைக்குமா வெள்ளத்தில் போன சேதாரம்
ஒழிப்பது எப்படி வறுமையை ஆச்சி
தோட்டமும் தொரவும் எங்களுக்கு ஆதாரம்
கிடைக்குமா வெள்ளத்தில் போன சேதாரம்
நாங்களும் நினைத்தோம் இது
நல்லாட்சியில் கிடைத்த மழையோ என்று
முள்ளிவாய்க்கால் முற்றுகைபோல்
அள்ளி வருகிறது ஆத்துவெள்ளம்
நல்லாட்சியில் கிடைத்த மழையோ என்று
முள்ளிவாய்க்கால் முற்றுகைபோல்
அள்ளி வருகிறது ஆத்துவெள்ளம்
தவிர்க்க முடியாத ஒன்று
தவிக்கும் மக்களை நாம்தான் பார்க்கனும்
நேர்த்தியான தகவல் தேவை- அது
நேர்மையாய் உதவி அளிக்கும்
தவிக்கும் மக்களை நாம்தான் பார்க்கனும்
நேர்த்தியான தகவல் தேவை- அது
நேர்மையாய் உதவி அளிக்கும்
சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு சுமைகள் தெரிவது இல்லை!
தமிழாய் பிறக்கவைத்தான்- தெருவில்
தனிமையில் நடக்கவைத்தான்
உறவை மறக்கவைத்து- எங்களை
ஊர் ஊராய் திரியவைத்தான்
அணைக்கும் அம்மா ஆருயிர் அப்பா
அனைத்தும் இழந்தே போனோம்!
உணவிடக் கூட உறவுகள் இழந்து
ஊனமாய் வாழ்க்கையில் ஆனோம்!!
வீடுகளெல்லாம் காடுகளாச்சி
வெளியே வாழ்க்கை போச்சி
சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு
சுமைகள் தெரிவது இல்லை
பள்ளிக்கு செல்ல பார்ப்பவர் இல்ல
படிக்கிற நெலமையும் இல்ல
பசியில வாடிடும் நேரத்தில் கூட
பக்கத்தில் உறவுகள் இல்ல!!
தனிமையில் நடக்கவைத்தான்
உறவை மறக்கவைத்து- எங்களை
ஊர் ஊராய் திரியவைத்தான்
அணைக்கும் அம்மா ஆருயிர் அப்பா
அனைத்தும் இழந்தே போனோம்!
உணவிடக் கூட உறவுகள் இழந்து
ஊனமாய் வாழ்க்கையில் ஆனோம்!!
வீடுகளெல்லாம் காடுகளாச்சி
வெளியே வாழ்க்கை போச்சி
சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு
சுமைகள் தெரிவது இல்லை
பள்ளிக்கு செல்ல பார்ப்பவர் இல்ல
படிக்கிற நெலமையும் இல்ல
பசியில வாடிடும் நேரத்தில் கூட
பக்கத்தில் உறவுகள் இல்ல!!
நான் மானல்ல ஓட!

இந்தா வந்திட்டன் பொறுமா
இறங்கி வடிச்சி வாறன்
இறால்க் கூனி சுங்கான்
வறால் கெழுத்தி செல்வன்
மூத்த பிள்ளை நான்தான்
முழுதும் சுமக்கும் பெண்தான்
வீட்டுக்குள்ள இருந்தா
வெறும் பானை சோறிடுமா?
அச்சம் காட்டி என்னை
அறைக்கு உள்ளே பூட்டாதே
பயந்து போகும் மானைத்தான்
பாய்ந்து பிடிக்கும் புலி
நான் மானல்ல ஓட
மறுபடியும் பாயும் வேங்கை
09 August 2015
கொடுக்கிற மக்களுக்கு குடிக்க இல்லையா தண்ணீர்? மன்றாடும் உன்னிச்சை மக்கள்..
மட்டக்களப்பு என்ற அழகுப் பெண்ணை வேலியாக காத்து நிற்கும் மக்கள் எமது எல்லைக் கிராமத்தவர்கள்தான். யுத்தம், அனர்த்தம், இருள், வறுமை, வேதனை என்னும் பேரிடிகளின் காப்பாக இருந்தவர்கள்,மழையிலும் வெயிலிலும் கல்லிலும் முள்ளிலும் கரத்தாலும் சிரத்தாலும் களனி செய்து உண்ணும்; சோற்றுக்கு நெல் விளைவிப்பவர்கள், மீனும் தேனும் பாலும் கூழும் பசிக்கு தருபவர்கள், வந்தோரையெல்லாம் வாழவைப்பவர்கள் என்ற அடைமொழியின் சொந்தக் காரர்கள், உபசரிப்பதில் உற்சாகமானவர்கள் இந்த உன்னிச்சை கிராம மக்கள்.
23 July 2015
போதையிலே பாதை மாறிப் போகாதே!
போகாதே தம்பி போகாதே – நீ
போதையிலே பாதை மாறிப் போகாதே
கண்ட கண்ட போதையெல்லாம் உண்ணுகின்றாயே –உன்
கடைசி நாளை விரலை விட்டு எண்ணுகிறாயே
நல்லவங்க போதையைத்தான் தொட்டதுமில்ல –அத
தொட்டவன லேசிலதான் விட்டதுமில்ல
பையில் உள்ள பணத்தையெல்லாம் போதை குடிக்குது –உன்
பரம்பரயே பசியிலதான் நாளும் துடிக்குது
குடும்பத்தையே தெருவினிலே கொண்டு வருகிது- இது
குடித்தவன அருகினிலே மரணம் நெருங்குது
உடும்பப்போல போதையை நீ இறுகப்ப பிடிப்பதால்- உனை
அடிமையாக்கி ஊருலகில் பெருமை குறைக்கிது
வேலியெல்லாம் பயிரை மேயும் கேலியினாலே –நம்ம
வீடுகளில் கூட ஒரு சுதந்திரம் இல்லே
நீதிகெட்டுப் போன நாட்டில் நிம்மதியில்ல –நல்ல
சேதிகெட்டு நாளும் நாளும் காது உடையிது
போதையிலே பாதை மாறிப் போகாதே
கண்ட கண்ட போதையெல்லாம் உண்ணுகின்றாயே –உன்
கடைசி நாளை விரலை விட்டு எண்ணுகிறாயே
நல்லவங்க போதையைத்தான் தொட்டதுமில்ல –அத
தொட்டவன லேசிலதான் விட்டதுமில்ல
பையில் உள்ள பணத்தையெல்லாம் போதை குடிக்குது –உன்
பரம்பரயே பசியிலதான் நாளும் துடிக்குது
குடும்பத்தையே தெருவினிலே கொண்டு வருகிது- இது
குடித்தவன அருகினிலே மரணம் நெருங்குது
உடும்பப்போல போதையை நீ இறுகப்ப பிடிப்பதால்- உனை
அடிமையாக்கி ஊருலகில் பெருமை குறைக்கிது
வேலியெல்லாம் பயிரை மேயும் கேலியினாலே –நம்ம
வீடுகளில் கூட ஒரு சுதந்திரம் இல்லே
நீதிகெட்டுப் போன நாட்டில் நிம்மதியில்ல –நல்ல
சேதிகெட்டு நாளும் நாளும் காது உடையிது







