30 August 2016
தோழில் சாய நீ இருந்தால் போதுமே!
29 August 2016
உலகில் தமிழ் அழியக்கூடிய சாத்தியம் விழித்தெழுவோம்!
28 August 2016
கல்வியியல் கல்லூரிகளின் மாற்றத்தின் தேவைப்பாடு!!
கௌரவ ரணில் விக்ரமசிங்க கல்வி மந்திரியாக இருந்தபோது பாடசாலைகளில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் தேவையை உணர்ந்த அவர் கல்வியியல் கல்லூரிகளை நிறுவி அதை அமுல்படுத்தி வைத்தார். தற்போது இலங்கையில் மொத்தம் 19 கல்வியியல் கல்லூரிகள் நிறுவப்பட்டு 4000 ஆசிாியா்கள் அதன் மூலம் வெளியேற்றப்படுகின்றமை ஒரு சிறப்பாகும். இந்த கல்வியியல் கல்லூரிகள் மூலம் நல்ல திறமையுள்ள பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பிரகாசமான எதிர்காலத்தினை மாணவர்கழூடாக தோற்றுவிப்பதனையே இது இலக்காக கொண்டிருந்தது. இந்த கல்லூரிகளுக்கு உ.த சித்தி பெற்ற மாணவர்கள் தெரிவாகி சுமார் மூன்று வருடங்கள் உள்ளேயும் வெளியேயும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இவர்கள் பல பாடத் துறைகளில் ஆசிரியர்களாக வெளியேற்றப்படுகின்றனர் முறையே கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சுகாதாரம், தொழில் நுட்பம், சமயப்பாடங்கள், விவசாயம், நடனம், மொழி போன்றவற்றை குறிப்பிடலாம்.
27 August 2016
25 August 2016
நம்ம பா.ம.உறுப்பினர்கள் எங்கே!!
"காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்"
கௌரவ பா.உறுப்பினர் திருமதி சாந்தினியை முந்தநாள் பாராளமன்றத்திற்கு ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்த போது மீண்டும் இரு வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது மகிழ்சி.இவர் போன்ற அனுபவமும் விடய அறிவும் படித்தவர்களும் பா.ம செல்வதை நான் மிகவும் வரவேற்கிறேன். இவர் அன்பானவர் அதேபோல் நுனி நாக்கில் புள்ளிவிவரங்களை வைத்து தொனி உயர்த்தி பேசும் பல்மொழி ஆற்றல் கொண்ட ஒரு திறமைசாலி. அவரை மீண்டும் கண்டு பேசியதில் மகிழ்சி. இவ்வாறானவ்களைத்தான் கௌரவ என அழைக்க தோணுகிறது.
24 August 2016
மட்டக்களப்பில் சுகாதாரமும் இடை குறைந்த பிள்ளைகளின் அதிகரிப்பும்.
மட்டக்களப்பின் சுகாதாரமும் இடை குறைந்த பிள்ளைகளின் அதிகரிப்பும்.
21 August 2016
16 August 2016
எடுத்துக்காட்டான ஒரு நிகழ்வு.
"சுயநலமே ஒழுக்க கேடு, சுயநலமின்மையே நல்லொழுக்கம் இதுவே நாம் ஒழுக்கத்துக்கு தரும் ஒரே இலக்கணம்" சுவாமி விகானந்தர் சொல்லி இருப்பதற்கு இணங்க பொதுநலத்தை கருத்தில்கொண்டு வருடா வருடம் நடைபெறும் அமரா் த.பாக்கியராசா அவர்களின் ஞாபகார்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று 14.08.2016 அடியேனும் கலந்துகொண்டிருந்தேன். உங்களுக்கு மனமுவந்த நன்றிகள். அது மிகவும் பிரயோசனமாகவும் எடுத்து காட்டானதாகவும் முன்னோடியானதாகவும் இருந்தது.
என்னைப் பொறுத்த அளவில் இரு நோக்கங்களை இந்த நிகழ்வு தன்னகத்தே கொண்டிருந்தது, ஒன்று எமது கல்வியை வருடாவருடம் எமது ஊர்மக்களை வைத்து அளவிடுவது, அடுத்தது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை தட்டிக்கொடுப்பது என்கின்ற மிகப் பெரிய இரு இலக்குகளை கொண்டு நடத்தப்படுவது இந்த நிகழ்வுக்கு சிறப்பு.
09 August 2016
பெருகும் இளைஞா்கள் வேலையின்மை
நம்ம நாட்டில வருடா வருடம் உ/த படிக்கிறவங்களில் பல்கலைக்கழகத்துக்கு தகுதியானவர்கள் என சுமார் 1,50,000 தெரிவாகுவர். பின் கிட்டத்தட்ட 25,000 பேர் அதில் தெரிவாகி அரச ப.க.கழகங்களில் கல்வியினை தொடா்வாா்கள். மிகுதியானவர்களில் 70,000 பேர் தொழில் பயிற்சி கல்லூரிகள் மற்றும் திறந்த ப.க.கழகங்கள், தனியாா் ப.க.கழகங்கள் போன்றவற்றில் வெளிவாரி பட்டம் என சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட ஒரு 5,000 பேர் வெளிநாடுகளில் திறனற்ற தொழிலாளிகளாக இணைந்து கொள்ளுவர். ,இப்படியாகபோக மிகுதி 50,000 போ் (43%) வருடாவரும் வருகின்ற படித்த இளம் இரத்தம் கொண்ட, கல்வியினை தொடர முடியாத, கிராமப்புற இளையோரின் நிலையை யோசித்து பார்த்தால் கிா்என தலை சுற்றுகிறது.
08 August 2016
இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைப்பு
இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைத்தமை மிக்க நல்லதொரு முனைப்பு. குறிப்பாக கிராமப்புறங்களில், இன்று எமது மாவட்டத்தில் கல்வியின் வளர்ச்சி கணிசமான அளவு முன்னேற்றம் காணவில்லை என்றே குறிப்பிடவேண்டும்.
அன்று சமய வளர்சியுடன் ஒன்றித்த வகையில்தான் கல்வி முன்னேற்றம் கண்டு வந்தது. அது இன்று நகர அளவில் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது வெளிப்படை. இந்த நிலைமையினை மாற்றும் முனைப்பில் இந்தச் சபையினர் கிராமப்புற மாணவர்களை ஒன்று சேர்ந்து ஆலயத்துக்கு வந்து கூட்டு வளிபாடுகளில் ஈடுபட வைத்து, பல நடைமுறை ஒழுக்க, வழிபாட்டு முறைகளை தெழிவுறுத்தி மற்றும் கல்வியுடன் தொடபுபடுத்தும் ஒரு தந்திரோபாயத்தினை செய்து, மறைமுகமாகவும் நேரடியாகவும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், கல்வியையும் மற்றும் சமயத்தினையும் செழித்தோங்கச் செய்யும் இத்தகைய கைங்கரியத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதை இட்டு மகிழ்சியடைகிறேன்.
பட்டிப்பளைப் போடியார்களுடன்!
இன்னும் மதிப்பளிக்க வேண்டிய போடியார்கள்
உண்ண உணவளித்த உத்தமர்கள்
வேட்டி கட்டி வேலை செய்பவர்கள்
வரம்பு வெட்டி வயலை வளர்ப்பவர்கள்
நான் பெருமைப் படுவதெல்லாம்
இந்த உழைப்பாளிகளின் உருத்தென்பதால்
நான் சிறுமைப் படுவதெல்லாம்
இவர்களை ஒதுக்கிவைக்கும் கருத்தென்பதால்
எப்பொழுதும் நானும் உங்களில் ஒருவனே!
வேட்டி கட்டி வேலை செய்பவர்கள்
வரம்பு வெட்டி வயலை வளர்ப்பவர்கள்
நான் பெருமைப் படுவதெல்லாம்
இந்த உழைப்பாளிகளின் உருத்தென்பதால்
நான் சிறுமைப் படுவதெல்லாம்
இவர்களை ஒதுக்கிவைக்கும் கருத்தென்பதால்
எப்பொழுதும் நானும் உங்களில் ஒருவனே!
அரசியல்வாதிகளை பார்து பார்த்து சலித்து போகிறது, வெறுப்பாகிறது.
அரசியல்வாதிகளை படம் எடுக்க என்றே பின்னால் திரிந்து அவர்கள் மாலை அணிவதையும், வரவேற்க்கப்படுவதையும் படமாகப் போடுவதை பார்து பார்த்து சலித்து போகிறது, வெறுப்பாகிறது.
இதை ஒரு ஆரோக்கியமான செய்தி அல்லது தகவல் என நாம் நினைக்கவில்லை. மாறாக என்ன திட்டங்களை வறுமை ஒளிப்பதற்கு, வேலைவாய்பினை அதிகரிக்க, திறன் அபிவிருத்தியினை ஏற்படுத்த, கல்வியில் அடைவு மட்டத்தினை அதிகரிக்க, விவசாயம் மற்றும் ஏனைய தொழில் விருத்தியினை ஏற்படுத்த செய்கிறார்கள் என்கின்ற ஆக்கபூர்வமான செய்தியை படிக்க கேட்க ஆவலாக இருக்கின்றோம்.
மாவட்ட, தொகுதி ரீதியான மனிதவள, பொருளாதார, இயற்கைவள பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்த்திரத்தன்னை போன்றவற்றை கட்டியெழுப்புவதற்கான மாநாடுகளை நடாத்தி அதில் இருந்து ஆய்வு பேப்பர்களை உருவாக்கி அதன் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தி வெற்றி காண விளையவேண்டும். சும்மா சும்மா நிகழ்சி பார்வையாளர்களாக கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்கும் அரசவியல்வாதிகளின் முகத்தை காண யாரும் விரும்பவில்லை அதிகாரிகளையும் சேர்த்து.
பூவே!
கோபமும் உனக்கு அழகு
ஓற்றை நாளுக்குள்
ஓராயிரம் சந்தோசம்
ஓராயிரம் பரவசம்
ஓராயிரம் வாசைன
ஓராயிரம் புன்னகை
உன்னால் மட்டுமே
ஒண்ணுகிறது
இதை மனிதன் கூட
ஏண்ணுவதில்லை
ஓற்றை நாளுக்குள்
ஓராயிரம் சந்தோசம்
ஓராயிரம் பரவசம்
ஓராயிரம் வாசைன
ஓராயிரம் புன்னகை
உன்னால் மட்டுமே
ஒண்ணுகிறது
இதை மனிதன் கூட
ஏண்ணுவதில்லை
நிஸப்தத்தின் மடியில்!
பல நேரங்களில் இந்த முழு நிலாக்கால பயணம் மறக்கமுடியாத நிஸப்தத்தின் பதிவுகளாக மனதில் இடம் பிடித்து விடுகின்றது இடைவெளிகளுடன்.
தூரங்கள் பனியின் ஈரக்கசிவுகளுக்குள் காணாமல் போனாலும், உறங்கும் ஊர், உறங்காத தென்றல், பாடுகின்ற பறவைகள் பாடாத வானொலி, ஓடும் நதி ஓடாத நிலவு இவற்றுடன் பெறுமதிக்க முடியாத பொழுதுகளாய் பதிந்தன நேற்றய தாந்தாமலைப் யணம்.
எல்லா மனிதரும் யாராவது ஊக்கப்படுத்தவேணும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.
எல்லா மனிதரும் யாராவது ஊக்கப்படுத்தவேணும், தட்டிக்கொடுக்கவேணும் என்று காத்துக்கிடக்கிறார்கள். அந்தப் பொறி எங்க இருந்து கிளம்புது என்பதை பலர் தமது ஈகோவால் அறிய மறுத்து விடுகின்றனர். நான் வழமைபோல கள விஜயம் போனேன், 1)ஒரு மக்கள் சந்திப்பு அவர்கள் தந்த குளிர்பானம் அருந்திவிட்டு அவர்களது சுகதுக்கங்களை கேட்டு அவர்களோடு உரையாடி வந்தேன், 2). இன்னும் ஒரு பாலர் பாடசாலைக்கு வரச் சொல்லி அங்கு போனேன் அவர்களுடன் பாடினேன் அவர்கள் ஊட்டிய கடலையை உண்டேன் ஆசிரியர்களை பாராட்டினேன், 3). இன்னும் ஒரு குடும்பம் பல இழப்புகளை சந்தித்த குடும்பம் உரையாடினேன் நாங்கள் கொண்டுபோன உணவுகளை பகிர்ந்து உண்டோம்.
இவர்கள் எல்லாம் யாராவது ஒருவர் உற்சாகச் சூழலை ஏற்ப்படுத்த மாட்டாரா என தாமரை மலர்கள் சூரியனது வருகையை மலர்வதற்க்காக பார்த்திருப்பதுபோல் காத்துக் கிடக்கின்றனர்.அதிலும் பாதிப்புக்குள்ளாகி நலிவுற்றுள்ள எம்மக்கள்.
ஆக இவர்கள் எல்லாம் நம்மைப் போன்றவர்கள் வந்து இவர்களோடு கதைப்பார்களா! என்று எதிர்பார்க்காதவர்கள். இதைத்தான் பல பொதுஜன அதிகாரிகள் மற்றும் சில படித்து பெரும் பதவியில் இருப்போரும், உழைத்து உச்சத்தில் இருப்போரும் செய்துவருகிறார்கள், ............இது என்னங்க நியாயம்!!!.
உங்கள மாதிரித்தானேங்க இவங்களும் தட்டிக்கொடுப்பு, உற்சாகத்தை எதிர்பார்ப்பாங்க!! றைபண்ணிப் பாருங்க நம்மளுக்கும் அவங்களுக்கும் நெறய சந்தோசம் கிடைக்குமுங்க! சில அரசியல்வாதிகளும் அந்தப் பரிபாரங்களும் இப்படித்தான் பல நேரங்களில! ................கிராமத்துப்பக்கம் அந்த வாக்குகள பெற மட்டும் போவாங்க! அப்புறம் மக்கள்தான் அவங்கட்டபோய் காத்துக்கிடக்கணும். மக்கள் பாவமுங்க அவங்களுடன் ஒன்றிணைந்து அவர்களை உற்சாகப்படுத்தலாமே!
// 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்'//
உண்மையைத் தேடி!!
இதயமும், மூளையும் சரியான விகிதத்தில் இயங்கப்பெற்ற சரியான வார்ப்புக்களாக நாங்கள் இருக்கவேண்டும். நமது பிரதேச மக்களின் வறிய, பின்தங்கிய நிலை குறித்து நம்மில் ஒவ்வொருவருக்கும் அக்கறையும் கவலையும், பல நேரங்களில் கொளுந்து விட்டு எரிந்து அவை அந்த பின்னடைவுகளை குறிவைத்து நகரவேண்டும். எமது கல்வி, அனுபவம், தொடர்பாடல்கள் என்பனவற்றை முற்றாக இந்த மக்களை முன்னேற்ற பயன்படவேண்டும் என்பதில் அதிக அக்கறை உடையவா்களாய் இருப்போம்.
அதனாலே சிலர் குறைகளையாவது வெளிச்சம்போட்டுக்காட்டஇந்த சிறு ஊடகத்தை பயன்படுத்துகிறேன். எமது மக்களுக்கு இன்று தேவையான முதல் விடயம் மனமாற்றம், தைரியம், வழிகாட்டல், தொழில்பயிற்சி, அன்பு அரவணைப்பு போன்ற எல்லோராலும் கொடுக்கக்கூடிய விடயமே. அதை என் அறிவுக்கு எட்டியவரை எடுத்துணர்த்தி வருகிறேன்.
ஒரு கிராமத்துக்கு சென்று திரும்பினேன். அதில் மனதை உருக்கிய ஒரு சம்பவம். ஒரு வயது போன அம்மாவை எனது நண்பர் ஒருவர் காட்டி அழைத்துச் சென்றார், அவர் நடக்க ஒரு காலை இழந்தும், பிடிக்க ஒரு கையை இழந்தும், கடிக்க உள்ள பற்களை இழந்தும் யானையின் துவம்சத்துக்கு ஆளாகி நடைப்பிணமாய் இருந்தவரைப் பார்த்தேன்.
'என்னால் எல்லோருக்கும் தொல்லை மகனே, மல சலம் கழிக்கும் நிலையிலும் இல்லாத நிலையில் என்னை ஆண்டவன் படைத்துள்ளான். அந்த யானை என்னை சாகடித்து இருக்கலாம். யாரிடம் இதை சொல்லி அழுவது என நினைத்து கவலைப்படுவேன் நீங்க வந்து இருந்து கதைத்து எனது நிலையை அறிந்து போவது எனக்கு மிகப் பெரும் ஆறுதலை தருகிறது. உன்ன என்ட பிள்ளையா நினைத்து ஒரு உதவி கேட்டால் செய்ய முடியுமா என்று என்னிடம் கேட்டார்."
"சொல்லுங்கள் அம்மா" என்று சொல்ல. என்னால் எனது மகள் கஸ்ட்டப்படுவதை சகிக்க முடியவில்லை அவர்களும் அன்றாடம் கூலித் தொழில் செய்து பிழைப்பவள் எனக்கொரு #வீல்செயாருஇருந்தா பெரிய உதவியா இருக்கும்டா மகனே! என்றார்.'
தும்பங்கேணி கொச்சிப்பாம் எனும் குடியேற்ற கிராமத்தில் வாழ்ந்துவரும் இவர்களால், இன்னொரு இடத்துக்கு சென்று வாழ முடியாத வயதாலும் வறுமையாலும் நலிவுற்ற நிலை. இப்பொழுதும் தனது கணவனும் நடக்கமுடியாத வயதை அடைந்து இருவரும் பாதுகாப்பற்ற குடிலில் வாழ்ந்துவருகின்றனா்.
"தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது."விவேகானந்தரின் சிந்தனை்
இங்கும் அங்கும்...
இது கிழக்கு
அது வடக்கு
இங்கு மீன் மகள்
அங்கு யாழ் தேவி
இங்கு தென்மோடி
அங்கு வடமோடி
இங்கு தென்னை
அங்கு பனை
இங்கு கல்லடி
அங்கு சங்குப்பிட்டி
இங்கு விபுலாநந்தர் தமிழ்
அங்கு நாவலர் புகழ்
ஆனால்.....
எங்கும் தமிழர்கள் தானேபா
வாழுறோம்..
அழகாய் வைத்துக் கொள்ளுவம்!
எதை எழுதலாம், ம்ம்ம் உலகத்தில் பல மனிதர்கள் பல மாதிரிப்பா. சிலர் சிரிக்கிறத, பேசிறத பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்புறம் நாம பேசமுடியாம இரசிக்க தொடங்கிடுவம்.
சிலபேர் சாப்பிடுறத பாத்துக்கொண்டே இருக்கலாம் சிலபேர் சாப்பிடுறத பாத்தால் 10 நாளைக்கு சாப்பிட முடியாது.
சிறிய சம்பவம் ஒண்ணு,மகாத்மா காந்தி தாகூருடன் இருவருமாக ஒரு நாள் தங்கி இருந்தனராம். அப்போ அவர்கள் இருவரும் வோக்கிங் போக ரெடியானாங்க. இருவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து சிறிது நடந்த பிறகு, தாகூர் சொன்னாராம் ஒரு கணம் நில்லுங்க வந்துடுறன் என திரும்பவும் உள்ளே சென்றார், நேரம் போயிம் தாகூர் வெளியில் வரல்லயாம்.
சிலபேர் சாப்பிடுறத பாத்துக்கொண்டே இருக்கலாம் சிலபேர் சாப்பிடுறத பாத்தால் 10 நாளைக்கு சாப்பிட முடியாது.
சிறிய சம்பவம் ஒண்ணு,மகாத்மா காந்தி தாகூருடன் இருவருமாக ஒரு நாள் தங்கி இருந்தனராம். அப்போ அவர்கள் இருவரும் வோக்கிங் போக ரெடியானாங்க. இருவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து சிறிது நடந்த பிறகு, தாகூர் சொன்னாராம் ஒரு கணம் நில்லுங்க வந்துடுறன் என திரும்பவும் உள்ளே சென்றார், நேரம் போயிம் தாகூர் வெளியில் வரல்லயாம்.
மனம் நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான எஜமானன்!!
நம்மை தோற்கடிக்க வந்தவர்களை தோற்கடிப்பது தான் நியாயம். நம்மைப் பற்றி பிறர் இழிவாக சொல்லும்போது அதற்கு துவளாமல் வாடாத மனநிலையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஏன்டா நம்ம என்ன பண்ணினாலும் அதனைக் குறைசொல்ல என ஒரு குறூப் இருக்கும் உலகத்தில.
அவர்கள் சொல்லும் வாசகத்துக்கு வாடினால் அவர்கள் வெற்றிபெற்றுவிடுகிறார்கள் நாம் வாழ் நாள் எல்லாம் வாடி இருக்கவேண்டியதுதான். இது என் வாழ்நாளில் கற்றுக்கொண்ட பாடம்.
ஒவ்வொரு நாளும் மரணச் செய்தி!
வாலிபம் காட்டுமா வாழ்வின் பெறுமதி
வருத்தப் படும் பெற்றோர்கு இதுவா வெகுமதி
பாதையில் பயணம் செய் பறவாயில்லை
போதையில் சென்றால் கிடைக்குமா இறவாநிலை
வருத்தப் படும் பெற்றோர்கு இதுவா வெகுமதி
பாதையில் பயணம் செய் பறவாயில்லை
போதையில் சென்றால் கிடைக்குமா இறவாநிலை
ஒவ்வொரு நாளும் மரணச் செய்தி
இளைஞர்கள் இப்போது இயமன் கைதி
துடிப்புள்ள இளைஞர்கள் எமக்கு இழப்பு
படித்திள்ள போதும் யார்கும் பயன் என்னப்பா
இளைஞர்கள் இப்போது இயமன் கைதி
துடிப்புள்ள இளைஞர்கள் எமக்கு இழப்பு
படித்திள்ள போதும் யார்கும் பயன் என்னப்பா
விதிகளை மதித்து வண்டியை ஓட்டு
வீட்டில் சொல்வதை செயலில் காட்டு
நீ இறப்பதனால் உனக்கில்லை கவலை
தாய் தந்தை தவிக்க பார்பது அவலம்!
வீட்டில் சொல்வதை செயலில் காட்டு
நீ இறப்பதனால் உனக்கில்லை கவலை
தாய் தந்தை தவிக்க பார்பது அவலம்!
02 August 2016
மாமாங்கப் பத்து!
நான் மாமாங்கம் சென்று மனமகிழ்ச்சி கொண்டபோது அவரை நினைந்து பாடிய பத்து பாட்டு என் அப்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ம, மா, மி, மீ என ஒரே எழுதது வரிசையில் 10 பாடல்கள்!
ம
மன்னனே நான் தொழும் கன்னலே- லோக
மாமறையே மகிழ்ந்து ஒளிதரும் மின்னலே
இன்னல்கள் எம்மினம் இழந்திட –வளத்தை
ஈன்றவா மட்டில் வாழ் ஆண்டவா
சுயம்பாக வந்தவா போற்றி- எமக்கு
சுகமள்ளி வழங்கிடும் கணநாதா போற்றி! போற்றி!