ADS 468x60

13 November 2010

இலங்கையில் சுனாமி அனர்த்தமும், ஜீபனோபாய அபிவிருத்தித்திட்டமும்


கிட்டத்தட்ட275000 தொழிலாளர்களைக் கொண்ட 60,000 நுண் வியாபார நிலையங்கள் சுனாமி அனர்த்தத்தினால் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக பல ஸ்தாபனங்கள் முன்வந்ன. அவர்களின் சில நடவடிக்கைகள் கீழ்க்காணும் பிரிவுகளாக வகுக்கமுடியும்.
  • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி பண உதவிகள்
  • வேலைக்காக பணம் – நிகழ்ச்சித்திட்டங்கள்
  • பொருளாதார செயற்பாடுகளை மறுசீரமைத்தல்
TAFREN சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஜீவனோபாயத்தை பாதுகாத்தலுக்கும் மீளமைத்தலுக்கும் உதவுவதற்கான இணைப்பு மற்றும் முகாமைத்துவக்கொள்கை வடிவம்
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி பண உதவிகள்
சுனாமிக்குப் பின்னரான ஜீவனோபாய அபிவிருத்திகளில், சம்பாதிக்கும் திறனை இழந்த மற்றும் சம்பாதிக்கும் குடும்பத்தலைவனை இழந்து பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவே முதன்மையான கருவியாகக் கருதப்படுகிறது ஆதலினால்,  இதுவே உடனடி நிவாரணக் கருவியாக நடைமுறைப்படுத்துகின்றது. ஆயினும், உடனடி உதவியாக வழங்கப்படும் உணவு, உடை, மருந்து, புகலிடம் போன்றவற்றிலிருந்து இது தெளிவாக வேறுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே பிறரில் தங்கியிருக்கும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கான பொருளாதார செய்யற்பாடுகளை மீளமைப்பதனை நோக்கமாகக் கொண்டிருப்பது முக்கியமானதாகும்.
வேலைக்காக பணம் – நிகழ்ச்சித்திட்டங்கள்
பாதிக்கப்பட்ட சமூகங்களில் மக்களும், சமூகங்களும் இணைந்து பங்களிப்புடன் செயற்பட்டு உடனடி வருமானம் ஈட்டும் கட்டமைப்பாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே பணிபுரியும் மக்களின் ஜீவனோபாயங்களை மேம்படுத்த உதவுகின்றது. ஆயினும், தொழிலாளர்களாக மட்டும் அம்மக்களைக் கட்டுப்படுத்தப்படுவது வேலைக்காகப் பணம் என்ற நிகழ்ச்சித்திட்டங்கள் இருப்பதனால் பல்வேறு தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கமுடியாமை சமூகப்பணிகளில் சமூக உடைமைகளை இழப்பது போன்ற பலவீனங்கள் இங்கே காணப்படுவதால் இந்த நடைமுறையும் ஒரு தற்காலிகமானதே.
பொருளாதார செயற்பாடுகளை மறுசீரமைத்தல்
அனர்த்தங்களுக்குப் பின்னரான ஜீவனோபாய அபிவிருத்தி நடவடிக்கைகளில் இது மிகவும் பொருத்தமான அணுகுமுறையாகக் கருதப்பட்டுள்ளது. ஆயினும் அனர்த்தங்களுக்குப் பின்னரான சந்தர்ப்பங்களில் மனவிரக்தியுடன் தரங்குறைந்த சுற்றாடல் நிலைமைகளில் சமூகங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதால் அங்கே நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள், சாதாரண நிலைமைகளில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலிருந்து வேறுபடுகின்றன. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவோர் வியாபார அபிவிருத்தி எண்ணக்கருத்துக்களைக் கொண்ட அடிப்படைத்தரத்தினை மீறுவதற்கு இது காரணமாக அமையக்கூடாது என்பதை மனதில் கொண்டிருக்கவேண்டும்.
 நடைமுறைப்படுத்திய நிறுவனங்களின் முன்னெடுப்புக்கள் :-
  • மொத்தம் 234,000 – ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் மாதாந்தம் தலா ரூபா 5000/=  ஒதுக்கீடு.
  • வாரமொன்றிற்கு ரூபா 375/= (பணம் – ரூபா 200/=, உணவு ரூபா 175/= 81000 மக்களுக்கு)
  • நுண், சிறிய, இடைநிலை கைத்தொழிலுக்கு ரூபா 5  மில்லியன் கடன் உதவித்திட்டம்.
  • 2450 விண்ணப்பதாரிகளுக்கு மொத்தம் ரூபா 1010  மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
  • தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்துடன் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக நுண்கைத்தொழிலுக்கு ரூபா 700 மில்லியன் கடன் உதவித்திட்டம்.
நடைமுறையில் இருந்த மறுசீரமைப்பு செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பிரச்சனைகள்
  • அனர்த்தத்தடுப்புடனான நீடித்து நிலைத்து நிற்கும் ஜீவனோபாய அணுகுமுறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.
  • ஜீவனோயாய நடவடிக்கைகளில் மேலே கூறப்பட்ட மூன்று கருவிகளையும் பிரயோகிப்பது தொடர்பான தெளிவற்ற தன்மையும், வேறுபட்ட கால அட்டவணையும்.
  • அறிவுப்பரிமாற்றங்களில் குறைந்த கவனமும் பௌதீக சொத்து அன்பளிப்புக்களில் நாட்டமும்.
  • பெறுமதிமிக்க அபிவிருத்தி வட்டத்தில் குறைந்த கவனமும் சுற்றாடலில் காணப்படும் விடயங்களில் மிகுந்த நாட்டமும்.
  • ஊனமுற்றோர், பால்நிலை உணர்வுகள், பிணக்குகள், உணர்வுகள் முதலியனவற்றை உண்டாக்குவதில் குறைந்த ஆர்வம்.
  • ஒரே தரத்தில் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்கின்ற வளர்வாளர்களின் நம்பிக்கை.
  • தொழில்நுட்ப அனுபவம் அற்றிருத்தல்.
  • சமூகங்களுக்கிடையே தொழில்நுட்ப அபிவிருத்தி நடைமுறைகளிலுள்ள அனுபவக் குறைவு.

0 comments:

Post a Comment