இற்றைக்கு முப்பது வருடத்துக்கு முன்பு இந்த மட்டு நகரம் இப்படியாகத்தான் கலையில் களைகட்டி இருந்தது. அதன் பிறகு காற்று மட்டும் போய்வருகின்ற வேற்று வாசிகளின் இடம்போல் ஆகிவிட்டது. இருந்தும் இன்று மெது மெதுவாக பசுமை பூண வைக்கும் நடவடிக்கையை செய்யவேண்டிய பொறுப்பு எம்மையும் சார்ந்து நிற்க்கின்றதல்லவா!. மட்டு மாநிலத்தின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் தீபாவளித் திருநாள் பாரம்பரியத்தினை நிலைநாட்டும் கலை நிகழ்வுகளோடு தேத்தாத்தீவு திருவூரில் இனிதே நடந்தேறியது.