ADS 468x60

13 November 2010

தேசிய விவாசாயக் கொள்கைகளும் இலங்கையும்...

இலங்கைப் பொருளாதாரத்தில் விவசாயமானது மூலைக்கல்லாக விளங்குகின்றது. கிராமப்புறங்களில் வசிக்கும் 70% இற்கும் மேலான மக்கள் அவர்களின் வாழ்வாதாரமாக விவசாயத்திலேயே தங்கியுள்ளனர். இந்த விவசாயமானது மொத்த உள் நாட்டு உற்பத்திக்கு 18%ஆலும் வேலை வாய்ப்புக்களிற்து 30% ஆலும் பங்களிப்புச்செய்கின்றது. விவசாய உற்பத்தித்திறன் ஆனது ஏறத்தாழ நிலையாக இருந்துள்ளது. விதிவிலக்காக அரிசி அண்மைய ஆண்டுகளில் தன்னிறைவுத்தன்மையை அடைந்துள்ளது.
ஆயினும் இப்பிரிவின் வளர்ச்சி மந்த கதியிலேயே உள்ளது. 90%மான ஏழை மக்கள் கிராமப்புற விவசாய பொருளாதாத்திலேயே வாழ்க்கை நடத்துவதனால் இலங்கையின் வறுமை நிலையைக்குறைக்க வேண்டுமாயின் துரிதமான விவசாய உற்பத்தி வளர்ச்சியை எட்டுதல் வேண்டும். ஆகையால் சுற்றாடல், நீர் வளம், உயிர்ப்பல்வகைமை என்பவற்றைப் பாதுகாக்கும் அதே வேளை துரித உணவு உற்பத்தி அபிவிருத்திக்கு , அபிவிருத்திக் கட்டங்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும்.  விவசாயத்தின் வளர்ச்சியை முடக்கும் தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் முட்டுக்கட்டைகளை அகற்றுவதையும் இது உள்ளடக்குகின்றது.
துண்டாக்கப்பட்ட காணிகளின் பாவனை, நீர்ப் பற்றாக்குறை, கடன் வசதி, விதை, தொழில்நுட்பத் தெரிவு நிலை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், கொண்டு செல்லுகை, ஏழ்மையான விவசாயச்செயன்முறைகள் ஆகியன விவசாயத்தின் பலவீனப்படுத்தப்பட்ட உற்பத்திக்குப் பங்களிப்புச் செய்கின்றன. கிராம அபிவிருத்திக்காக, குறுகிய மற்றும் நடுத்தர காலச் சலுகைகளான விவசாயிகளின் சந்தைகளை பெரிதாக்குவதை வசதிப்படுத்தும் கொள்கைகளைப்பின்பற்றல், விருத்தி செய்யப்பட்ட தொழில் நுட்பங்கள், தேவையான பாதுகாப்புடன் உறுதியான வர்த்தகக் கொள்கைகளை உருவாக்குதல், பிரதேச வாரியான சமமான உட்கட்டமைப்பு வசதியை உருவாக்குதல்.
இலங்கையின் விவசாயக்கொள்கை
குறிக்கோள்களும் நோக்கங்களும்
  • நாட்டின் உணவு மற்றும் போசணைப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்காக உள்நாட்டு விவசாய உற்பத்தியை அதிகரித்தல்.
  • விவசாய உற்பத்தியை செழுமைப்படுத்தும் உறுதியான வளர்ச்சியை உத்தரவாதமளித்தல்.
  • உள் நாட்டு மற்றும் ஏற்றுமதி விவசாயத்தில் உலகமயமாதலின் தீமையான விளைவுகளைக்குறைத்தல் மற்றும் நன்மைகளை அதிகப்படுத்தல்.
  • உற்பத்திச் செலவைக்குறைப்பதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்குமாக வினைத்திறன் மிக்க விவசாய முறைகளைப்பின்பற்றுதலும் விருத்தி செய்யப்பட்ட விவசாயத் தொழில் நுட்பத்தைக் கையாளலும்.
  • சுகாதாரத்திற்கு தீங்கற்ர , சுற்றாடல் சினேக பூர்வமான தொழில் நுட்பங்களை விவசாயத்தில் பின்பற்றுதல்.
  • விவசாயம் சார்பான கைத்தொழில்களை மேம்படுத்துவதுடன் வேலை வாய்ப்புக்களையும் அதிகரித்தல்.
  • விவசாய சமுதாயத்தின் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலை என்பவற்றை உயர்த்துதல்.
விவசாய உற்பத்தியை மேம்படுத்தல்.
சரியான மற்றும் பாதுகாப்பான முறையில் வளங்களைப்பயன்படுத்தக்கூடிய தொடர்ச்சியான விவசாய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக தொழில் நுட்பப்பாரமுள்ள, பொருளாதார ரீதியில் சாத்தியமான சுற்றாடல் சினேக பூர்வமான, சமூக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களை அமுல் படுத்துவதன் மூலம் அரசாங்கமானது விவசாய உற்பத்தியை மேம்படுத்துகின்றது. இக் கொள்கையின் பிரதான அம்சங்களாவன,
  • அரிசி மற்றும் ஏனைய பயிர்கள், தோட்ட மற்றும் பூந் தோட்டப்பயிர்கள், வேர் மற்றும் கிழங்குப்பயிர்கள், விவசாய ஏற்றுமதிப்பயிர்கள், மூலிகைகள், வேறு உபயோகப்படுத்துகின்ற பயிர்கள், அதே போல் உப உணவுப்பயிர்களான கரும்பு, மரமுந்திரிகை, தேங்காய் என்பவற்றைப் பயிரிடுதலில் முக்கியத்துவத்தைக் கொடுப்பதன் மூலம் உள் நாட்டு உணவு வினியோகம், வேலை வாய்ப்பு மற்றும் விவசாய ஏற்றுமதி என்பவற்றை அதிகரித்தல்.
  • நிலைத்து நிற்கக்கூடிய விவசாய முறைகளின் ஊடாக பயிர் உற்பத்தியை மேம்படுத்துவன் மூலம் நீர் மற்றும் நிலங்களின் வினைத்திறனை அதிகரித்தல்.
  • உறுதியான, நிலையான விவசாய அபிவிருத்திக்காக ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், ஒருங்கிணைந்த தாவரப்போசாக்கு முகாமைத்துவம் போன்ற சிறந்த விவசாய செயன்முறைகளை மேம்படுத்தல்.
  • வாழ்வாதாரம் மற்றும் மீன் வளர்ப்பு என்பவற்றின் ஊடாக ஒருங்கிணைந்த விவசாயத்தில் இருந்து வருமான உற்பத்தியை மேம்படுத்தல்.
  • சந்தைததெவைகளையும் , போசணைத்தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய உற்பத்தித் திட்டங்களை வடிவமைத்தல்.
  • காலநிலைக்கு இசைவாக்கமான பயிர்களைப்பயிரிடுதலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை மேம்படுத்தலும்.
  • எங்கேயும் எப்போதும் பொருத்தமான நவீன மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களைக் கிராமங்களிற்கு அறிமுகம் செய்தல்

0 comments:

Post a Comment