ADS 468x60

05 August 2010

வாழ்துச்சூடி...






















உன்னை கண்டு பிடித்ததால்
நானும் ஒரு கொலம்பஸ் உலகில்!
சோடிக்க உன்னை வார்த்தைகள் இல்லை
வாடிக்கையாக பேசிறேன்....
கைமணக்கும் மண்டுர் பலாப்பழமே!


நெய் மணக்கும் எருவில் வத்தாளைக் கிழங்கே!
களுதாவளை கொழுந்து வெத்தலையே!
மட்டுநகர் வாவி உன் அழகான மேனி;
வாகரை கொம்புத்தேனோ -உன்
வாய் இனிக்கும் வார்த்தை!


பட்டிப்பளை பசும்பாலோ –உன்
பால் வழியும் முகம்தானும்
பக்கம் வந்து நீ சிரித்தால்
பாடுமீன் ஓசை வரும்!
அலையடிக்கும் கிழக்குக் கரை- எனை
அலையவைக்கும் உன்கொலுசு.


தாலாட்டு வசந்தன் அம்மானை எல்லாம்
ஓன்றாக கேட்குதடி- நீ
உதிர்தும்; வார்த்தையிலே...
படுவான் கரை சூரியன்போல் - நீ
கொடுத்து சிவந்த கைகள்
படுபாவி எனை அனைத்து
பாராமல் போகுதடி..ம்ம்ம்ம்


நான் புவியரசாய் இருந்திருந்தால்
உனக்கு அரியாசனம் தந்திருப்பேன்
வெறும்
கவியரசனாய் இருந்ததால்
கவியாரம் மட்டும் சூட்டுகிறேன்.

27 May 2010

வெள்ளம் வருமுன் காப்போம்


காலநிலை மாற்றங்களுக்கிணங்க இலங்கையானது வெள்ளம்ரூபவ் புயல்ரூபவ் சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு இலகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளமையை  முன்னைய வருடங்களில் இருந்து தற்போது வரை கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளம் நீர்நிலைகள் ஒழுங்கான முறையில் வடிந்து செல்வது தடைப்படும்போது ஏற்ப்படுகின்றது. வெள்ளம் வடிந்தோடுகின்றரூபவ் மற்றும் தாழ்நிலைப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைப்பதன்மூலம் வெள்ளம் தடைப்பட்டு அதன் ஆபத்தினை அதிகரிக்கச் செய்கின்றது.

வெள்ளம் ஏற்ப்படுவற்க்கான காரணங்கள்.

  • வெள்ள அனர்த்த மட்டங்களை கருத்தெடுக்காமல் நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளல்.
  • அதிகரித்துவரும் சனத்தொகை காரணமாக நிலப்பகுதியின் அளவு குறைந்து வருகின்றமை இதனால் வெள்ளளம் வடிந்தோடுகின்ற இடங்களில் வருமானம் குறைந்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம்.
  •  வடிகால் அமைப்புகளை தூய்மை செய்வதில் காணப்படுகின்ற பொது மக்களின் அசண்டையீனமான போக்கு.
  • மண்ணை முறையற்ற முறையில் அகன்றெடுத்தல்.
  • நீர் வழிந்தோடி தேங்கி நிற்கும் இடங்களை நிரப்புதல் மற்றும் அவற்றின்மீது கட்டிடங்களை அமைத்தல்.
  • சாப்பிட முன்னும் பின்னும் கைகளை தூய்மையாக கழுவுதல் வேண்டும்.
  • நுளம்பு தொல்லையில் இருந்து பாதுகாப்பு பெற நுளம்பு வலைகளை பாவித்தல் வேண்டும்.
  • இவற்றின்போது வயிற்றோட்டம்ரூபவ் வாந்திபேதி என்பன ஏற்ப்பட வாய்ப்பிரிப்பதனால் தூய நீராகாரங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • மேற்கூறிய நோய்களுக்குரிய அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடி வைத்தியரை நாடி ஆலோசனை பெறுவது சாலச் சிறந்ததாகும்.
  • நித்திரை செல்லும்போது கால் மற்றும் கைகளை மூடும்படியாக துணிகளால் போர்த்தவேண்டும்.
  •  கமடைந்த நோயாளிகளை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
  •  தண்நீர் தேங்கி நிற்கும் இடங்களை இல்லாது செய்தல் வேண்டும் (தகரப் பேணிரூபவ் டயர்ரூபவ் சிறட்டை போன்றன)
வெள்ளத்தின் போது கடைப்பிடிக்க தேவையற்றவைகள்.
  • பாதுகாப்பற்ற வழிகளில் கிடைக்கும் நீராகாரங்களை அருந்துதல்.
  • சமைக்கப்படாத உணவினை உட்கொள்ளல்.
  • வெட்டி வைக்கப்பட்டிருக்கும் பழவகைகளை உட்கொள்ளல்.
  • வெள்ளத்தினால் வந்த நீரை தேங்கி நிற்க அனுமதித்தல்.


வெள்ளப்பாதுகாப் இடங்களில் குடியேற்றத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்க்கான வழிமுறைகள்.
  • வெள்ளம் வடிந்தோடுவதற்கென ஒதுக்கப்பட்ட வலயத்தினுள் குடியேற்றத்தினை சரியான முறையில் தடைசெய்தல்.
  •  சட்டமுறையற்ற குடியேற்றதிட்டங்களை தடுப்பதற்க்கான ஒழுங்குமுறையான அவதானிப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை எடுத்துவருதல்.
  • புதிய குடியேற்றத்திட்டங்களை தடைசெய்யப்பட்ட இடங்களில் ஊக்குவிப்பது மற்றும் உதவிபுரிவது நிறுத்தப்படவேண்டும்.
  • வெள்ளத்தினை வழிந்தோடச் செய்வதற்க்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்கள் குறிப்பாக சதுப்பு நிலங்கள் பாதுகாப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  • வெள்ளம் வழிந்தோடுகின்ற நிலங்களை அண்டியுள்ள பிரதேசங்களை மீள ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகளை வலுவாக தடைசெய்வதுடன் அவற்றின்மீது வலுவான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • சரியான நீர் வழிந்தோடக்கூடிய வடிகால்கள் அது வெளியேறும் வழிகள் என்பவற்றை நகரப்பகுதியினுள் திட்டமிட்டபடி அமைக்கப்பட உறுதிசெய்யப்பட வேண்டும்.
  • நீர் வழிந்தோடக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்திருத்தல் அறிவுறுத்தல் வேண்டும்.
  • குடிநீரினைப் பெறுகின்ற இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதனால் அதில் பெறும் நீரினைக் குடிப்பதினால் மாசடைந்த நீர் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் வரலாம்.
  • குறிப்பாக நீண்ட நாள் வெள்ளம் தங்கி நிற்ப்பதனால் சிறுவர்கள்ரூபவ் வயோதிபர்கள் மற்றும் அங்கவீனர்கள் தொற்றுக்காய்ச்சல்ரூபவ் குளிர் ஜீரம் என்பனவற்றினால் இலகுவில் பாதிப்படைகின்றனர்.
  • வெள்ளப் பாதிப்புக் காரணமாக மனநிலை பாதிப்படைதல்ரூபவ் தூக்கமின்மைரூபவ் இருக்கின்ற நோய்களின் அதிகரித்த தன்மை மற்றும் தற்கொலை சம்மந்தமான எண்ணங்களைத்தூண்டுதல் என்பனபோன்ற அபாயங்களை ஏற்படுத்துகின்றது.
  • இதற்கு மேலாக வெள்ளம் ஏற்ப்பட்டதின் பின்பு புதிதாகப் பிறந்த குழந்தைகள்ரூபவ் கற்பினித்தாய்மார்கள் பாதுகாக்கப்பட வேண்டிய சிரமமும் ஏற்ப்படுகின்றது.
வெள்ளத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.
  • தூய சுட்டாறிய நீரினை அருந்துதல் அதற்க்காக வீடுகளில் பாவனைக்கு பயன்படுத்தப்படும் நீரில் குளோரினை இட்டு பாவித்தல்.
  • எப்பொழுதும் குடிநீரை சிறிய மூடி கொண்டரூபவ் சுத்தமான கொள்கலன்களில் சேமித்து வைத்தல் வேண்டும்.
  • உணவினை மூடிவைத்து பாதுகாப்பதுடன் அவற்றை சூடாற முன் உண்ணுதல் வேண்டும்.
  • இயற்கையாக அமைந்திருக்கும் நீர் வழிந்தோடக்கூடிய வழிகளில் குடியேற்றத்திட்டங்களை அமைத்தல் தடைசெய்யப்பட வேண்டும்.
  • புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக நீர்நிலைகள்ரூபவ் நீர் வழிந்தோடும் இடங்கள் பாவிப்பது தடைசெய்யப்படுதல் வேண்டும்.
  • ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட வெள்ளம் வழிந்தோடும் இடங்கள் மீளவும் பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
வெள்ள அனர்த்தம் மூலம் ஏற்ப்படும் பொது ஆபத்துகள்.
  • வெள்ளத்தினால் பெரியளவிலான மண்ணரிப்பு உருவாகின்றதுரூபவ் அத்துடன் இது பாலங்கள்ரூபவ் கட்டிடங்கள் என்பனவற்றை சிதைவடையச் செய்கின்றது.
  • மனிதர்களால் கட்டப்பட்ட வீட்டின் சுவர்கள்ரூபவ் கதவுகள்ரூபவ் கூரைகள் அத்துடன் வீடுகள் என்பன சிறிய வெள்ளத்தினாலும் பாதிப்படைகின்றது.
  • விவசாய நிலங்களில் ஏற்ப்படுகின்ற வெள்ளத்தின்போது விவசாயப்ப் பயிர் செய்கைகள்ரூபவ் மிருக வளர்ப்புப் பண்ணைகள் அத்துடன் செல்லப்பிராணிகள் என்பன வெள்ளத்தின்போது மிகுந்த பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.
  • வேள்ளம் போக்குவரத்தினை சீர்குலைத்து விடுகின்றது இது அங்கு உடனடி உணவுத்தட்டுப்பாட்டினை உண்டுபண்ணுவதுடன் அதுவே மக்களை பட்டினிச் சாவுக்கும் இடடுச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்ப்பட்டு விடுகின்றது.
  • வெள்ள காலங்களில் அதன் வடிந்தோடும் தன்மையைப் பொறுத்து மக்களின் இடப் பெயர்வுகள பாரியளவில் ஏற்ப்பட்டு வருகின்றன.
  • இதன்போது மக்ககள் தற்காலிக வீடுகளிலும் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களிலும் குடியமர்த்தப்படும் போது தூய்மையான நீரைப் பெறுவது மற்றும் போதியளவு உணவினைப் பெறுவது மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுவதுடன் அங்கு ஏற்ப்படும் சுத்தமற்ற தன்மை உணவு மற்றும் குடி நீர் மூலம் வரும் நோய்களுக்கு ஏதுவாக அமைந்து காணப்படும்.
  • ஓவ்வொரு வருடமும் வரும் வெள்ள அனர்த்தத்துக்கென பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை வழங்க வேண்யெ நிர்ப்பந்தம்.
  • வேள்ளம் ஏற்ப்பட்டதன் பின்னர் பல்வேறு நோய்கள் உண்டாகுகின்றனரூபவ் குறிப்பாக கொலராரூபவ் தைப்பொயிட்ரூபவ் டையேரியா மற்றும் காய்சல் போன்ற இன்னோரன்ன நோய்களையும் உண்டுபண்ணுகின்றது.
வெள்ளம் மூலமாக ஏற்ப்படுகின்ற சுகாதாரக் கேடுகள்.
வெள்ளநீர் மூலம் குப்பை கூழங்கள் கொண்டு சேர்க்கப்படுவதுடன் நஞ்சு கலந்த மாசுறுதலும் அதன்போது ஏற்படுகின்றது இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்ப்படுத்துகின்றது.

03 May 2010

மன இறுக்கத்தை தளர்த்த எழிய வழிமுறை


தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் ( Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டுசெல்லவேண்டுமாஎனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.


 *4. ஓய்வெடுங்கள்.* 
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.



 *5. சிரியுங்கள்*  
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும். 


*7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள் 
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள். 


*8. தெளிவாகச் செய்யுங்கள் 
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.



 *9. விளையாடுங்கள்  

01 May 2010

உதயமே உனக்கொரு சலூட்.....


கிழக்கில் உதயம் தானடா
கிழித்து பாயும் படகடா
வழியவிடு ஓடுகின்ற ஆறு- போட்டி
வந்துவிட்டால் ஒன்றல்ல நூறு..

சேவையில மக்களுக்கு அஞ்சாத சிங்கம்- இது
ஜெயித்ததெல்லாம் போட்டியில் மங்காத தங்கம்
ஆதியில தோன்றியதும் எங்கள் உதயம் தானடா
பாதியில போகாத பலமும் உண்டு கேளடா
தேத்தாத்தீவு மண்ணுக்குள்ள வீரமுண்டு பாரடா- இத
தேசமெல்லாம் கொடிநாட்டும் படையணியின் ஊரடா
முன்னேற போகச் சொல்லி வெளிசசம்போட்ட விளக்கடா-நாம
முடித்ததெல்லாம் வெற்றியெண்டு முழக்கமிட்டு சொல்லடா

சூறாவளி போல நீயும் செல்லவேண்டும் முன்னடா
சுற்றிருக்கும் பகைகளெல்லாம் மெல்ல ஓடும் பின்னடா
உதயம் உதயம் என்று சொல்லி உரத்து சொல்லிப்பாரடா
வயிற்றில் இருக்கும் மழழைகூட வந்துசேரும் உன்னுடன்
மட்டக்களப்பு மண்ணுக்குள்ள ஆலவிருட்சம் நீயடா
கெட்டபேரு வாங்காத திட்டம்போடும் கழகண்டா
கையில் எடு உறுதிமொழி சேவை சேவை என்று
காக்கவேண்டும் ஊரைநாம களத்தினிலே நின்று.

நாளை நடைபெற இருக்கும் புதுவருட விளையாட்டை முன்னிட்டு இந்த வாழ்துபாவை சமர்ப்பிக்கிறேன்......

29 April 2010

இன்சொல் மட்டுமே பேசுங்கள்


இன்சொல் மட்டுமே பேசுங்கள்
எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.
திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.
திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.
கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.
திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.
இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான
துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.
கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

26 April 2010

விவசாய நாடுகள் விற்கப்படும் அபாயம்....

விவசாய நாடுகள் விற்கப்படுவது ஒன்றும் புதிதானதல்ல, இருந்தும் கண்ணுக்கு தெரியாத பகல் கொள்ளை எம்மை போல ஏழைநாடுகளை குறிவைத்து நடத்துவதை புத்திஜீவிகள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வருத்தம் தருகிறது. அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயம் அவுட் சோர்ஸ் செய்யப்படுவதால் ஏழை நாடுகள் மிகப் பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

24 April 2010

மீன் பாடும் தேன் நாடு

நீர் ஓடும் நாட்டில்
மீன் பாடக் கேட்டு
நெல் ஆடும் பூமியிது
சில்லென்று தென்றல் வீசி எமை
உல்லாசம் கொஞ்சிம் தங்க நிலம்
ஊரெல்லாம் பால் பொங்கும்
ஏரோடும் வளம் எங்கும்
;


கிழக்கில் கதிர்கள் மேலே கண்டு
உழைக்கும் மக்கள் ஆயிரம்
பசுமை கொஞசும் வயல்கள் கோடி
படுவான் கரையும் சொர்க்கமே
வீரம் மனதில் ஈரம்
கலைகளில் தேன் அமுது ஊறுமிடம்
தமிழில் இனிய சுவைகள் வந்து
அமிழ்தாய் காதில் பாயும் நாடு
இதுதான் இதுதான் இயற்கையின் வீடு



வளைந்து நெழிந்து ஓடும் வாவி
மட்டக்களப்பின் கோலங்கள்
நாட்டுக் கூத்து பாட்டுக் கேட்டு
நாகரீகம் வளர்ந்த நிலம்
விபுலா நந்தர் போலே
மண்டுர் புலவர்மணியும் வாழ்ந்த இடம்
வந்தோர் எல்லாம் வாழவைக்கும்
செந்தேன் சிந்தும் சொர்க்காபுரி
இதுதான் இதுதான் தமிழரின் நாடு.

22 April 2010

தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்யவேண்டும்


மதமும் இலக்கணமும்
உதாரணமாக மக்கள், தேவர், நரகர், உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?
இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே அதிகமாகயிருக்கின்றது?
மேல் நாட்டு இலக்கியம்
மேல்நாட்டுப் புலவர்கள், மேல் நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.
மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ் நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை. மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.
கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.
மலத்தில் அரிசி பொறுக்கலாமா? கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ் வளவு இழிவாகக்குறிப்பிடப்பட்டிருக் கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது. சுயமரியாதையை விரும்பு கிறவன் எப்படி கம்பராமாயண இலக்கி யத்தைப் படிப்பான்? இன்று கம்பராமா யணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
கடவுளால் மொழி உயராது தமிழ் மொழியின் பெருமை பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்டபாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கினதாலும், தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.
பரமசிவனுக்குகந்த மொழி தமிழ் என்றால் வைணவனும் முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக்காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்திப் புரட்டு
இன்று தமிழ் நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்தியப்பாஷை ஆகவேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்றுவருகிறார்கள். கோர்ட்பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தியமயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.
தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பாலோர்க்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
செத்த பாம்பு
பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள், ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும், உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.
தமிழாபிமானம் தேசத்துரோகம்!

தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றொல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் கூட்டத்துக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள். தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ் மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சவுகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்? மாறுதல் அவசியம்
மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன; எழுத்துகளில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துகளை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துகள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துகளையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்றமாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவராவது அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்லர். இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்செய்வது? என்னைக் குறைகூறவோ, திருத்தவோ, முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை. ஆனாலும் நான் அம்முறையிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.
இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.
எங்கும் திருநாள்
எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது, அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.
தீபாவளி போன்ற மூட நம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த்திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியும், மாரிப் பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்யவேண்டுகிறேன்.
தந்தை பெரியார் - " விடுதலை" 1-5-1949